தற்போது இந்த முழு உலகமும், பசுமைப் புரட்சியை நோக்கிப் பயணித்துக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்வது தொடர்பில், அதிகளவில் அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றது. அதன் ஒரு கட்டமாகவே, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இவ்வாறான வாகனங்களின் உருவாக்கத்துடன், அவ்வாகனங்களைச் சார்ஜ் செய்வதற்கான நிலையங்களும் ஆரம்பிக்கப்பட்டன. இவ்வாறாக சார்ஜ் நிலையங்களை, ஒழுங்கமைப்பது தொடர்பில், தற்போது இலங்கை அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இந்த ஒழுங்குப்படுத்தல் வேலைத்திட்டம், இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
(“’மின்சார வாகன சார்ஜ் நிலையங்களை ஒழுங்குபடுத்துவதால் எவருக்கும் பாதிப்பில்லை’” தொடர்ந்து வாசிக்க…)