பிரிவடையாது கூட்டமைப்பு நிலைக்கும்?

தமிழரசுக் கட்சியும் டெலோவும் முதற்கட்டமாக இணக்கம்உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஆசன ஒதுக்கீடு தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆகியவற்றுக்கிடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் காரணமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிளவுபடலாம் என்று கருதப்பட்ட போதிலும், அப்பிரச்சினைகள் தீர்வதற்கான முதற்கட்ட சமிக்ஞைகள் தென்பட்டுள்ளன. (“பிரிவடையாது கூட்டமைப்பு நிலைக்கும்?” தொடர்ந்து வாசிக்க…)

ஆசனப்பங்கீடு விவகாரம்;செல்வம் சுமந்திரன் அவசரசந்திப்பில் முன்னேற்றம்

தமிழரசுக்கட்சிக்கும் ரெலோவிற்கும் இடையிலான ஆசனப்பங்கீடு குறித்த விடயங்க தொடர்பிலான பேச்சுவார்த்தை முன்னேற்றம் கண்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்­த­னுக்கும், ரெலோ தலை­வரும் பாரா­ளு­மன்ற குழுக்­களின் பிரதி தலை­வ­ரு­மான செல்வம் அடைக்­க­ல­நாதன் எம்.பி ஆகி­யோ­ருக்கு இடை­யி­லான சந்­திப்பு 06-12-2017நடை­பெ­று­வ­தாக இருந்­த­போதும் ஏற்­க­னவே நிகழ்ச்சி நிர­லி­டப்­பட்­டதன் பிர­காரம் சம்­பந்தன் திரு­கோ­ண­ம­லைக்கு செல்ல வேண்­டி­யேற்­பட்­டதன் கார­ண­மாக குறித்த சந்­திப்பு எதிர்­வரும் 9ஆம் திக­திக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது.

(“ஆசனப்பங்கீடு விவகாரம்;செல்வம் சுமந்திரன் அவசரசந்திப்பில் முன்னேற்றம்” தொடர்ந்து வாசிக்க…)

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை மீண்டும் செயற்படுத்த நடவடிக்கை

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை மறுசீரமைப்புச் செய்து, மீண்டும் செயற்படுத்த அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. யுத்தத்தால் மோசமாகச் செயலிழந்த யாழ்ப்பாணம், வலிகாமம் பிரதேசத்தில் அமைந்துள்ள மயிலிட்டி மீன்பிடித் துறைமுகமும் அதனுடன் தொடர்புபட்ட 54 ஏக்கர் காணியும், மீன்பிடி நடவடிக்கைகளுக்காக இவ்வருடம் விடுவிக்கப்பட்டது.

(“மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை மீண்டும் செயற்படுத்த நடவடிக்கை” தொடர்ந்து வாசிக்க…)

அமெரிக்காவின் தூதுவராலயம் ஜெருசலேமில்

இஸ்ரேலின் தலைநகரமாக ஜெரு​சலேமை உத்தியோகப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதாகவும், அமெரிக்க தூதுவராலயத்தை ஜெருசலேமிற்கு மாற்றவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் காரணமாக வளைகுடா நாடுகள் புதிய நெருக்கடியினைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரம்பின் இந்த முடிவினால் மத்திய வளைகுடா நாடுகளின் ஒற்றுமைக்கு தடை ஏற்படும் என்றும்,இதனால் வளைகுடா நாடுகளில் பிரச்சினைகள் ஏற்படலாம் என்றும் அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் தற்போது டெல் அவிவ் நகரில் அமைந்துள்ள அமெரிக்க தூதுவராலயத்தை ஜெருசலேமிற்கு மாற்றும் நடவடிக்கை இன்னும் 6 மாதங்களில் முன்னெடுக்கப்படும் என்றும்,தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழரசு கட்சி கங்கணம்

“மிக பிழையான அரசியலமைப்பு இடைக்கால அறிக்கையை, மக்கள் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள் என உள்ளூராட்சிசபைத் தேர்தல் வெற்றியின் ஊடாக காட்டுவதற்கு தமிழரசு கட்சி முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றது” என்று ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

(“தமிழரசு கட்சி கங்கணம்” தொடர்ந்து வாசிக்க…)

எந்த ஈஸ்வரனாக இருந்தாலும் சரி காரைதீவு மக்களின்     ஏகோபித்த தீர்மானத்துக்கு எதிராக செயற்பட முடியாது!

எந்த ஈஸ்வரனாக இருந்தாலும் சரி, காரைதீவு பிரதேசத்தை சேர்ந்த ஒட்டுமொத்த மக்களின் ஏகோபித்த தீர்மானத்துக்கு எதிராக செயற்படுவதை அனுமதிக்கவே முடியாது என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான செல்லையா இராசையா தெரிவித்தார்.

