தமிழக – கேரள போலீஸாரால் 14 ஆண்டுகளாக தேடப்பட்ட மாவோயிஸ்ட் இயக்க கமாண்டர் கேரளாவில் பிடிபட்டார்: மாநில எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை

கோவை மாவட்டத்தை ஒட்டியுள்ள கேரள எல்லையோரப் பகுதியான அகளியில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முன்னணி செயல்பாட்டாளரான காளிதாஸ் என்பவர் 14 ஆண்டுகளுக்குப் பிறகு கேரள போலீஸாரிடம் பிடிபட்டார்.

(“தமிழக – கேரள போலீஸாரால் 14 ஆண்டுகளாக தேடப்பட்ட மாவோயிஸ்ட் இயக்க கமாண்டர் கேரளாவில் பிடிபட்டார்: மாநில எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை” தொடர்ந்து வாசிக்க…)

சித்தியடையாத மாணவர்களுக்கு புதிய இரு பாடத்திட்டங்கள் அறிமுகம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்கள், உயர்தரக் கல்வியை தொடருவதற்காக புதிய இரண்டு பாடத்திட்டங்களை அடுத்த மாதத்திலிருந்து அறிமுகப்படுத்த இருப்பதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த பாடத்திட்டத்தில், உளவியல் மற்றும் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு, விளையாட்டு, உடற்கல்வி மற்றும் கிராஃபிக் வடிவமைப்பு, ஃபேஷன் வடிவமைப்பு, கட்டுமான தொழில்நுட்ப ஆய்வு, நீர் வளங்கள் தொழில்நுட்ப ஆய்வு போன்ற விடயங்கள் உள்ளடக்கப்படயிருப்பதாக தெரிவித்துள்ளது.

(“சித்தியடையாத மாணவர்களுக்கு புதிய இரு பாடத்திட்டங்கள் அறிமுகம்” தொடர்ந்து வாசிக்க…)

திருத்தச் சட்டமூலம் நிறைவேறியது

மாகாணசபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பிலான இரண்டாவது மதிப்பீட்டு மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு, நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகள் தேவையென, சட்டமா அதிபர் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய அறிவுறுத்தியிருந்தார். இதனடிப்படையில், இன்றுமாலை இடம்பெற்ற வாக்கெடுப்பில், திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 44 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அணுவாயுதத்துக்கு எதிராக 51 நாடுகள் ஒப்பந்தத்தில்

வடகொரியாவின் அணுவாயுதப் பிரச்சினை, மிகவும் தீர்க்கமானதாக மாறிவரும் நிலையில், 51 நாடுகள் ஒன்றுசேர்ந்து, அணுவாயுதத்தை அழிக்க வேண்டுமென, ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வுக்காக, ஐக்கிய அமெரிக்காவுக்கு அநேகமான நாடுகள் சென்றுள்ளன நிலையிலேயே, இந்த இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. எனினும், ஐ.அமெரிக்கா உள்ளிட்ட அணுசக்தித் திறனைக் கொண்ட நாடுகள், இந்த ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்க்கின்றன.

(“அணுவாயுதத்துக்கு எதிராக 51 நாடுகள் ஒப்பந்தத்தில்” தொடர்ந்து வாசிக்க…)

முஸ்லிம் காங்கிரஸுக்கு ஹக்கீமின் தலைமை வேண்டாம் என்ற தீர்ப்பை வருகின்ற தேர்தல் மூலமாக வழங்குங்கள்!

– கிழக்கு முஸ்லிம்களுக்கு ஹசன் அலி அறைகூவல்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு ரவூப் ஹக்கீமின் தலைமை தேவை இல்லை என்கிற தீர்ப்பை எதிர்வரும் தேர்தல் எதுவாக இருப்பினும் அதன் மூலமாக கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் நிச்சயம் வழங்க வேண்டும் என்று இக்கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகமும், சுகாதார துறை முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம். ரி. ஹசன் அலி தெரிவித்தார்.

