‘உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புதிய முறை அறிமுகமாகிறது’

இலங்கை அரசியல் வரலாற்றில் முதன் முதலாக இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில், கட்சிகளில் இருந்து போட்டியிடும் வேட்பாளர்களும் கட்டுப்பணம் கட்டுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார். அகில இலங்கை வை.எம்.எம். ஏ. ​பேரவை மற்றும் யன்ங் ப்ரென்ட்ஸ் அமைப்பு உட்பட சில அமைப்புகள் இனைந்து நடத்திய, புதிய தேர்தல் முறை தொடர்பில் மக்களை அறிவுறுத்தும் நிகழ்வு, கண்டி- மஹியாவையில் அமைந்துள்ள கிரான்ட் வரவேற்பு மண்டபத்தில் நேற்று (26) நடைபெற்றது. இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

(“‘உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புதிய முறை அறிமுகமாகிறது’” தொடர்ந்து வாசிக்க…)

டக்ளஸுக்கு பாவமன்னிப்பு?

(எஸ். நிதர்ஷன்)

“கடந்தகால ஆட்சியாளர்களுடன் இணைந்து தேன்நிலவு கொண்டாடிய நாடாளுமுன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, தற்போது பாவமன்னிப்புக் கோரும் நிலையில் உள்ளார். அவருக்கு பாவமன்னிப்புக் கொடுக்க வேண்டுமா, இல்லையா? என்பதை, தமிழ் மக்களே தீர்மானிக்க வேண்டும்” என, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

(“டக்ளஸுக்கு பாவமன்னிப்பு?” தொடர்ந்து வாசிக்க…)

‘சலசலப்புக்கு நாம் அஞ்சோம்’

“பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ( ஈ.பி.ஆர்.எல்.எவ்), சலசலப்புக்கு அஞ்சாது” என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் தமிழரசுக் கட்சியினுடனான கொள்கை முரண்பாடு காரணமாக, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் புதிதாக இணைந்துகொண்ட சிலர் தமிழரசுக் கட்சியால் உள்வாங்கப்பட்டு வரும் நிலையிலேயே, தான் இவ் அறிக்கையை மக்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில் வெளியிடுவதாக அதில் அவர் தெரிவித்துள்ளார்.

(“‘சலசலப்புக்கு நாம் அஞ்சோம்’” தொடர்ந்து வாசிக்க…)

அமெரிக்காவுக்கு எதிராக வடகொரியாவும் கியூபாவும் இணைந்தன

கியூபாவும் வடகொரியாவும் இணைந்து, ஐக்கிய அமெரிக்காவுக்கு எதிரான தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன. ஐ.அமெரிக்காவின் “ஒருதலைப்பட்சமானதும் தன்னிச்சையானதுமான” கோரிக்கைகளை இரு நாடுகளும் நிராகரிக்கின்றன என, கியூப வெளிநாட்டு அமைச்சுத் தெரிவித்தது. கியூபாவின் தலைநகர் ஹவானாவில், இரு நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்களும் சந்தித்துப் பேசினர்.

(“அமெரிக்காவுக்கு எதிராக வடகொரியாவும் கியூபாவும் இணைந்தன” தொடர்ந்து வாசிக்க…)

‘புதிய தேசிய கொடி வேண்டும்’

“இலங்கையின் தேசியக் கொடியை அவமதிக்கவில்லை. மாறாக, அதற்குரிய கௌரவத்தையே அளித்தேன். இந்த விவகாரத்தைக் குறுகிய அரசியல் இலாபங்களுக்காகத் திசை திருப்பி, பூதாகாரப்படுத்தும் நோக்கிலேயே சிலர் ஈடுபட்டு வருகின்றனர் என்று, வடக்கு மாகாண கல்வியமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

(“‘புதிய தேசிய கொடி வேண்டும்’” தொடர்ந்து வாசிக்க…)

