நவம்பர் 14ஆம் திகதியன்று பாராளுமன்றத் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்த முடிவை எதிர்த்து சிவில் சமூக ஆர்வலர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளார். பாராளுமன்றத் தேர்தல்கள் சட்ட விதிகளுக்கு அமைய வேட்புமனுக்களை கோருவதற்கும் பொதுத் தேர்தலுக்கான திகதியை நிர்ணயம் செய்வதற்கும் தேர்தல்கள் ஆணைக்குழு தவறிவிட்டதாகக் கூறி, ‘அபி ஸ்ரீலங்கா’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரியந்த ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்தார்.
Category: செய்திகள்
நன்கொடையை இரு மடங்காக அதிகரித்தது இந்தியா
இலங்கையின் பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள 9 பாடசாலைகளை தரமுயர்த்துவதற்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நன்கொடை உதவித் தொகையினை இரு மடங்காக அதிகரிக்கும் நடவடிக்கைகளுக்கான முறைமைகளை உறுதிப்படுத்தும் இராஜதந்திர ஆவணங்களில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.எம்.திலகா ஜயசுந்தர ஆகியோர் 2024 ஒக்டோபர் 18 ஆம் திகதி கைச்சாத்திட்டனர்.
AI அம்சங்களோடு புதிய ஐபேட்
சங்குப்பிட்டி பாலத்தின் ஊடாக பயணிப்போருக்கு முக்கிய அறிவித்தல்..!
‘பிணைக்கைதிகளை விடுவிக்க மாட்டோம்’
காசாவில் இருந்து இஸ்ரேல் இராணுவத்தினர் வெளியேறாத வரை பிணைக்கைதிகளை விடுவிக்க மாட்டோம் என்று, ஹமாஸ் அறிவித்துள்ளது. பலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் போர் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 44 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
பிரதமருடன் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் சந்திப்பு
சம்பளம் அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி அவதானம்
’ஜனாதிபதியுடன் கைகோர்க்க முடியும்’ – சஜித்
எதிர்வரும் பொதுத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொண்டு நாட்டைக் கட்டியெழுப்ப ஜனாதிபதியுடன் கைகோர்க்க முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், என்னாலும் ஐக்கிய மக்கள் சக்தியாலும் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட முடியும்.
வாகனங்கள் குறித்து மஹிந்த வெளியிட்ட அறிக்கை
மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பில் உள்ளதாக கூறப்படும் வாகனங்கள் தொடர்பான தகவல்கள் சரியான தகவல் அல்ல என மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. எவ்வாறாயினும், ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்ட எழுத்துமூல பணிப்புரையின் பிரகாரம் எதிர்வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்ட 6 உத்தியோகபூர்வ வாகனங்களில் 3 வாகனங்களை கையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவு மேலும் தெரிவிக்கிறது.