(“முஸ்லிம் காங்கிரஸுக்கு ஹக்கீமின் தலைமை வேண்டாம் என்ற தீர்ப்பை வருகின்ற தேர்தல் மூலமாக வழங்குங்கள்!” தொடர்ந்து வாசிக்க…)

டெனீஸ்வரனின் மனு தொடர்பில் ஒக். 3இல் உத்தரவு

வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் தாக்கல் செய்த ரிட் மனுவின் அடிப்படையில், இடைக்காலத் தடையுத்தரவு மற்றும் பிரதிவாதிகளுக்கான நோட்டீஸ் பிறப்பிப்பது தொடர்பான உத்தரவு, ஒக்டோபர் 3ஆம் திகதி பிறப்பிக்கப்படும் என, மேன்முறையீட்டு நீதிமன்றம், இன்று (19) அறிவித்தது.

(“டெனீஸ்வரனின் மனு தொடர்பில் ஒக். 3இல் உத்தரவு” தொடர்ந்து வாசிக்க…)

அருளினியனின் கேரள டயரீஸ் மட்டக்களப்பில் வெளியீடு

யாழ்ப்பாணம் குப்பிளானில் பிறந்து யாழ்.இந்துக் கல்லூரியில் கல்வி பயின்று பெங்களுர் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியைக் கற்று தற்போது பயண ஊடகவியலாளராக செயற்பட்டுவரும் அருளினியனின் ‘கேரள டயரீஸ் – வேர்தேடுவோம்’ நூல்; மட்டக்களப்பிலும் வெளியிடப்பட்டுள்ளது.

(“அருளினியனின் கேரள டயரீஸ் மட்டக்களப்பில் வெளியீடு” தொடர்ந்து வாசிக்க…)

‘றோகிஞ்சாக்களைக் கணக்கெடுக்காத ட்ரம்ப்’

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன், றோகிஞ்சா அகதிகள் தொடர்பாகக் கலந்துரையாடிய போதிலும், அவர்கள் குறித்து எந்தவிதமான கருத்தையும் அவர் வெளிப்படுத்தவில்லை என, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸினா தெரிவித்துள்ளார். அகதிகள் பற்றிய தன்னுடைய நிலைப்பாட்டை, ஜனாதிபதி ட்ரம்ப் ஏற்கெனவே தெளிவாக வெளிப்படுத்தியுள்ள நிலையில், அவரிடம் உதவிகளையும் எதிர்பார்க்கவில்லையெனவும், பிரதமர் ஹஸினா தெரிவித்துள்ளார்.

(“‘றோகிஞ்சாக்களைக் கணக்கெடுக்காத ட்ரம்ப்’” தொடர்ந்து வாசிக்க…)

அசாட் இருக்கும் வரை உதவி இல்லை

சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட்டை எதிர்க்கும் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட பல நாடுகள், அப்பதவியிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டு, புதிய அரசியல் மாற்றமொன்று ஏற்படும் வரை, அந்நாட்டை மீளக்கட்டியெழுப்பும் பணிகளுக்கு உதவாது என, ஐக்கிய இராச்சிய வெளிநாட்டுச் செயலாளர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். மேற்கத்தேய நாடுகளும் வளைகுடா நாடுகளும் இணைந்துள்ள “சிரியாவின் நண்பர்கள்” குழு, ஐக்கிய அமெரிக்காவின் நியூயோர்க்கில் சந்தித்து உரையாடின.

(“அசாட் இருக்கும் வரை உதவி இல்லை” தொடர்ந்து வாசிக்க…)

முஸ்லிம்களின் தலைமை கிழக்கில்தான் இருக்க வேண்டும் என்கின்றார் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாஹிர்!

இலங்கையை பொறுத்த வரை முஸ்லிம்களின் தலைமை கிழக்கு மாகாணத்தில்தான் இருக்க வேண்டும், ஏனெனில் கிழக்கு மாகாணத்தில்தான் அதிக முஸ்லிம்கள் வாழ்கின்றனர் என்று கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஜவாஹிர் சாலி தெரிவித்தார்.

(“முஸ்லிம்களின் தலைமை கிழக்கில்தான் இருக்க வேண்டும் என்கின்றார் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாஹிர்!” தொடர்ந்து வாசிக்க…)