அரசியல் கைதிகளின் உறவினர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு; ஓரிரு நாட்களில் முடிவென உறுதி

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் உள்ளிட்ட குழுவினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, நேற்று (19) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், உறவினர்களின் உடனடியாக கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதற்கான எந்தவிதமான உறுதிமொழியும் வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை.

(“அரசியல் கைதிகளின் உறவினர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு; ஓரிரு நாட்களில் முடிவென உறுதி” தொடர்ந்து வாசிக்க…)

அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் மத்திய குழுவுக்குள் வட மாகாண உறுப்பினர்கள் முதல் தடவையாக உள்ளீர்ப்பு!

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் 25 வருட கால வரலாற்றில் இத்தொழிற்சங்கத்தின் மத்திய குழுவுக்குள் முதல் தடவையாக வட மாகாண உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக பொதுச் செயலாளராக முல்லைத்தீவில் கரைத்துறைப்பற்று பிரதேச சபையை சேர்ந்த எஸ். சற்குணராசா நியமிக்கப்பட்டு உள்ளதுடன் இணைத் தலைவர்களில் ஒருவராக கிளிநொச்சியில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தை சேர்ந்த ஏ. புண்ணியமூர்த்தி நியமிக்கப்பட்டு உள்ளார்.

(“அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் மத்திய குழுவுக்குள் வட மாகாண உறுப்பினர்கள் முதல் தடவையாக உள்ளீர்ப்பு!” தொடர்ந்து வாசிக்க…)

உரிமை பற்றி கதைக்கின்ற சம நேரத்தில் அவர்களின் இடங்களை அபிவிருத்தி செய்வதுதான் முஸ்லிம்களின் அரசியல் சாணக்கியம்!

– சுதந்திர கட்சியின் காரைதீவு அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி
முஸ்லிம் மக்கள் வாழ தெரிந்தவர்கள், அவர்களின் அரசியல் காய் நகர்த்தல்கள் விவேகமானவை, அவர்களின் உரிமைகளை பற்றி கதைத்து கொள்கின்ற சம நேரத்திலேயே அவர்களின் இடங்களை அபிவிருத்தி செய்தும் வருகின்றார்கள் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரைதீவு பிரதேச அமைப்பாளரும், காரைதீவு பிரதேச முன்னாள் உப தவிசாளருமான பொறியியலாளர் வீரகத்தி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

(“உரிமை பற்றி கதைக்கின்ற சம நேரத்தில் அவர்களின் இடங்களை அபிவிருத்தி செய்வதுதான் முஸ்லிம்களின் அரசியல் சாணக்கியம்!” தொடர்ந்து வாசிக்க…)

படைவீரர்களுக்கான பொது மன்னிப்புக் காலம்

தப்பியோடிய படைவீரர்களுக்கான பொது மன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இது குறித்துப் பேசிய இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன, “இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர்களுக்கான புதிய பொதுமன்னிப்புக் காலம் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும்” எனக் குறிப்பிட்டார்.எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் இந்தப் பொதுமன்னிப்புக் காலத்தில், இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர்கள், சட்ட ரீதியாகத் தம்மை இராணுவத்தில் இருந்து விடுவித்துக்கொள்ள முடியும்

தமிழர் தரப்புடன் இணைந்து தனித்தே போட்டியிடும்

உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில்இ தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கூட்டுசேர்ந்து போட்டியிடாது. தமிழர் தரப்புடன் இணைந்து தனித்தே போட்டியிடும்எ ன்று முன்னாள் பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தரைவருமான கருணா அம்மான் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் எமது கட்சி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணியினருடன் கூட்டு சேர்ந்து போட்டியிடாது. ஆனால் தேசிய ரீதியிலான தேர்தல்களில் மஹிந்த அணிக்கே எமது கட்சி நிச்சியம் ஆதரவு வழங்கும் என்று தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளர் நாயகம் வீ.கமலதாஸ் தெரிவித்தார்.முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவைஇ புதனகிழமை சந்தித்து இது தொடர்பான எமது இறுதி முடிவை அறிவித்துள்ளோம் என்றார்.

