லாஸ் வெகாஸில் பயங்கரம்; 50 பேர் பலி; 200 பேர் காயம்

ஐக்கிய அமெரிக்காவின் நெவாடா மாநிலத்திலுள்ள லாஸ் வெகாஸ் நகரில், இலங்கை நேரப்படி நேற்றுக் காலை இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், குறைந்தது 50 பேர் பலியானதோடு, 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதன் பின்னர், குறித்த தாக்குதலை மேற்கொண்டதாகச் சந்தேகிக்கப்படும் நபர், பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

(“லாஸ் வெகாஸில் பயங்கரம்; 50 பேர் பலி; 200 பேர் காயம்” தொடர்ந்து வாசிக்க…)

கிழக்கின் ஆட்சி ஆளுநரிடம்

கிழக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலம் சனிக்கிழமை(30) நள்ளிரவு 12மணியுடன் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த பொகொல்லாகமவின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபை கலைவதையிட்டு, மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்கள் பலவற்றில், பட்டாசுகளை கொளுத்தி தமது மகிழ்ச்சியை சிலர் தெரிவித்தனர். காத்தான்குடி, ஓட்டமாவடி மற்றும் ஏறாவூர் போன்ற பிரதேசங்களிலேயே இவ்வாறு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

(“கிழக்கின் ஆட்சி ஆளுநரிடம்” தொடர்ந்து வாசிக்க…)

‘வாக்குமூலமளிப்பதற்கு கொழும்புக்கு வர முடியாது’

கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவுக்கு, தன்னை விசாரணைக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளபோதும், கொழும்புக்குச் செல்ல முடியாத நிலை உள்ளதாகவும் மன்னார் வந்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத் தலைவர் வி.எஸ். சிவகரன் தெரிவித்துள்ளார்.

(“‘வாக்குமூலமளிப்பதற்கு கொழும்புக்கு வர முடியாது’” தொடர்ந்து வாசிக்க…)

அரசியல் மோதலில் டொனால்ட் ட்ரம்ப்

ஐக்கிய அமெரிக்காவின் பிராந்தியமான புவேர்ட்டோ றிக்கோவில், மரியா சூறாவளி காரணமாகப் பேரழிவு ஏற்பட்டுள்ள போதிலும், அங்குள்ள அதிகாரிகளோடும் மக்களோடும், ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அரசியல் ரீதியான மோதல்களில் ஈடுபட்டுள்ளார். இது, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும், அவருக்கான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

(“அரசியல் மோதலில் டொனால்ட் ட்ரம்ப்” தொடர்ந்து வாசிக்க…)

வித்தியா படுகொலை வழக்கு: முழு விவரம்

  • 30 வருட கடூழியச் சிறை
  • வித்தியா குடும்பத்துக்கு
    ரூ. 7 மில்லியன் நட்டஈடு
  • 2 பேருக்கு தலா ரூ.70 ஆயிரம் தண்டம்
  • 5 பேருக்கு தலா ரூ.40 ஆயிரம் தண்டம்
  • ஒருவர் விடுவிப்பு
  • குற்றவாளிகள் குடும்பத்தினர் ஓலம்
  • விஜயகலா மகேஸ்வரனுக்கு விமர்சனம்

(“வித்தியா படுகொலை வழக்கு: முழு விவரம்” தொடர்ந்து வாசிக்க…)

’எமது பிள்ளைகள் எங்கே?’

தமது பிள்ளைகள் தொடர்பில் உரிய தீர்வொன்றை முன்வைக்குமாறு வலியுறுத்தி, வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். வீதியோரங்களில் பல்வேறு சிரமங்களுடன் போராடி வரும் தமக்கு, உரிய தீர்வை பெற்றுத்தருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்தியுள்ளனர்.

(“’எமது பிள்ளைகள் எங்கே?’” தொடர்ந்து வாசிக்க…)

‘இடைக்கால அறிக்கை தமிழர்களை ஏமாற்றியுள்ளது’

உத்தேச அரசமைப்பு திருத்தத்துக்கான இடைக்கால அறிக்கை தமிழர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி, சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவதாகவே உள்ளது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

(“‘இடைக்கால அறிக்கை தமிழர்களை ஏமாற்றியுள்ளது’” தொடர்ந்து வாசிக்க…)

அதிகாரப் பரவலாக்கம் அவசியம்’

“நாடு பிளவுபடாமல் இருப்பதற்கு, அதிகாரப் பரவலாக்கம் மிக முக்கியமானது” என, பிரபல ஊடகவியலாளரும் விரிவுரையாளருமான காமினி வியன்கொட தெரிவித்தார். கண்டி டெவோன் ரெஸ்ட்டில் நேற்று (24) மாலை இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

(“அதிகாரப் பரவலாக்கம் அவசியம்’” தொடர்ந்து வாசிக்க…)

ட்ரம்ப்பால் போராட்டங்கள் அதிகரிப்பு

ஐக்கிய அமெரிக்காவில் காணப்படும் இனப்பாகுபாடுகளைக் கண்டித்து, போட்டிகளுக்கு முன்பாக ஒலிபரப்பப்படும் தேசிய கீதத்தின் போது, முழங்காலில் நிற்கும் வீரர்களுக்கு எதிராக, ஜனாதிபதி ட்ரம்ப்பால் தெரிவிக்கப்பட்ட கருத்துகளைத் தொடர்ந்து, போராட்டங்கள் அதிகரித்துள்ளன. முழங்காலில் நிற்பவர்களை, தரக்குறைவாக உரையாற்றியிருந்த ஜனாதிபதி ட்ரம்ப், அவர்களை, விளையாட்டில் சேர்க்கக்கூடாது என்ற ரீதியில் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, தேசிய கால்பந்தாட்ட லீக்கைச் சேர்ந்த ஏராளமான வீரர்கள், முழங்காலில் நின்றும், ஏனைய வழிகளிலும், தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற 14 போட்டிகளில், 150க்கும் மேற்பட்ட வீரர்கள், இவ்வாறு தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

வேறுபாடுகளுக்கு அப்பாலும் எதிர்ப்பு…

கொழும்பில் சேரிக்கப்படும் குப்பைகளை, புத்தளம் – அருவக்காடு பிரதேசத்தில் கொட்டும் திட்டத்துக்கு, இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் புத்தளம் கரைத்தீவு பிரதேசத்தில் ஒன்றுதிரண்ட பொதுமக்கள், இன்று (22) பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். புத்தளம், கரைத்தீவு மஸ்ஜிதுன் நூர் ஜூம்ஆப் பள்ளிவாயல், சேரக்குளி சென் பீட்டர்ஸ் தேவாலயம், எரிக்கலம்வில்லு பன்சல ஆகியன ஒன்றினைந்து குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

(“வேறுபாடுகளுக்கு அப்பாலும் எதிர்ப்பு…” தொடர்ந்து வாசிக்க…)