(“எந்த ஈஸ்வரனாக இருந்தாலும் சரி காரைதீவு மக்களின்     ஏகோபித்த தீர்மானத்துக்கு எதிராக செயற்பட முடியாது!” தொடர்ந்து வாசிக்க…)

இயற்கை அனர்த்தங்களினால் பாரிய பாதிப்பு

நாடளாவிய ரீதியில் நேற்றிவு முதல் நிலவிய மோசமான வானிலையால் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மரங்கள் முறிந்து விழுந்தமையால் இதுவரையில் இருவர் பலியாகியுள்ளனர். வள்ளம் கவிழ்ந்ததில் ஒருவர் பலியாகியுள்ளார். இதேவேளை, இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட 15 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

(“இயற்கை அனர்த்தங்களினால் பாரிய பாதிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

அவசர சிகிச்சைப் பிரிவில் சிவசக்தி ஆனந்தன்

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், கொழுப்பு சத்து கூடியதன் காரணமாக, வவுனியா பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (29) மாலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, வவுனியா பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதே, அவர் உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் சிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சமூகத்துக்கும், நாட்டுக்கும் பயன்பட கூடிய சிறந்த தலைவர்களை தெரிவு செய்யுங்கள்!

– தேசிய காங்கிரஸ் மகளிர் தலைவியின் மீலாத் வாழ்த்து
ஒரு பூரண மனிதனுக்கு உரித்தான அனைத்து ஆளுமைகளும் ஒருங்கு சேர வாய்க்க பெற்றவராக விளங்கிய இறை தூதர் நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் அனைத்து துறைகளிலும் உலகம் தழுவிய மானிட சமுதாயத்துக்கு முன்னுதாரண புருஷராக உள்ளார் என்று மீலாத் வாழ்த்து செய்தியில் தேசிய காங்கிரஸ் கட்சியின் மகளிர் பொறுப்பாளரும், வட மாகாண அமைப்பாளருமான ஜான்சிராணி சலீம் தெரிவித்து உள்ளார்.

இவருடைய வாழ்த்து செய்தி வருமாறு:-
நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் நல்ல கணவராக, சிறந்த வர்த்தகராக, மாபெரும் வீரராக, உன்னத தலைவராக… என்றெல்லாம் வாழ்ந்து காட்டினார். நாம் எல்லோரும் இவர் காட்டிய பாதையில் நடக்க குறைந்த பட்சம் இந்நன்னாளில் உறுதி பூணல் வேண்டும். இவருடைய பூரணத்துவ ஆளுமைகளில் ஒரு பங்கையேனும் அடைய நாம் சபதம் எடுக்க வேண்டும்.

குறிப்பாக நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்களை போன்ற உன்னத தலைவர்களே எமது நாட்டுக்கும், சமுதாயத்துக்கும் தேவைப்படுகின்றனர். அர்ப்பணிப்பு, பற்றுறுதி, விசுவாசம், நம்பிக்கை, உண்மை, கொள்கை பற்று, இரக்கம் போன்ற மேன்மையான பண்புகள் உன்னத தலைவர் ஒருவரிடம் காணப்பட வேண்டும் என்று நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் அவருடைய உயர்ந்த தலைமைத்துவம் மூலமாக உணர்த்தினார்.

குறிப்பாக சூரியனையும், சந்திரனையும் சேர்த்து பிடித்து அவருடைய கைகளில் தருகின்றபோதிலும் அவர் கொண்டிருக்கின்ற கொள்கையை விடவே மாட்டார் என்று நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் சொல்லிய கொள்கைப் பற்று ஒவ்வொரு அரசியல் தலைவர்களுக்கும் அமைய பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. இவ்வாறான கொள்கை பற்று அவர்களிடம் உள்ளதா? என்று குறைந்த பட்சம் ஒவ்வொரு முஸ்லிம் அரசியல்வாதியும் சுய விமர்சனம் செய்து பார்த்து அவர்களை செப்பனிட வேண்டிய தருணம் இது ஆகும்.
இதே நேரம் எமது சமுதாயத்துக்கும், நாட்டுக்கும் அப்பழுக்கின்றி உழைக்க கூடிய நல்ல உன்னத தலைவர்களை வருங்காலத்தில் எமது மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என்றும் இந்நன்னாளில் கேட்டு கொள்கின்றேன்.

“ஜெயலலிதா தாய்மை அடைந்திருந்தபோது அவசரமாக வரச் சொன்னார்!” – லலிதா

ஜெயலலிதாவுக்கு மகள் பிறந்தது உண்மை என்று பெங்களூருவில் உள்ள அவரின் உறவினர் லலிதா பேசியது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(““ஜெயலலிதா தாய்மை அடைந்திருந்தபோது அவசரமாக வரச் சொன்னார்!” – லலிதா” தொடர்ந்து வாசிக்க…)