62 வேட்பாளர்களின் உறுப்புரிமை எச்சந்தர்ப்பத்திலும் பறிபோகலாம்

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் 62 வேட்பாளர்களின் உறுப்புரிமை எச்சந்தர்ப்பத்திலும் பறிபோகும் ஆபத்தான நிலையிலிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர நேற்று தெரிவித்தார்.

(“62 வேட்பாளர்களின் உறுப்புரிமை எச்சந்தர்ப்பத்திலும் பறிபோகலாம்” தொடர்ந்து வாசிக்க…)

உள்ளுராட்சி தேர்தல்

நிறைவடைந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்களிப்பில், 70 சதவீதம் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. நிறைவடைந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பின் போது தேர்தல் சட்டத்திட்டங்களை மீறினர் என்றக் குற்றச்சாட்டின் பேரில், வேட்பாளர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். தேர்தலுக்கான வாக்களிப்பின் போது தேர்தல் சட்டத்திட்டங்களை மீறினர் என்றக் குற்றச்சாட்டின் பேரில், 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

‘எமது மக்கள் வாக்களிக்கக் கூடாது’

(க.அகரன்)

“எமது மக்கள் வாக்களிக்கக் கூடாது” என வவுனியாவில் சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (09) தெரிவித்துள்ளனர். வவுனியா பிரதான தபாலகத்துக்கு அருகாமையில் 351 ஆவது நாளாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், ‘காணாமல் போனோரை எங்கும் தேடி பார்த்தோம். காணவில்லை’ என ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து விசேட வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், இருநாட்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

(“‘எமது மக்கள் வாக்களிக்கக் கூடாது’” தொடர்ந்து வாசிக்க…)

மரண அறிவித்தல்

திரு பாலச்சந்திரன் சண்முகராஜா
பிறப்பு : 29 சனவரி 1956 — இறப்பு : 6 பெப்ரவரி 2018

யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பாலச்சந்திரன் சண்முகராஜா அவர்கள் 06-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

(“மரண அறிவித்தல்” தொடர்ந்து வாசிக்க…)

உள்ளுராட்சித் தேர்தல் களத்தில் சமூக விரோதிகள்

இத்தேர்தல் களத்தில் பல்வேறு சமூக விரோத சக்திகள் வேட்பாளர்களாகக் களமிறக்கப்பட்டு உள்ளனர். திருடர்கள், சண்டியர்கள், காடைத்தனங்களில் ஈடுபடுவோர், குற்றவாளிகள், பெண்களை இழிவுபடுத்தியோர் என பலதரப்பட்டவர்களும் இத்தேர்தலில் களமிறக்கப்பட்டு உள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தங்கள் கட்சிகளின் சார்பில் பல சமூகவிரோத சக்திகளை தேர்தலில் நிறுத்தி உள்ளனர்.

(“உள்ளுராட்சித் தேர்தல் களத்தில் சமூக விரோதிகள்” தொடர்ந்து வாசிக்க…)

மூத்த ஊடகவியலாளர் கமலா தம்பிராஜா இயற்கை எய்தினார்

அக்கால இலங்கை வானொலி/ தொலைக்காட்சி ரசிகர்களுக்கு மிகப் பரிச்சயமான மூத்த ஊடகவியலாளர் கமலா தம்பிராஜா அவர்கள் தாம் புலம்பெயர்ந்து வாழ்ந்த கனடா, Torontoவில் 2018.02 07 மறைந்த தகவலை  அறிய முடிகிறது! கமலா தம்பிராஜா அவர்கள் இலங்கையில் தொலைக்காட்சியில் முதன்முதலில் தமிழில் செய்திவாசித்தவர் என்ற பெருமைக்குரியவர்! பேராதனைப்பல்கலைக்கழகப் பட்டதாரியான அவர் “வீரகேசரி ” பத்திரிகையில் தமது ஊடகப் பணியை ஆரம்பித்துப் பிற்காலத்தில் இலங்கை வானொலியில் சிறிது காலம் தயாரிப்பாளராகவும்,செய்திவாசிப்பாளராகவும் விளங்கினார்! தொடர்ந்து ரூபவாஹினியிலும் இணைந்து சிறுவர் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் பிரபலம் பெற்றார்!  (“மூத்த ஊடகவியலாளர் கமலா தம்பிராஜா இயற்கை எய்தினார்” தொடர்ந்து வாசிக்க…)

பாலா பாலச்சந்திரன்

பாலா என அ‌றியப்பட்ட சண்முகராஜா பாலச்சந்திரன் இன்று தனது 62ஆவது வயதில் ரொறன்ரோவில் காலமானார். ஒரு மேடை பாடகராகவும் ஒலிபரப்பாளராகவும் ரொறன‌்ரோவில் செயல்பட்டு வந்தவர் சண்முகராஜா பாலச்சந்திரன். அவருக்கு எமது அஞ்சலி. அவரது குடும்பத்தினருக்கு அனுதாபங்கள்

மக்களோடு மக்களாய் தமிழர் சமூக ஜனநாயக கட்சியினர்

ஒவ்வொரு கிராமத்தின் அபிவிருத்திக்குமாக ஒதுக்கப்பட்ட 10 இலட்சம் ரூபா நிதியில் விளம்பரப் பலகையில் மட்டுமே செய்து முடிக்கப்பட்ட எங்கள் ஊர் குளம்(சாவகச்சேரி), வாய்க்கால் புனரமைப்பு

மக்களோடு மக்களாய் தமிழர் சமூக ஜனநாயக கட்சியினர்

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியினால்
05-02-2018 அன்று திருகோணமலை பெரிய முற்றவெளியில் நடாத்தப்பட்ட திருகோணமலை நகரசபை வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டத்தின்போது…

நேர்மையான இடதுசாரிகளுக்கு வாக்களியுங்கள் அல்லது வாக்களிக்காது இருங்கள்

– இலங்கை கொம்யூனிஸ்டஸ்ட் ஐக்கிய கேந்திரம்

பெரிய சிங்கள முதலாளித்துவ அரசியல் கட்சிகளையும், அவற்றின் முகவர்களாக நின்று சிறிய கட்சியாக சுயேட்சையாக உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களையும்,  மற்றும் தமிழ், முஸ்லிம் முதலாளித்துவ கட்சி வேட்பாளர்களையும் நிராகரித்து, சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளடக்கிய சாதாரண மக்களின் அரசியல் அதிகாரத்தை கட்டி எழுப்பும் இலக்கை கொண்ட நேர்மையான இடதுசாரி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் அவ்வாறு எவரும் இல்லாதவிடத்து வாக்களிப்பதிலிருந்து விலகி இருங்கள்.

(“நேர்மையான இடதுசாரிகளுக்கு வாக்களியுங்கள் அல்லது வாக்களிக்காது இருங்கள்” தொடர்ந்து வாசிக்க…)