புகையிரத சேவையாளர்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம்

புகையிரத சாரதிகள், புகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக புகையிரத லோகோமோடிவ் பொறியியலாளர்கள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி பிரதமருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இணங்கியவாறு 300 ரூபா சம்பளக் கொடுப்பனவு இம்மாத சம்பளத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என்பதால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு ஏகமனதாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதென்று புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் லால் ஆரியரத்ன கூறினார். இம்மாத சம்பளம் இருந்ததைவிட குறைவடைந்துள்ளதாகவும், பிரதமரின் செயலாளருடைய உத்தரவு நிறைவேற்றாத காரணத்தாலும் இந்த வேலை நிறுத்தத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது

பொருட்களின் விலை குறைப்பு

வாழ்க்கைச் செலவினத்தை குறைக்கும் நோக்கில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை மேலும் குறைக்கப்படும் என்று சதொச நிறுவனத்தின் தலைவர் கலாநிதி கே.பி. தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.இதன் கீழ் ஒரு கிலோ சம்பா அரிசி 80 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும். ஒருகிலோ வெள்ளைப்பச்சரிசி 65 ரூபாவிற்கும்இ ஒரு கிலோ நாட்டரிசி 74 ரூபாவுக்கு சதொசவில் விற்பனை செய்யப்படவுள்ளதாக அவர் கூறினார்.அரிசியை இறக்குமதி செய்வதற்காக திறைசேரியின் செயலாளர் தலைமையிலான கேள்விப்பத்திர குழுவொன்றை நியமிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று தெரிவித்ததுடன் மேலும் இம்மாதத்தில் மேலும் 30 சதொச கிளைகள் திறக்கப்படவுள்ளது

4 கட்சிகள் இணைவு

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியுடன் மேலும் 4 கட்சிகள் இணைந்துள்ளன. இதன்பிரகாரம், முன்னாள் பிரதி அமைச்சரான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையின் கீழ் இயங்கும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியும் இதில் அடங்கும்.

(“4 கட்சிகள் இணைவு” தொடர்ந்து வாசிக்க…)

‘உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை’

“நீதிமன்ற உத்தரவுகளை மீறி ஆர்ப்பாட்டங்களை நடத்தும் அனைவருக்கும் எதிராக, கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். மேலும், “வடக்குக்கு ஒரு நீதியும் தென் மாகாணத்துக்கு ஒரு நீதியும் என இரண்டு விசேட நீதிகள் எதுவும் இல்லை. இந்நாட்டில் ஒரு சட்டமே உள்ளது. “இந்தக் காரணத்தால் தெற்கு மக்களுக்கு சட்ட நடவடிக்கை எடுத்ததைப் போன்று விரைவில் சிவாஜிலிங்கத்துக்கும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் தெரிவித்தார்.
கொழும்பில், இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

‘புதிய அரசமைப்பு நடவடிக்கை வெற்றி பெற வேண்டும்’

“புதிய அரசமைப்பு உருவாக்க நடவடிக்கைகள் வெற்றிபெற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்” என, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “அரக்கனான நரகாசுரன் வதம் செய்யப்பட்ட தினத்தையே தீபாவளியாக இந்துக்களாகிய நாம் கொண்டாடுகின்றோம். “கடந்த காலங்களில் இடப்பெயர்வுகள், அகதி வாழ்க்கை, வாழ்வாதாரப் பிரச்சினைகள் போன்றவற்றால் துயரங்களை அனுபவித்து வந்த எமது மக்கள், அவற்றிலிருந்து விடுபட்டு சம அந்தஸ்துடன் கூடிய உரிமைகளுடன் வாழும் வகையில் இன்று முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய அரசமைப்பு உருவாக்க நடவடிக்கைகள் வெற்றிபெற வேண்டும் எனவும் அனைத்து மக்களும் இன, மத வேறுபாடுகளின்றி ஒருமித்த நாட்டில் ஐக்கியமாக சாந்தி, சமாதானத்துடன் வாழ இத் தீபாவளித் திருநாள் வகைசெய்திட வேண்டும் எனவும் எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சி, இந்நாட்டு மக்களுக்கு மட்டுமன்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகளுக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.