வீடு திரும்பினார் பேரறிவாளன்! வரவேற்ற மக்கள் கூட்டம்! பொலிஸார் குவிப்பு! நிபந்தனைகள் விதிப்பு,

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த 26 வருடமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் இன்று பரோலில் விடுவிக்கப்பட்டு வீடு திரும்பினார். ஜோலார்ப்பேட்டையில் பேரறிவாளன் வீடு உள்ளது. வேலூர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பேரறிவாளன் பலத்த பாதுகாப்புடன் ஜோலார்ப்பேட்டை அழைத்து வரப்பட்டார்.இதனையடுத்து இரவு 9 மணியளவில் பேரறிவாளன் வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். பலத்த  பொலிஸ் பாதுகாப்புடன் அவர் சொந்த ஊருக்கு அழைத்து செல்லப்பட்டார்.

(“வீடு திரும்பினார் பேரறிவாளன்! வரவேற்ற மக்கள் கூட்டம்! பொலிஸார் குவிப்பு! நிபந்தனைகள் விதிப்பு,” தொடர்ந்து வாசிக்க…)

‘அதிகப்படியான பலம் உதவாது’

மியான்மாரின் ராக்கைன் மாநிலத்தில் காணப்படும் றோகிஞ்சா முஸ்லிம்களின் பிரச்சினைக்கு, ஏனைய விடயங்களையும் ஆராய்ந்து, அதற்குப் பதிலளிக்க வேண்டுமெனவும், அதிகப்படியான பலத்தைப் பயன்படுத்தக் கூடாது எனவும், ஐக்கிய நாடுகளின் முன்னாள் செயலாளர் நாயகம் கோபி அனான் தலைமையிலான குழு, நேற்றுத் தெரிவித்தது.

(“‘அதிகப்படியான பலம் உதவாது’” தொடர்ந்து வாசிக்க…)

இராணுவத்தினர் மீது வாள்வெட்டு: அறுவர் கைது

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊற்றுபுலம் பகுதியில், இராணுவ வீரர்கள் இருவர் மீது வாள்வெட்டு நடத்தினர் என்ற சந்தேகத்தின் பேரில், அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என, கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில், இராணுவத்தில் சேவையாற்றி விடுமுறையில் சென்ற இருவரே, காயமடைந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். (“இராணுவத்தினர் மீது வாள்வெட்டு: அறுவர் கைது” தொடர்ந்து வாசிக்க…)

வடமாகாணத்தில் புதிய அமைச்சர்கள் நியமனம்

வடமாகாணத்தின் புதிய அமைச்சர்கள், வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வைத்து, ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் இன்று( 23) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். நிதி மற்றும் திட்டமிடல்,சட்டம் மற்றும் ஒழுங்கு காணி, மின்சாரம், வீடமைப்பு மற்றும் புனரமைப்பு, சுற்றுலா, உள்ளுராட்சி, மாகாண நிர்வாகம், வீதி அபிவிருத்தி, ​மோட்டார் போக்குவரத்து அமைச்சராக வடமாகாண முதலமைச்சர் கனகசபாபதி விஸ்வலிங்கம் விக்னேஸ்வரன் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். வடமாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வு, சமூகசேவைகள்,கூட்டுறவு, வர்த்தக அபிவிருத்தி அமைச்சராக அனந்தி சசிதரனும், வடமாகாண சுகாதார சுகாதார அமைச்சராக குணசீலனும், வடமாகாண விவசாய மற்றும் கடற்றொழில் நீரியல்வள அமைச்சராக கந்தையா சிவநேசனும் தமது அமைச்சுப்பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டனர்.

மதிப்பிற்குரிய ஐயா இ.தங்கராஜா அவர்கள் நினைவாக.

மட்டக்களப்பு நாவற்குடாவினை பிறப்பிடமாகக்கொண்டு கல்லடி சிவாநந்தா வித்தியாலயத்தில் கல்வி பயின்று கொழும்புமத்திய வங்கியின் சிரேஸ்ட நிர்வாக அதிகாரியாகக் கடமையாற்றிய திரு. இளயதம்பி தங்கராஜா அவர்கள் கனடாரொரன்ரோவில் இன்று (22-8-2017) காலமானார்.

