ஆசிரிய உதவியாளர்களை ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்ப்பு செய்ய வேண்டும் என மனித உரிமை ஆணைக்குழுவிற்கு செய்யப்பட்ட முறைப்பாட்டின் மூன்றாம் கட்ட விசாரணை

– மக்கள் ஆசிரியர் சங்கம்

மக்கள் ஆசிரியர் சங்கம் ஆசிரிய உதவியாளர்களை இலங்கை ஆசிரியர் சேவை தரம் 3 வகுப்பு ஐஐற்கு தகுதியானவர்கள் எனவும் அவர்களை ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்ப்பு செய்ய வேண்டும் எனவும் பரிந்துரை செய்யுமாறு கோரி 2015.07.23ம் திகதி இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்து திருந்தது. இதன் மூன்றாவது விசாரணை இம்மாதம் 29ம் திகதி புதன் கிழமை நடைபெற உள்ளதாக மக்கள் ஆசிரியர் சங்க செயலாளர் நெல்சன் மோகன்ராஜ் குறிப்பிட்டுள்ளார்.

(“ஆசிரிய உதவியாளர்களை ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்ப்பு செய்ய வேண்டும் என மனித உரிமை ஆணைக்குழுவிற்கு செய்யப்பட்ட முறைப்பாட்டின் மூன்றாம் கட்ட விசாரணை” தொடர்ந்து வாசிக்க…)

19/11/2017 ஆகிய இன்று தோழமை தினம்

திருகோணமலை தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி காரியாலயத்தில் தோழர் பத்மநாபாவின் 66வது பிறந்த தின அனுஷ்டிப்பு நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு, தோழர் நாபாவின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து கட்சி செயலாளரான சத்தியன் மற்றும் கட்சி உறுப்பினர்களான சந்திரன், விபு ஆகியோரின் உரையைத் தொடர்ந்து மதியவேளைக்கான உணவும் வழங்கப்பட்டது.

‘சர்வேஸ்வரனின் மனோநிலையைப் புரிந்துகொள்ள வேண்டும்’

“என்னைப் பொறுத்தவரையில் தேசியக் கொடியையும் தேசிய கீதத்தையும் புறக்கணிப்பது எமது மக்கள் யாவரையும் புறக்கணிப்பது போலாகும்” என, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.   மேலும், முதலில் தேசியக் கொடியை நிராகரித்தவரின் மனோநிலையைப் புரிந்து கொள்ள வேண்டும்” எனவும் குறிப்பிட்டார்.   வட மாகாண கல்வி அமைச்சர் தேசியக் கொடியை ஏற்ற மறுத்தமை பற்றி உங்கள் கருத்து என்ன? வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

(“‘சர்வேஸ்வரனின் மனோநிலையைப் புரிந்துகொள்ள வேண்டும்’” தொடர்ந்து வாசிக்க…)

‘தேசியக்கொடியை ஏந்திய சம்பந்தனுக்குக் காட்டிய நல்லெண்ணம் என்ன?’

தேசிய கொடியை தூக்க மறுத்த வடமாகாணசபை அமைச்சரை கண்டிப்போம். ஆனால், இன்று இந்த அமைச்சர் தேசிய கொடியை தூக்கவில்லை என்பதில் குறை காணும் தென்னிலங்கை தீவிரவாதிகள், அன்று தேசியக்கொடியை தூக்கிய சம்பந்தனுக்கு காட்டிய நல்லெண்ணம் என்ன என்று” ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் வினவியுள்ளார்.

(“‘தேசியக்கொடியை ஏந்திய சம்பந்தனுக்குக் காட்டிய நல்லெண்ணம் என்ன?’” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கையின் புதிய வரவு செலவுத் திட்டம்

நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவு திட்டம் கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் சமரப்பிக்கப்பட்டது.இதனை நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் சமர்பித்தார். 30 வருட கால யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு முழுஅளவில் முக்கியத்துவம் வழங்கும் வகையில் இந்த வரவு செலவு திட்டத்தில் முன்மொழிவுகள் இடம்பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.

(“இலங்கையின் புதிய வரவு செலவுத் திட்டம்” தொடர்ந்து வாசிக்க…)

பிரபாகரனுக்கு நிகரானவர் சம்பந்தனே ! – இராஜாங்க அமைச்சர் விஜயகலா

கட்சிகளை உடைக்காது 2020 இற்குள் தீர்வினைப் பெறுவதற்கான செயற்பாட்டினை அவர் முன்னெடுக்க வேண்டுமென இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து சில கட்சிகள் வெளியேறி மாற்றுக்கட்சியினை உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளனர். மாற்றுக்கட்சி உருவாகுவதை ஏற்றுக்கொள்கின்றீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டபோது பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதற்குரிய மரணச்சான்றிதழ் கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை.

(“பிரபாகரனுக்கு நிகரானவர் சம்பந்தனே ! – இராஜாங்க அமைச்சர் விஜயகலா” தொடர்ந்து வாசிக்க…)

‘அதிகார பகிர்வு புலிக்கு அல்ல’

“அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது விடுதலைப் புலிகளுக்கு எனச் சிலர் நினைக்கின்றார்கள். அல்லது தமிழர்களுக்கு மாத்திரம் அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுக்கப்போவதாக நினைக்கின்றார்கள். அனைத்து மாகாணங்களுக்கும் சமமான வகையிலான அதிகாரங்களை வழங்குவதற்கே, நாம் யோசனைகளை முன்வைத்திருக்கிறோம்” என கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர, நேற்று (08) தெரிவித்தார்.

(“‘அதிகார பகிர்வு புலிக்கு அல்ல’” தொடர்ந்து வாசிக்க…)

வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

வேலையற்ற பட்டதாரிகளுக்குரிய நியமனங்களை வழங்குமாறு வலியுறுத்தி, வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தால் நாளை மறுதினம் (15) காலை 9 மணிக்கு, யாழ். மாவட்ட செயலகம் முன்னால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

(“வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்” தொடர்ந்து வாசிக்க…)

யாழில் வாள்வெட்டு: ஸ்தலத்துக்குச் செல்ல பொலிஸார் தாமதம்?

யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில், நேற்று (12) இரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில், இளம் குடும்பஸ்தர் உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குருநகர், உத்தரிய மாதா ஆலயச் சந்தியிலுள்ள சலவைத் தொழிலகமொன்றுக்கு அந்த பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரொருவர் சென்றுள்ளார். இதன்போது, அந்தக் குடும்பஸ்தரைப் பின்தொடர்ந்துச் சென்ற சிலர், அவரை வாளால் வெட்டியுள்ளதுடன், சலவைத் தொழிலக உரிமையாளரையும் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

(“யாழில் வாள்வெட்டு: ஸ்தலத்துக்குச் செல்ல பொலிஸார் தாமதம்?” தொடர்ந்து வாசிக்க…)