இரு பேரினவாத கட்சிகளின் கூட்டு ஆட்சியே நாட்டில் நடக்கின்றது! – ஈரோஸ் ஜனநாயக முன்னணி ஆவேசம்

இரு பேரினாவாத கட்சிகளின் கூட்டு ஆட்சியே நாட்டில் நடக்கின்றது என்று ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகம் இராஜ. இராஜேந்திரா தெரிவித்து உள்ளார்.தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் கல்முனை தலைமை காரியாலயத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார். இவர் இங்கு முக்கியமாக தெரிவித்தவை வருமாறு:-

(“இரு பேரினவாத கட்சிகளின் கூட்டு ஆட்சியே நாட்டில் நடக்கின்றது! – ஈரோஸ் ஜனநாயக முன்னணி ஆவேசம்” தொடர்ந்து வாசிக்க…)

காரைதீவை பொத்துவில் தொகுதியில் இருந்து பிரிப்பதன் மூலம் தமிழர் பிரதிநிதித்துவத்தை சிதைக்க கூட்டு சதி! – செல்லையா இராசையா ஆவேசம்

காரைதீவு பிரதேச மக்களின் விருப்பம், இணக்கம் ஆகியன பெறப்படாமலும், இவர்களின் ஆலோசனை, அபிப்பிராயம், கருத்து ஆகியன செவிமடுக்கப்படாமலும் மாகாண சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய ஆணைக்குழுவால் சம்மாந்துறை தொகுதிக்குள் காரைதீவு பிரதேசம் சேர்க்கப்படுகின்ற நடவடிக்கை முறைகேடானது என்று காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான செல்லையா இராசையா தெரிவித்து உள்ளார்.

(“காரைதீவை பொத்துவில் தொகுதியில் இருந்து பிரிப்பதன் மூலம் தமிழர் பிரதிநிதித்துவத்தை சிதைக்க கூட்டு சதி! – செல்லையா இராசையா ஆவேசம்” தொடர்ந்து வாசிக்க…)

பிரதமரின் இந்திய விஜயத்துக்குப் பின்னர் அதிரடி மாற்றம்?

சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயர்பதவி நிலைகளில், முழுமையான மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்கு, அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அரசாங்கத் தரப்பினரும் ஆளும் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ச்சியாக விடுத்த கோரிக்கைகளுக்கு அமைவாக​வே அரசாங்கம், இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.

(“பிரதமரின் இந்திய விஜயத்துக்குப் பின்னர் அதிரடி மாற்றம்?” தொடர்ந்து வாசிக்க…)

ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினரை தமிழரசுக் கட்சி தன்வசம் இழுத்தது?

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈபிஆர்எல்எப்​) முல்லைத்தீவு மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், தமிழரசுக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளார். தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா முன்னிலையில், நேற்று (19) அவர் அக்கட்சியில் இணைந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

(“ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினரை தமிழரசுக் கட்சி தன்வசம் இழுத்தது?” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு, கிழக்குக்கு வெளியேயும், உள்ளேயும் வாழ்கின்ற முஸ்லிம்கள் பொறுமையாக நடக்க வேண்டிய தருணம்!

– ஜான்சிராணி சலீம் அறிக்கை –
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியேயும், உள்ளேயும் வாழ்கின்ற முஸ்லிம்கள் பொறுமையாகவும், நிதானமாகவும் நடந்து கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் இதுவாகும் என்று தேசிய காங்கிரஸின் வட மாகாண அமைப்பாளரும், மகளிர் பொறுப்பாளருமாகிய ஜான்சிராணி சலீம் வெளியிட்டு உள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியேயும், உள்ளேயும் முஸ்லிம்கள் மீது வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டு இருப்பது தொடர்பாக இவர் விடுத்து உள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.

(“வடக்கு, கிழக்குக்கு வெளியேயும், உள்ளேயும் வாழ்கின்ற முஸ்லிம்கள் பொறுமையாக நடக்க வேண்டிய தருணம்!” தொடர்ந்து வாசிக்க…)