(“மதிப்பிற்குரிய ஐயா இ.தங்கராஜா அவர்கள் நினைவாக.” தொடர்ந்து வாசிக்க…)

அபிவிருத்தி சங்க பொதுக்காணியில் பொலிஸ் நிலையம் மக்கள் கவலை

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு ஒரே ஒரு காணியே உள்ளது.குறித்த காணி யுத்தம் முடிவடைந்த பின்னர் பொலிஸாரால் கையகப்படுத்தப்பட்டு அப்பகுதியில் பொலிஸ் நிலையம் இயங்கி வந்தது. தற்போது பொலிஸ் நிலையத்திற்கு என காணி வழங்கப்பட்டு அது வேறு ஓர் இடத்தில் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது.

(“அபிவிருத்தி சங்க பொதுக்காணியில் பொலிஸ் நிலையம் மக்கள் கவலை” தொடர்ந்து வாசிக்க…)

துருவங்கள் இணைந்தன: துணை முதல்வராகிறார் ஓபிஎஸ்

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் பிரிந்த இரு அணியினர் இன்று (21) ஒன்று சேர்ந்தனர். தமிழகத்தின் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியினரும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் தமது இணைவு தொடர்பான அறிவித்தலை வெளியிட்டனர். இதனடிப்படையில் தமிழகத்தின் துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கே.பாண்டியராஜனும் அமைச்சரவைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். அவருக்கு தமிழ் மொழி மற்றும் கலாசாரத்துறை அமைச்சு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘பிரதமர் பங்கேற்கும் வைபவத்தில் பங்கேற்க மாட்டேன்’

காத்தான்குடியில் நாளை நடைபெறவுள்ள நகரசபை கட்டடத் திறப்பு விழாவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அததியாய் கலந்துகொள்கிறார். இவ்விழாவில் நான் கலந்துகொள்வதில்லையெனத் தீர்மானித்துள்ளதாக, மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். காத்தான்குடியில் அமைந்துள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியில் நேற்றிரவு (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

(“‘பிரதமர் பங்கேற்கும் வைபவத்தில் பங்கேற்க மாட்டேன்’” தொடர்ந்து வாசிக்க…)

ஸ்பெய்ன் பார்சிலோனாவில் மக்கள் கூட்டத்துக்குள் பாய்ந்த வேன். 13 பேர் பலி! பலர் காயம்!

ஸ்பெய்ன் நாட்டின் சரித்திர புகழ் பெற்ற பார்சிலோனா நகரத்தின் லாஸ் ராம்ப்லாஸ் மாவட்டத்தின் (Las Ramblas district) மக்கள் நிறைந்திருந்த நடைபாதையொன்றிற்குள் வெள்ளை நிற வேன் ஒன்று வேண்டுமென்றே சற்று முன்னர் புகுந்து ஓடியதில் இதுவரை 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஸ்பெயின் நாட்டு ஊடகங்களினால் இது ஒரு பயங்கரவாத நடவடிக்கையினை வர்ணிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இதுபற்றிய உத்தியோகபூர்வமான தகவல் எதுவும் இன்னமும் வெளியாகவில்லை. இந்த மிக மோசமான தாக்குதலினால் மிகப் பலர் கடுமையான காயங்களுக்குள்ளாகியிருக்கின்றனர்.

(“ஸ்பெய்ன் பார்சிலோனாவில் மக்கள் கூட்டத்துக்குள் பாய்ந்த வேன். 13 பேர் பலி! பலர் காயம்!” தொடர்ந்து வாசிக்க…)

கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளருக்கு

தொழிற்சங்கங்கள் இரு வார கால அவகாசம்

கிழக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் நிதி சம்பந்தப்பட்ட விடயங்களை மத்தியமயப்படுத்த வேண்டிய தேவையோ, அவசியமோ கிடையாது, கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் – நிதி இத்திணைக்களம் 1990 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது முதல் 27 வருடங்களாக இருந்து வருகின்ற அற்புதமான நடைமுறையை இல்லாமல் செய்ய தான்தோன்றித்தனமாக முயற்சிக்கின்றார் என்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் குற்றம் சாட்டி உள்ளது.

(“கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளருக்கு” தொடர்ந்து வாசிக்க…)