Category: செய்திகள்
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் 16ஆம் திகதி பொறுப்பேற்பு
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி வரும் 16ஆம் திகதி பொறுப்பேற்கிறார். கட்சித் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான அறிவிப்பு நேற்று அதிகாரபூர்வமாக வெளியாகியது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த 17 ஆண்டுகளாக அப்பதவியில் உள்ளார். சமீபகாலமாக அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து கட்சியின் துணைத் தலைவராக இருந்துவரும் ராகுல் காந்தியை தலைவராக்க வேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
(“காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் 16ஆம் திகதி பொறுப்பேற்பு” தொடர்ந்து வாசிக்க…)
அம்பாறையில் 71 வேட்புமனுக்களில் 08 மனுக்கள் நிராகரிப்பு
அம்பாறை மாவட்டத்தில் ஏற்கவே அறிவிக்கப்பட்ட 12 உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடவென அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழு சார்பாக 71 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றில் 08 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதுடன், 63 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அம்பாறை மாவட்ட செயலாளரும், மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான துசித பீ. வணிகசிங்க தெரிவித்தார். இதன்போது 06 கட்சிகளினதும், 02 சுயேச்சைக்குழுக்கள் ஆகியவற்றின் வேட்புமனுக்களே இவ்வாறு நிராகரிக்கப்பட்டன.
(“அம்பாறையில் 71 வேட்புமனுக்களில் 08 மனுக்கள் நிராகரிப்பு” தொடர்ந்து வாசிக்க…)
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் இருந்து புளொட் ஒதுங்கும்?
தேர்தல் ஆசனப் பங்கீடுகள் தொடர்பில் இணக்கம் காணப்பட்ட விடயங்களில், இலங்கைத் தமிழரசுக் கட்சி தன்னிச்சையாகச் செயற்படுவது தொடர்பில் கடும் அதிருப்தியடைந்துள்ள புளொட் அமைப்பு, தேர்தலில் இருந்தே ஒதுங்குவது குறித்தும் பரிசீலித்து வருவதாகத் தெரியவருகின்றது. இதேவேளை, கூட்டமைப்பில் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளை மீறி, தமிழரசுக் கட்சி தொடர்ந்தும் தன்னிச்சையாகச் செயற்பட்டு வருவதால், இத்தேர்தலில் இருந்தே ஒதுங்கியிருக்கும் நிலையை எடுக்க வேண்டும் என, கட்சியின் உயர் மட்டத்தினர் கட்சித் தலைமைக்கு கடும் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் அறியமுடிகிறது.
ஆலையடிவேம்பு, சம்மாந்துறை பிரதேச சபைகளுக்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு!
அம்பாறை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச சபை, சம்மாந்துறை பிரதேச சபை ஆகியவற்றுக்கு போட்டியிட தமிழ் தேசிய கூட்டமைப்பால் தாக்கல் செய்யப்பட்ட வேட்பாளர் மனுக்கள் நேற்று வியாழக்கிழமை நிராகரிக்கப்பட்டன.
தமிழர் சமூக ஜனநாயக கட்சிஏன் தனித்து போட்டியிடுகிறது தெரியுமா?
வரதர் கொடுத்த 50 பேர் கொண்ட லிஸ்ற்… தொலைபேசியையே தூக்காத மாவை!
தமிழர் சமூக ஜனநாயக கட்சி(ஈ.பி.ஆர்.எல்.எவ்- பத்மநாபா அணி) தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் நுழைந்து விட்டது, அவர்களிற்கு முப்பது வேட்பாளர்கள் வழங்கப்படலாம் என ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த செய்தியை படித்தவர்கள் நேற்று முன்தினம் நடந்த சம்பவத்தை பார்த்து குழப்பமடைந்திருப்பார்கள். சாவகச்சேரி நகரசபைக்கு தமிழர் சமூக ஜனநாயக கட்சி தனித்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தது. நாம் வெளியிட்ட செய்திக்கு மாறாக நடந்த இந்த சம்பவம் பலரை குழப்பமடைய வைத்திருக்கும்.
(“தமிழர் சமூக ஜனநாயக கட்சிஏன் தனித்து போட்டியிடுகிறது தெரியுமா?” தொடர்ந்து வாசிக்க…)
‘யாழ்., கிளியில் கை சின்னத்தில் போட்டியிடுவோம்’
“ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பொறுத்த வரையில், வேறு பகுதியில் ஒவ்வொரு கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றது. ஆனாலும் யாழ். மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனித்து வெற்றிலைச் சின்னம் இல்லாமல் கை சின்னத்தில் போட்டியிடும்” என்று, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
(“‘யாழ்., கிளியில் கை சின்னத்தில் போட்டியிடுவோம்’” தொடர்ந்து வாசிக்க…)
‘8 மாவட்டங்களிலும் இணைந்து போட்டியிடவுள்ளோம்’
(“‘8 மாவட்டங்களிலும் இணைந்து போட்டியிடவுள்ளோம்’” தொடர்ந்து வாசிக்க…)
‘புதிய கூட்டணியில் வந்து இணையுங்கள்’
‘கூட்டமைப்பு பலமான கட்சியாக பரிமாணிக்க வேண்டும்’
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமான அரசியல் கட்சியாக பரிமாணிக்க வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு” என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்டு உள்ள பிளவு நிலை தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன என, நேற்று (08) ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கே, அவர் அவ்வாறு பதிலளித்தார்.
(“‘கூட்டமைப்பு பலமான கட்சியாக பரிமாணிக்க வேண்டும்’” தொடர்ந்து வாசிக்க…)