மியான்மார் விவகாரம்: ’மலேஷியா தலையிட வேண்டும்’

மியான்மாரில் றோகிஞ்யா முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க, பிராந்தியத்தின் வளர்ச்சியடைந்த முஸ்லிம் நாடு என்றடிப்படையில், மலேஷியா தலையீடு செய்ய வேண்டும் என, மலேசியாவின் பேராக் மன்னர் சுல்தான் நஸ்ரின் மியூசுதீன் சாஹ்விடம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

(“மியான்மார் விவகாரம்: ’மலேஷியா தலையிட வேண்டும்’” தொடர்ந்து வாசிக்க…)

நம்பிக்கையில்லா பிரேரணை சி.விக்கு எதிராக வருகிறது?

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக, நம்பிக்கையில்லா பிரேரணையை கையளிப்பதற்கு, உறுப்பினர்கள் நடவடிக்கை எடுத்துவருவதாக, நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது. மாகாண சபையில் முன்வைக்கப்படுகின்ற யோசனைகளை ஒத்திவைப்பதனால், மாகாண சபையில் பிரச்சினையான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது என்றும், அவற்றை அடிப்படையாக வைத்தே, சி.விக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது. முதலமைச்சரின் செயற்பாட்டினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும், அதிருப்தியில் இருப்பதாகவும் கருத்துகளை வெளிப்படையாக தெரிவிக்கமுடியாமல் அவர்கள் இருப்பதாகவும் அறியமுடிகின்றது என்றும் அந்த தகவல் தெரிவித்தது.

கிழக்கின் மூத்த தொழிற்சங்கவாதி இப்றாலெப்பை மீதான தாக்குதலை வன்மையாக கண்டித்து வடக்கில் தீர்மானம்!

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் பொருளாளரான நற்பிட்டிமுனையை சேர்ந்த மூத்த தொழிற்சங்கவாதி ஐ. எம். இப்றாலெப்பை ஹாஜியார் – வயது 67 மீது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்பாட்டாளர்களால் நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாகவும், கல்முனை பொலிஸார் நீதியான விசாரணையை நடத்த வேண்டும் என்று கோருவதாகவும் இச்சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர்களின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

(“கிழக்கின் மூத்த தொழிற்சங்கவாதி இப்றாலெப்பை மீதான தாக்குதலை வன்மையாக கண்டித்து வடக்கில் தீர்மானம்!” தொடர்ந்து வாசிக்க…)

ஜனாதிபதி தலைமையில் அரச சாகித்திய விருது விழா

இலங்கையின் இலக்கியத் துறையை வளப்படுத்துவதற்கு பங்களிப்பு வழங்கிய எழுத்தாளர்களுக்கு, அரச சாகித்திய விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று (08) பிற்பகல், தாமரைத்தடாக மண்டபத்தில் இடம்பெற்றது. சிங்களம், தமிழ், ஆங்கில இலக்கியத்தின் மேம்பாட்டுக்காகச் செய்த சேவையை கௌரவித்து வழங்கப்படும் சாகித்திய ரத்ன விருது, பேராசிரியர் ஆரிய ராஜகருணா, நீர்வை பொன்னையன், ஜீன் அரசநாயகம் ஆகிய எழுத்தாளர்களுக்கு ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்டது.

(“ஜனாதிபதி தலைமையில் அரச சாகித்திய விருது விழா” தொடர்ந்து வாசிக்க…)

2009ஆம் ஆண்டு பிரபாகரனை கொன்றோம்! – மீண்டும் கமால் குணரத்ன

2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி காலை 10.30 மணிக்கு வேலுப்பிள்ளை பிரபாகரனை கொலை செய்த பிறகு, தீவரவாதம் தொடர்பில் எந்த பிரச்சினையும் இதுவரை ஏற்படவில்லை என ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச தலைமையில், “எலிய – ஒளிமயமான அபிலாசைகள்” என்ற பெயரிலான புதிய அமைப்பை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

(“2009ஆம் ஆண்டு பிரபாகரனை கொன்றோம்! – மீண்டும் கமால் குணரத்ன” தொடர்ந்து வாசிக்க…)

மு. காவின் பேரம் பேசும் சக்தியை பலி கொடுத்தேனும் காரியப்பரை காப்பாற்ற வேண்டிய இக்கட்டில் ஹக்கீம்!

