அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைமைத்துவ நெருக்கடியை தீர்க்க இன்று விசேட பொது கூட்டம்!

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் விசேட பொது கூட்டம் இத்தொழிற்சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் தலைமையில் அம்பாறை நகர மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை காலை 9. 30 மணிக்கு இடம்பெறுகிறது.

(“அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைமைத்துவ நெருக்கடியை தீர்க்க இன்று விசேட பொது கூட்டம்!” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு, கிழக்கு இணைக்கப்படுவதை எதிர்த்துப் போராடுவோம்!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேவைக்காக புதிய அரசியலமைப்பில் வடக்கு கிழக்கை இணைக்கும் முயற்சிகள் இடம்பெறுமாயின் கிழக்கு மக்கள் அமைப்பு அதனை எதிர்த்து பெரும் போரட்டத்தினை முன்னெடுக்கும் என அக்கட்சியின் தலைவரும் தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜயந்த வீரசேகர தெரிவித்தார்.

(“வடக்கு, கிழக்கு இணைக்கப்படுவதை எதிர்த்துப் போராடுவோம்!!” தொடர்ந்து வாசிக்க…)

‘வடக்குப் போராட்டம் நியாயமானது’

காணாமல் போனவர்களின் உறவினர்கள், வடக்கில் முன்னெடுத்துவரும் போராட்டமானது நியாயமானதே எனவும் அவர்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு விரைவில் வழங்கப்படும் எனவும் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(04) இடம்பெற்றது.இதன்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

(“‘வடக்குப் போராட்டம் நியாயமானது’” தொடர்ந்து வாசிக்க…)

தூத்துக்குடிக்கு கப்பல் சேவை

கொழும்பு மற்றும் தூத்துக்குடிக்கு இடையில் இந்திய – இலங்கை பயணிகளுக்கிடையிலான கப்பல் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்கென புதிய கேள்வி மனுவை கோருவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கே அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (04) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்ட அங்கிகாரம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

(“தூத்துக்குடிக்கு கப்பல் சேவை” தொடர்ந்து வாசிக்க…)

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 200 பேர் வைத்தியசாலையில் அனுமதி

 

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிவ்வெளி பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்தமான ஆடைத்தொழிற்சாலையில், கடமையில் இருந்த பெண்கள் மயக்கமுற்ற நிலையில், ​டிக்கோயா மாவட்ட வைத்தியசா​லையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த தொழிற்சாலையில் பணிபுாிந்த சுமார் 200 பெண்கள் வரையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆடைத் தொழிற்சாலையில் வழங்கப்பட்ட காலை உணவு ஒவ்வாமை காரணமாகவே, அவர்கள் மயக்கமுற்றிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர். ஹற்றன், நோர்வூட் நகரத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் உள்ள ஊழியர்கள் பலர், இன்று (04) காலை மயக்கமுற்று விழுந்துள்ளனர். இவர்களில் சுமார் 100 பேர் வரையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிரியா தொடர்பில் ஐ.அமெரிக்காவுடன் ரஷ்யா முறுகல்

“சிரியாவிலுள்ள ரஷ்யத் துருப்புகள் மீது, ஐக்கிய அமெரிக்காவும் அதன் தோழமை நாடுகளும், வேண்டுமென்றே ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன” என, ரஷ்ய வெளிநாட்டு அமைச்சர் சேர்ஜெய் லவ்ரோவ் குற்றஞ்சாட்டியுள்ளார். “ஐ.அமெரிக்காவின் விசேட படைகளுக்கும் ஐ.அமெரிக்காவால் ஆதரவளிக்கப்படும் ஆயுததாரிகளுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவுக்கும் இடையில், சந்தேகத்துக்கிடமான வகையில் நேசமான உறவுகள் காணப்படுகின்றன” எனக் குற்றஞ்சாட்டிய அவர், “சிரிய இராணுவத்தின் முன்னேற்றத்தைத் தணிக்க, ஐ.அமெரிக்கா முயல்கிறது” எனவும் குற்றஞ்சாட்டினார். (“சிரியா தொடர்பில் ஐ.அமெரிக்காவுடன் ரஷ்யா முறுகல்” தொடர்ந்து வாசிக்க…)

உயிர்வேதியியல் மூலக்கூறு ஆய்வுக்காக மூன்று விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு அறிவிப்பு

 

வேதியியலுக்குக்கான நோபல் பரிசு இந்த ஆண்டு மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கபப்ட்டுள்ளது. உயிர் வேதியியல் மூலக்கூறு ஆய்வுக்காக இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சுவீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. (“உயிர்வேதியியல் மூலக்கூறு ஆய்வுக்காக மூன்று விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு அறிவிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

புகலிடம் கோரும் 1,333 பேர் நாட்டில் உள்ளனர்

“அரசியல் தஞ்சம் மற்றும் புகலிடம் கோரி வருகைத்தந்த 1,333 பேர், ஐக்கிய நாடுகள் ஆணையகத்தின் பொறுப்பின் கீழ் இலங்கையில் உள்ளனர்” என துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். “கடந்த ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதிவரையிலும் புகலிடம் கோரியோரின் எண்ணிக்கையே இதுவாகும்” என்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று(03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

(“புகலிடம் கோரும் 1,333 பேர் நாட்டில் உள்ளனர்” தொடர்ந்து வாசிக்க…)

வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் உண்ணாவிரதம்

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள, மரணதண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சுமார் 150 கைதிகள், நேற்று (15) முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதாக, சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் துஷார உபுல்தெனிய கூறினார். போகம்பர சிறைச்சாலையிலுள்ள 50 கைதிகள், கடந்த வியாழக்கிழமை (14) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு ஆரம்பித்த பின்னரே, இந்த​ வெலிக்கடையிலும் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக அவர் கூறினார். தங்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுத​லை செய்யுமாறு ​கோரியே, இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முடிவுக்கு வந்த டார்ஜிலிங் போராட்டம்: முத்தரப்புப் பேச்சுவார்த்தையும் அவசியம்!

மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மலைப்பகுதியில் 104 நாட்களாக நடந்துவந்த முழு அடைப்புப் போராட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் கோரிக்கையையும், பேச்சுவார்த்தைக்கான அழைப்பையும் ஏற்று இந்தப் போராட்டம் கைவிடப்பட்டிருக்கிறது. போராட்டத்துக்குத் தலைமையேற்று நடத்திய கோர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பின் தலைவர் பிமல் குருங்குக்கு முக்கியத்துவம் தந்து ராஜ்நாத் சிங் இந்தக் கோரிக்கையை முன்வைத்தது கவனிக்கத்தக்கது. போராட்டத்தின் காரணமாக அந்தப் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையும் பொருளாதாரமும் முற்றிலும் முடங்கிப்போயிருக்கும் சூழலில், நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசும் மேற்கு வங்க அரசும் இறங்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

(“முடிவுக்கு வந்த டார்ஜிலிங் போராட்டம்: முத்தரப்புப் பேச்சுவார்த்தையும் அவசியம்!” தொடர்ந்து வாசிக்க…)