வீட்டில் முறைகேடாக நடந்துகொண்ட யுவதியும் 7 மாணவர்களும் கைது

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு, தாண்டவன்வெளி பகுதியிலுள்ள வீடொன்றில் முறைகேடாக நடந்துகொண்ட குற்றச்சாட்டில், 27 வயது யுவதியொருவரும் க.பொ.த உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் 7 பேரும், இன்று (13) பிற்பகல் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தாண்டவெளி, பாரதீ வீதி, இரண்டாம் குறுக்கு தெருவிலுள்ள குறித்த வீட்டில், மாணவர் குழுக்களின் அட்டகாசம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக, மட்டக்களப்பு தலைமையப் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், அவ்வீட்டைத் திடீரென முற்றுகையிட்டபோதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

(“வீட்டில் முறைகேடாக நடந்துகொண்ட யுவதியும் 7 மாணவர்களும் கைது” தொடர்ந்து வாசிக்க…)

இறுதிக் கோட்டையும் சிரிய அரசாங்கத்திடம்’

லெபனானின் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவால் தலைமை தாங்கப்பட்ட, சிரிய இராணுவமும் அதன் தோழமை நாடுகளும், சிரியாவிலுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் இறுதிக் கோட்டையையும், நேற்று முன்தினம் (08) கைப்பற்றியுள்ளன என, அக்கூட்டணியின் தளபதியொருவர் தெரிவித்தார். இதன்மூலம், ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவின் ஆட்சி, சிரியா முழுவதிலும் வீழ்த்தப்படும் நிலை உருவாகியுள்ளது.

(“இறுதிக் கோட்டையும் சிரிய அரசாங்கத்திடம்’” தொடர்ந்து வாசிக்க…)

பருத்தித்துறை கலவரம்: மேலும் இருவர் கைது

விசேட அதிரடிப்படையினரின் வாகனத்துக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில், நேற்று முன்தினம் (12) மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். கைதான இருவரும், துன்னாலை – வேம்படி பகுதியைச் சேர்ந்தவர்கள் என, பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (12) முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் ரோந்து நடவடிக்கையின் போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

(“பருத்தித்துறை கலவரம்: மேலும் இருவர் கைது” தொடர்ந்து வாசிக்க…)

‘பலாலி காணிகள் கிடைக்கும்’…????

பலாலி பகுதியில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரின் ஆயுதங்களை வேறு இடங்களுக்கு மாற்றிய பின்னர், பொதுமக்களின் காணிகள், அவர்களிடம் மீளக் கையளிக்கப்படும்” என, மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

(“‘பலாலி காணிகள் கிடைக்கும்’…????” தொடர்ந்து வாசிக்க…)

யாழில் கனமழை ; 9 ஆயிரம் பேர் பாதிப்பு

யாழில் தொடரும் கனமழையால் 9 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளாதாக, யாழ்.மாவட்ட அரச அதிபர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, இதுவரையில் 2,518 குடும்பங்களை சேர்ந்த 9,141 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அத்துடன், 04 வீடுகள் முழுமையாகவும் , 159 வீடுகள் பகுதிகளவிலும் சேதமடைந்துள்ளன.

(“யாழில் கனமழை ; 9 ஆயிரம் பேர் பாதிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் பெண்களை சுய இன்ப அரசியலுக்கு பயன்படுத்தாதே! அமைச்சர் றிசாத்துக்கு தமிழ் உணர்வாளர்கள் கண்டனம்

தமிழ் பெண்களை சுய இன்ப அரசியலுக்கு பயன்படுத்துகின்ற நடவடிக்கைகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் உடனடியாக முடிவுறுத்த வேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான செல்லையா இராசையா, அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர்கள் சங்க தலைவர் எஸ். லோகநாதன் ஆகியோர் கூட்டாக விடுத்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அக்கரைப்பற்றில் உள்ள தமிழ் பிரதேசமான ஆலையடிவேம்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிர் கிளை அலுவலகம் ஒன்று கட்சி சார்ந்த அரசியல் செயற்பாட்டுக்காக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டு உள்ளது.

(“தமிழ் பெண்களை சுய இன்ப அரசியலுக்கு பயன்படுத்தாதே! அமைச்சர் றிசாத்துக்கு தமிழ் உணர்வாளர்கள் கண்டனம்” தொடர்ந்து வாசிக்க…)

மங்களவின் மங்கல பாதீடு மாலை 3:02க்குச் சமர்ப்பிப்பு

நல்லாட்சி அரசாங்கத்தின் 2018ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் (பாதீடு), நாடாளுமன்றத்தில் இன்று (09) சமர்ப்பிக்கப்படவுள்ளது. அமைச்சர் மங்கள சமரவீர, நிதியமைச்சராக பதவியேற்று சமர்பிக்கும் முதலாவது வரவு-செலவுத்திட்டம் இதுவாகும். இத்திட்டம் நாடாளுமன்றத்தில் இன்று மாலை 3:02க்குச் சமர்ப்பிக்கப்படும்.

(“மங்களவின் மங்கல பாதீடு மாலை 3:02க்குச் சமர்ப்பிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் தேசிய கூட்டமைப்பு உடையாமல் இருப்பதற்கான, அனைத்து முற்சிகளையும் “புளொட்” மேற்கொள்ளும்- பா. உறுப்பினர் திரு.சித்தார்த்தன்..!!

இன்றுகாலை வவுனியாவில் உள்ள தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) செயலதிபர் அமரர் உமா மகேஸ்வரனின் நினைவாலயத்தில், “புளொட்” அமைப்பின் அரசியல் பிரிவான “ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்” (டி.பி.எல்.எப்) மத்தியகுழுக் கூட்டம் நடைபெற்றதன் பின்னர் இடம்பெற்ற பத்திரிகையாளர்கள் மகாநாட்டில்..

(“தமிழ் தேசிய கூட்டமைப்பு உடையாமல் இருப்பதற்கான, அனைத்து முற்சிகளையும் “புளொட்” மேற்கொள்ளும்- பா. உறுப்பினர் திரு.சித்தார்த்தன்..!!” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு, கிழக்குக்கு சம்பந்தனை ‘வெறுங்கையுடன் அனுப்பிவிடாதீர்’

“இந்த நாட்டில் மீண்டும் ஆயுதப்போராட்டம் இடம்பெறுவதற்கு நாம் விரும்பவில்லை. இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை வெறுங்கையுடன் வடக்கு, கிழக்குக்கு அனுப்பிவிடாதீர்கள். அப்படி அனுப்பினால் வரலாறு உங்களை மன்னிக்காது” என தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

(“வடக்கு, கிழக்குக்கு சம்பந்தனை ‘வெறுங்கையுடன் அனுப்பிவிடாதீர்’” தொடர்ந்து வாசிக்க…)

‘கானல் நீராகிவிடுமா புதிய அரசமைப்பு?’

“புதிய அரசமைப்பை உருவாக்குவதற்காக மக்கள் ஆணையைப் பெற்றுக் கொண்ட ஜனாதிபதியும் பிரதமரும், முரணான கருத்துகளை தெரிவித்துவரும் அதேவேளை, இதனை வலியுறுத்த வேண்டிய கடமையிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர், வித்தியாசமான கருத்துகளைத் தெரிவிப்பதைப் பார்க்கும் பொழுது, புதிய அரசமைப்பு உருவாகுவது கானல் நீராகத் தெரிகின்றது” என, ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். (“‘கானல் நீராகிவிடுமா புதிய அரசமைப்பு?’” தொடர்ந்து வாசிக்க…)