பிலேந்திரன் மரியநாயகம் மொரிஸ்
ராஜேந்திரா றோட், யாழ்ப்பாணம்
மலர்வு 06.03.1951
உதிர்வு 06.11.2017
The Formula
பிலேந்திரன் மரியநாயகம் மொரிஸ்
ராஜேந்திரா றோட், யாழ்ப்பாணம்
மலர்வு 06.03.1951
உதிர்வு 06.11.2017
தமிழ்மக்கள் தனிநாடு கோரி எப்போதும் போராடவில்லை! பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்.சிறிதரன் தற்போது இலங்கை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு விடப்பட்டிருக்கும் உத்தேச அரசியல்அமைப்பு சீர்திருத்தம் மீதான விவாதத்தின் போது 20 ஆவது அரசியல்அமைப்பை வரவேற்று தமிழ்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் உரையாற்றும்போதே இதனைக்குறிப்பிட்டார் தொடர்ந்து உரையாற்றும்போது தனது உரையில் 20 ஆவது திருத்தச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பௌத்தமதத்திற்கு முன்னுரிமை வழங்கும் விடயத்தில் தமக்கு ஆட்சேபனை இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் சுமார் 30 நிமிடங்கள் தொடர்ந்த சிவஞானம்.சிறிதரன் இன்றைய உரையில் 20 ஆவது திருத்தம் அவசியம் என்பதை ஆங்காங்கே சுட்டிக்காட்டினார்.
ரி. தர்மேந்திரன் –
கிழக்கு தேசம் என்கிற கோட்பாட்டின் ஸ்தாபகரான வஃபா பாருக் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக பொருளாளர் ஆவர். தமிழீழ தாயகம் போல, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் போல, ஒரு நாடு இரு தேசம் போல வஃபா பாருக் கிழக்கு தேசம் என்கிற சிந்தனை கருவை முன்வைத்து கடந்த ஒரு வருடமாக முன்னெடுத்து வருகின்றார். முஸ்லிம்களின் சம கால அரசியல் குறித்து நாம் இவரை பேட்டி கண்டபோது….
(“கிழக்கு தேசத்தின் சுயநிர்ணயம் அரசியல் அமைப்பில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்!” தொடர்ந்து வாசிக்க…)
தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ. எல். எம். அதாவுல்லா அடுத்ததாக வன்னி பிரகடனத்தை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்று இக்கட்சியின் மகளிர் அணி தலைவியும், வட மாகாண பொறுப்பாளருமான ஜான்சிராணி சலீம் கோரி உள்ளார். அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பாலமுனை பிரகடன மாநாட்டை நடத்தி 05 தீர்மானங்களை நிறைவேற்றியது. இதில் வட மாகாணத்தில் இருந்து வந்து ஜான்சிராணி சலீம் கலந்து கொண்டார். இதில் கலந்து கொண்டது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்து கூறியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.
(“தேசிய காங்கிரஸ் வன்னி பிரகடனத்தை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்!” தொடர்ந்து வாசிக்க…)
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடபோவதில்யென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில், நேற்று இடம்பெற்ற, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின்போதே, மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட தாழங்குடாவில் அமைக்கப்பட்டிருந்த படை முகாம் அகற்றப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு, கிழக்கில் யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் தாழங்குடாவில் தனியார் காணியொன்றில் இந்தப் படைமுகாம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் நல்லாட்சியின் கீழ், தனியார் காணிகளில் உள்ள படை முகாம்கள் அகற்றப்படவேண்டுமென்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு அமைவாக, இந்தக் காணி விடுவிக்கப்பட்டது. இதன்கீழ், கடந்த 10 வருடத்துக்கும் மேலாக தாழங்குடாவில் தனியார் காணியில் இருந்த இப்படைமுகாம் அகற்றப்பட்டு, அந்த காணிகள், உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1. திருப்பித் திருப்பி அதிகாரத்தொனியிலேயே அறிக்கைகள். யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் எப்போது சமூகத்திற்கு முன் மாதிரியாக நடந்தார்கள் அவர்கள் கூப்பிட்டதும் கூட்டத்திற்கு வருவதற்கு. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் பெண்களின் நிலை என்ன? பகிடிவதை என்ற பெயரில் பல்கலைக்கழக மாணவர்கள் கேவலமான வன்முறையில் ஈடுபடுவது ஏன்? இதுவரை தமிழ் சமூகத்தை பாதிக்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் எத்தனை ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தங்களுக்கு வெள்ளையடிப்பதற்கு அரசியல் கைதிகள் பிரச்சினையை கையிலெடுக்கிறார்களா என்ற சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாதது?
(“யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் திருந்திவிட்டார்களா? அல்லது திருந்தினமாதிரி …… ?” தொடர்ந்து வாசிக்க…)
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பில் ஆராய்வதற்காக விசேட கலந்துரையாடலொன்று, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும் மட்டு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில், செவ்வாய்க்கிழமை (31) நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.
(“கிரான் விவகாரம்: நாடாளுமன்றத்தில் விசேட கலந்துரையாடல்” தொடர்ந்து வாசிக்க…)
நாடாளுமன்றத்துக்கு ஆற்றுப்படுத்தப்பட்டுள்ள, புதிய அரசமைப்புக்கான, அரசமைப்புச் சபையின் வழிகாட்டல் குழு அறிக்கை தொடர்பில் விவாதிப்பதற்கு, நாடாளுமன்றத்தில் இன்று (30) அரசமைப்புப் பேரவை, கூடவுள்ளது. இன்று ஆரம்பமாகும் விவாதம், தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இடம்பெறும். இன்று காலை 10.30 மணிக்கு விவாதம் ஆரம்பமாகவுள்ளதென, அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
(“இடைக்கால அறிக்கை தொடர்பில் இன்று முதல் விவாதம்” தொடர்ந்து வாசிக்க…)