தமிழ் தலைவர்கள் முன்னிலையில் வெளிநாட்டு தூதரகத்தால் ஹக்கீமுக்கு ரொக்க பணம் வழங்கப்பட்டதாக பரபரப்பு தகவல்!

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகம் ஒன்றால் முக்கியமான தமிழ் தலைவர்கள் இருவர் முன்னிலையில் வைத்து கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது பல கோடி ரூபாய் ரொக்க பணம் வழங்கப்பட்டு உள்ளதாக அறிந்து உள்ளார் என்று கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஜவாத் தெரிவித்து உள்ளார்.

(“தமிழ் தலைவர்கள் முன்னிலையில் வெளிநாட்டு தூதரகத்தால் ஹக்கீமுக்கு ரொக்க பணம் வழங்கப்பட்டதாக பரபரப்பு தகவல்!” தொடர்ந்து வாசிக்க…)

1985 திம்புகோட்பாடு 2017 இல் இன்றைய தமிழ்த் தலைமைியனால் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. – சந்திரகுமார்

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காக போராடிய இயக்கங்கள் 1985 ஆம் ஆண்டு திம்புவில் தமிழர் தேசியம், தமிழர் தாயகம், தன்னாட்சி உரிமை அடிப்படையிலான கோட்பாடுகளை கொண்ட திம்பு கோட்டுபாடு 2017 இல் தமிழ் மக்களின் இன்றையத் தலைமையினால் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார். (“1985 திம்புகோட்பாடு 2017 இல் இன்றைய தமிழ்த் தலைமைியனால் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. – சந்திரகுமார்” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கை தேயிலை மீதான ரஷ்யாவின் தடை நீக்கம்

இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தேயிலை உள்ளிட்ட விவசாய உற்பத்தி பொருட்கள் மீது ரஷ்ய அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட தடை நீக்கப்படவுள்ளதாக, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தர். அண்மையில் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலை பொதிகள் அடங்கிய கொள்கலனில் வண்டு ஒன்று காணப்பட்டதாக தெரிவித்து, இலங்கையின் தேயிலை உள்ளிட்ட விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு, ரஷ்யா தடை விதிப்பதாக அறிவித்திருந்தது.

(“இலங்கை தேயிலை மீதான ரஷ்யாவின் தடை நீக்கம்” தொடர்ந்து வாசிக்க…)

மாவையின் மகன் தேர்தலில் குதிக்கிறார்?

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜாவின் மகன் கலையமுதன் களமிறங்கவுள்ளதாக, தமிழரசுக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த காலத்தில் இந்தியாவில் தங்கி இருந்து கல்விக் கற்று வந்த கலையமுதன், தற்போது நாடு திரும்பியுள்ளார். இந்நிலையிலேயே, உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் அவர் களமிறங்கவுள்ளதாக, தமிழரசுக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 79 வேட்புமனுக்கள் ஏற்பு, இரண்டு நிராகரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாவது தொகுதியான 8 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கோரலில் 81 வேட்புமனுக்கள் கிடைக்கப்பெற்று அவற்றில் 79 ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன், இரண்டு நிராகரிக்கப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான மாணிக்கம் உதயகுமார், இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2.20 மணியளவில் தெரிவித்தார். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டமை குறித்து அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.

(“மட்டக்களப்பு மாவட்டத்தில் 79 வேட்புமனுக்கள் ஏற்பு, இரண்டு நிராகரிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

யாழ்- போதனா வைத்தியசாலையில் இதய சத்திரசிகிச்சை வெற்றி

யாழ்-போதனா வைத்தியசாலையில் நேற்றும் (20) இன்றும் (21) வெற்றிகரமாக திறந்த இதய மாற்று அறுவைச் சிகிச்சை ஒன்று நடைபெற்றுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர். எம்.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். விசேட வைத்தியகுழுவினால் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ் வைத்தியசாலையில் கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் பல இதய சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், மிக அண்மையில் வெற்றிகரமாக செய்யப்பட்ட சத்திரசிகிச்சை இதுவென்று அவர் மேலும் குறிப்பிட்டள்ளார். வவுனியாவைச் சேர்ந்த 27 வயதான ஒருவருக்கு நேற்றைய தினமும், இன்றும் திறந்த இதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், குறித்த நபர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் தெரிவித்தார். இதேவேளை இந்த வெற்றிகரமான அறுவை சிகிச்சையை முன்னெடுத்த வைத்தியகுழுவுக்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தலைவர் கருணாநிதி கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்: ஸ்டாலின் பேட்டி

2ஜி அலைக்கற்றை வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டது குறித்து தலைவர் கருணாநிதியிடம் கூறியதும் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். 2ஜி அலைக்கற்றை வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்துசென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

(“தலைவர் கருணாநிதி கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்: ஸ்டாலின் பேட்டி” தொடர்ந்து வாசிக்க…)

வட்டமடு விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்

அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வட்டமடு விவசாயிகள் முன்னெடுத்து வந்த கவனயீர்ப்புப் போராட்டம், இன்று (20) தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக, வட்டமடு கமக்காரர் அமைப்பின் தலைவர் எம்.ஐ. அப்துல் றஸீட் தெரிவித்தார்.

(“வட்டமடு விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்” தொடர்ந்து வாசிக்க…)

அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட வீடியோ

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட வீடியோவை டிடிவி தினகரன் ஆதரவாளர் எம்.எல்.ஏ., வெற்றிவேல் வெளியிட்டார்.  20 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில் ஜெயலலிதா நைட்டி அணிந்தபடி பழச்சாறு அருந்துவது போல் காட்சிகள் உள்ளன.
வீடியோவை வெளியிட்ட வெற்றிவேலிடம் செய்தியாளர்கள் சரமாரி கேள்விகளை எழுப்பினர். (“அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட வீடியோ” தொடர்ந்து வாசிக்க…)