சுட்டிக்காட்டுகிறார் பஷீர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சொற்ப அளவிலான பேரம் பேசும் சக்தியை பெருந்தேசிய கட்சிகளுக்கு பலி கொடுத்தேனும் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்ற வேண்டிய இக்கட்டில் ரவூப் ஹக்கீம் உள்ளார் என்று இக்கட்சியின் முன்னாள் தவிசாளரும், தூய முஸ்லிம் காங்கிரஸ் அணியின் முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகு தாவூத் தெரிவித்து உள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய செயலாளராக மு. கா தலைவரால் நிசாம் காரியப்பர் நியமிக்கப்பட்டு இருப்பது குறித்து ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையிலேயே இவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டு உள்ளார். (“மு. காவின் பேரம் பேசும் சக்தியை பலி கொடுத்தேனும் காரியப்பரை காப்பாற்ற வேண்டிய இக்கட்டில் ஹக்கீம்!” தொடர்ந்து வாசிக்க…)

கிழக்கின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம்

மியான்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும், அங்கு அவர்கள் மீதான கொடூரத் தாக்குதல்களை நிறுத்தக் கோரியும் பல்​வேறு பகுதிகளில் இன்றும்(08) ஆர்ப்பாட்டப் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டன. அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் இவ்வாறு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர். சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை, ஜம்இய்யத்துல் உலமா, மஜ்லிஸ் அஷ்ஷீறா மற்றும் பொது அமைப்புக்கள் என்பன இணைந்து ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டனர்.

(“கிழக்கின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம்” தொடர்ந்து வாசிக்க…)

ஆழ்ந்த அஞ்சலியும் – கண்டனங்களும்..

‘லங்கேஷ் பத்ரிகே’ என்ற பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் கௌரி லங்கேஷ். பல்வேறு பிரபல ஆங்கில நாளேடுகளில் பணியாற்றிய இவர் வகுப்பு வாதம், மதவாதத்துக்கு எதிராக செயல்பட்டவர். தொடர்ந்து பாஜகவுக்கு எதிராகவும், இந்துத்துவாவை எதிர்த்தும் பல்வேறு கட்டுரைகளை எழுதி வந்தார். இதனால் இந்துத்துவ அமைப்புகள் கௌரி லங்கேஷ் மீது அவதூறு வழக்குகளை தொடர்ந்தன. குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கலவரங்கள், இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட‌ போலி என்கவுன்ட்டர்கள் குறித்து ராணா அய்யூப் எழுதிய புத்தகமான ‘குஜராத் ஃபைல்ஸ்’ நூலை கன்னடத்தில் மொழி பெயர்த்தார். அச்சமின்றி இடைவிடாது பத்திரிகைப் பணியில் இயங்கிக் கொண்டிருந்த கௌரி லங்கேஷை பெங்களூரில் அவரது வீட்டு வாசலில் செவ்வாய்க்கிழமை , நான்கு மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர்.

20ஆவது திருத்தச் சட்டம் மீண்டும் நிராகரிப்பு

அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டிருக்கும் 20ஆவது திருத்தச் சட்டத்தை வட மாகாண சபை நிராகரித்துள்ளது. அதேநேரம் 20ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டால், அதனை அந்த நேரத்தில் பரிசீலிப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வட மாகாண சபையின் 105ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று (07) நடைபெற்றது. இதன்போது, அரசாங்கத்தால் புதிதாக கொண்டுவரப்பட்டிருக்கும் 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் விவாதம் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுளன்ளதாக, வட முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தின் அரசியலுக்கு புதிய இரத்தம் பாய்ச்சப்பட வேண்டும்!

நாபீர் பவுண்டேசனின் தலைவர் வலியுறுத்து –

– ரி. தர்மேந்திரன் –
அரசியல் மக்களுக்கானது, சமுதாய பற்றும், பொதுநல அக்கறையும் உடைய திறமைசாலிகளே அரசியலில் ஈடுபட வேண்டும். நாபீர் பவுண்டேசன் புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை உருவாக்குகின்ற பகீரத முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. எதிர்வரும் தேர்தல் எதுவாக இருப்பினும் அதில் நாபீர் பவுண்டசன் நிச்சயம் போட்டியிடும் என்று பிரபல தொழிலதிபரும், அரசியல் விமர்சகரும், இப்பவுண்டேசனின் தலைவருமான பொறியியலாளர் உதுமான்கண்டு நாபீர் தெரிவித்தார். இவருடனான நேர்காணல் வருமாறு:-

(“அம்பாறை மாவட்டத்தின் அரசியலுக்கு புதிய இரத்தம் பாய்ச்சப்பட வேண்டும்!” தொடர்ந்து வாசிக்க…)