‘இனப்பிரச்சினைக்கு தீர்வு கிட்டாமைக்கு பேரினவாத தேசியக் கட்சிகளே முட்டுக்கட்டை’

‘நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள இனப்பிரச்சினை தொடர்பில், தந்தை செல்வா முதல் சம்பந்தன் ஐயா வரை அனைவரும் பேச்சுவார்தைகளில் ஈடுபட்ட போதிலும், இதுவரை இறுதி முடிவு கிடைக்காமைக்கு, பேரினவாத தேசிய கட்சிகளே காரணம்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

(“‘இனப்பிரச்சினைக்கு தீர்வு கிட்டாமைக்கு பேரினவாத தேசியக் கட்சிகளே முட்டுக்கட்டை’” தொடர்ந்து வாசிக்க…)

‘இல்லாததையும் பொல்லாததையும் எழுதுகின்றார்’

“சூழ்நிலையைத் தவறவிடாது, தமிழினம் தழைக்க ஒன்றிணைந்து செயற்படுவோம் என்றே எனது அறிக்கை அமைந்திருந்தது. ஆனால், அவரோ இல்லாததையும் பொல்லாததையும் எழுதுகின்றார்” என, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார். வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வெளியிட்டிருக்கின்ற அறிக்கை தொடர்பில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

(“‘இல்லாததையும் பொல்லாததையும் எழுதுகின்றார்’” தொடர்ந்து வாசிக்க…)

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் 260 முறைப்பாடுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இதுவரை 260 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் சட்ட விதிமுறைகள் தொடர்பில் சுமார் 245 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

(“உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் 260 முறைப்பாடுகள்” தொடர்ந்து வாசிக்க…)

ஈரான் போராட்டங்களுக்கு அமெரிக்காவால் சிக்கல்

ஈரானில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுவரும் போராட்டங்கள், தொடர்ந்தும் இடம்பெற்றுவரும் நிலையில், அப்போராட்டங்களுக்கு எதிராகவும், அரசாங்கத்துக்கு ஆதரவாகவும் இடம்பெறும் போராட்டங்கள் அதிகரித்திருப்பதோடு, போராட்டங்களுக்கான எதிர்ப்பும் அதிகரிப்பது போன்ற பார்வை ஏற்பட்டுள்ளது.

(“ஈரான் போராட்டங்களுக்கு அமெரிக்காவால் சிக்கல்” தொடர்ந்து வாசிக்க…)

பஸ் நிலைய விவகாரம்: ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

வவுனியாவில் 195 மில்லியன் ரூபாய் பெறுமதியில் அமைக்கப்பட்ட புதிய பஸ் நிலையத்தில் இருந்து தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்களை, சேவைகளை முன்னெடுக்குமாறு, வட மாகாண முதலமைச்சர் உத்திரவிட்டமையைக் கண்டித்து, வட மாகாண இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள், இன்று (01) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

(“பஸ் நிலைய விவகாரம்: ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கின் மரணங்களுக்கு அமானுசிய சக்தி காரணமல்ல

கடந்த மூன்று மாதக் காலப்பகுதியில், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் இடம்பெற்ற பொதுமக்களின் மரணச் சம்பவங்களுக்கு, அமானுசிய சக்திகள் காரணமல்லவென அறிவித்துள்ள சுகாதார அமைச்சு, அம்மாகாணத்தில் பரவி வரும் நோயொன்று காரணமாகவே, இம்மரணங்கள் சம்பவித்துள்ளன என்றும் தெரிவித்துள்ளது.

(“வடக்கின் மரணங்களுக்கு அமானுசிய சக்தி காரணமல்ல” தொடர்ந்து வாசிக்க…)

மக்களின் முகங்களைமுன் நிறுத்துவோம்! – தமிழர் சமூக ஜனநாயககட்சி(SDPT)

 

எதிர் வரும் உள்ளுராட்சி தேர்தலில் சுடரும் மெழுகுதிரிச்சின்னத்தில்மட்டுநகர் மாநகரசபை- மட்டுநகர் மண்முனைமேற்குபிரதேச சபை-திருமலைநகர சபை -திருமலைபட்டினமும் சூழலும் பிரதேச சபை -சாவகச்சேரிநகர சபை-சாவகச்சேரிபிரதேச சபை-ஆகிய6 இடங்களில் தமிழர் சமூக ஜனநாயககட்சிபோட்டியிடுகிறது.

(“மக்களின் முகங்களைமுன் நிறுத்துவோம்! – தமிழர் சமூக ஜனநாயககட்சி(SDPT)” தொடர்ந்து வாசிக்க…)

அறிவித்தார் ரஜினி

இரண்டு தசாப்தகால ஊகத்துக்குப் பின்னர், சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த், தன்னுடைய அரசியல் பிரவேசத்தை இன்று அறிவித்துள்ளார். புதியதொரு கட்சியை ஆரம்பித்து, தமிழ்நாட்டில் அடுத்துவரவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக அவர் அறிவித்தார்.