1998ஆம் ஆண்டு, களுத்துறை சிறைச்சாலையில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தாக்குதலுக்குள்ளான சம்பவம் தொடர்பிலான தீர்ப்பு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது. இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களுக்குப் பத்தரை வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதோடு, எமில்காந்தன் உட்பட 10 பேர் வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
Category: செய்திகள்
கருணா விடுதலை
ஜனாதிபதி செயலக வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தி, 90 மில்லியன் ரூபாயை மோசடி செய்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர், கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
‘தமிழ் மக்களுக்கு பிரச்சினை உள்ளது’
ஒற்றையாட்சியை இல்லாமல் செய்யாமல், பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுத்து, இலங்கையில் உள்ள சிங்கள பௌத்தர்கள், மகாநாயக்கர்கள், தமிழர்களும் ஏற்றுக்கொள்ளும் சாதகமான தீர்வை நோக்கி நாம் செல்ல வேண்டும். தமிழ் மக்களுக்குப் பிரச்சினை இருக்கிறது. அதற்கு, அவர்களுடன் கலந்துரையாடி, நாட்டைப் பிளவுபடுத்தாமல் தீர்வை நோக்கிச் செல்லவேண்டும்” என்று அரசாங்கம், நேற்று (25) தெரிவித்தது.
‘சட்டம் பற்றித் தெரியாது?’
பிரதி அமைச்சர் ஹரிஸின் வடக்கு, கிழக்கு இணைப்புக்கு எதிரான கருத்து திருட்டு அரசியல் விளையாட்டு!
– நாபீர் பவுண்டேசனின் தலைவர் சுட்டிக்காட்டு -!
வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு ஒரு போதும் இடம் அளிக்க மாட்டார்கள் என்று விளையாட்டு துறை பிரதி அமைச்சர் ஹரிஸ் கூறி வருகின்ற விதம் அவருடைய அரசியல் திருதாளத்தையே காட்டுகின்றது என்று நாபீர் பவுண்டேசனின் தலைவரும், அரசியல் விமர்சகருமான பொறியியலாளர் நாபீர் உதுமான்கண்டு தெரிவித்தார்.
வெனிசுவேலா எதிரணியில் பிளவு
வெனிசுவேலாவில் அண்மையில் நடத்தப்பட்ட, ஆளுநர்களுக்கான தேர்தல்களின் வெற்றிபெற்ற, எதிரணியைச் சேர்ந்தவர்களின் 4 பேர், அந்நாட்டின் சர்ச்சைக்குரிய அரசமைப்புச் சபைக்கான தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். இவ்வளவு நாட்களும், அச்சபை, சட்டத்துக்குப் புறம்பானது என, அவர்கள் குற்றஞ்சாட்டி வந்த நிலையிலேயே, தற்போது அவர்கள், சபைக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
மல்வத்தை தமிழ் மக்களுக்கு தனியான பிரதேச சபை வேண்டும், உள்ளூராட்சி மன்றங்களை தாபிக்கும் குழுவுக்கு வேண்டுகோள்!
மல்வத்தையை மையமாக கொண்டு தனியான பிரதேச சபை ஒன்றை அமைத்து தர வேண்டும் என்று காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், பஷ்பா பொருளாதார கல்வி சமூக அபிவிருத்தி அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளருமான செல்லையா இராசையா அம்பாறை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களை தரம் உயர்த்துதல் மற்றும் ஸ்தாபித்தல் தொடர்பான குழுவுக்கு எழுத்துமூலம் கோரி உள்ளார்.
இலங்கையின் வறுமையில் மாகணத்தில் வடக்கும் மாவட்டத்தில் முல்லைத்தீவும் முதலிடம்
இலங்கையில் வறுமை நிலை குறைந்துள்ள போதிலும், வடக்கு மாகாணத்தில் வறுமை நிலை அதிகளவில் உள்ளதாக சனத்தொகை புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அதிகாரபூர்வ தரவுகளில் இருந்து தெரியவந்துள்ளது. இதேவேளை மாவட்ட அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில், அதிகபட்சமாக வறுமை நிலை காணப்படுகின்றது. நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிபரங்களுக்கு அமைய, 2012/13, காலப்பகுதியில், 6.7 வீதமாக இருந்த சிறிலங்காவின் வறுமை நிலை, கடந்த ஆண்டில், 4.1 வீதமாக குறைந்துள்ளது. (“இலங்கையின் வறுமையில் மாகணத்தில் வடக்கும் மாவட்டத்தில் முல்லைத்தீவும் முதலிடம்” தொடர்ந்து வாசிக்க…)
‘றக்காவை அழித்துவிட்டது அமெரிக்கக் கூட்டணி’
ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான இராணுவக் கூட்டணி, சிரியாவின் றக்கா நகரத்தை, பூமியிலிருந்தே இல்லாதுசெய்து விட்டது என, ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது. 1945ஆம் ஆண்டில், ஜேர்மனியின் ட்ரெஸ்டெனை, ஐக்கிய அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து குண்டுத் தாக்குதல் நடத்தித் தகர்த்ததைப் போன்றே றக்காவும் தகர்க்கப்பட்டுள்ளது என, ரஷ்யா தெரிவித்துள்ளது.
(“‘றக்காவை அழித்துவிட்டது அமெரிக்கக் கூட்டணி’” தொடர்ந்து வாசிக்க…)
யாழ்.பல்கலை மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பு
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நேற்று(18) ஜனாதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்தை திருப்தியளிக்கவிலை என தெரிவித்து யாழ்.பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களைச் சேர்ந்த மாணவர்களும் இன்று(20) காலை முதல் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். எதிர்வரும் 25 ஆம் திகதி வரை வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். அத்துடன் மருத்துவ பீடத்தில் கல்வி பயிலும் நான்காம் வருட மாணவர்களுக்கு இன்று(20) நடத்தவிருந்த பரீட்சையும் மாணவர்கள் முன்னெடுத்துள்ள வகுப்பு பகிஷ்கரிப்பு நடவடிக்கை காரணமாக நடத்தப்படவில்லை என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.