கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு பூட்டு

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகம் தவிர்ந்த அனைத்துப் பீடங்களுளையும் இன்று (17) முதல் மறுஅறிவித்தல் வரை மூடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக, கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் கலாநிதி த.ஜெயசிங்கம் தெரிவித்தார். பல்கலைக்கழக விடுதியிலுள்ள சகல மாணவர்களும், நாளை (18) வெள்ளக்கிழமை பகல் 12 மணிக்கு முன்பு தங்களுடைய உடமைகளுடன் வீடுதிகளிலிருந்து வெளியேற வேண்டும் என்றும் அறிவித்துள்ளார். கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, பல்கலைக்கழகத்தின் பேரவை, திருகோணமலை வளாகம் தவிர்ந்த வந்தாறுமூலை வளாகம் மற்றும் மட்டக்களப்பு சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடம் ஆகியவற்றை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாணவி வித்தியா படுகொலை காரணமான சுவிஸ் குமாரை காப்பாற்ற பின்னனியில்….?

மாணவி வித்தியா படுகொலை காரணமான சுவிஸ் குமாரை காப்பாற்ற பின்னனியில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சரமான விஜயகலா மகேஸ்வரனுக்குள்ள தொடர்பு
மாணவி வித்தியா படுகொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ்குமார் கொழும்புக்கு தப்பிச் செல்ல உதவியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறிய லில் வைக்கப்பட்டுள்ள மத்திய, ஊவா மாகாணங்களுக்கு பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவின் வங்கிக்கணக்குகள் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன. இதற்கான அனுமதியை குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக கொள்ளை தொடர்பிலான விசா ரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசந்த சில்வா ஊர்காவற்றுறை பிரதான நீதிவான் மொஹம்மட் ரியாழிடம் நேற்று பெற்றுக்கொண்டுள்ளார்.

(“மாணவி வித்தியா படுகொலை காரணமான சுவிஸ் குமாரை காப்பாற்ற பின்னனியில்….?” தொடர்ந்து வாசிக்க…)

போராட்டங்களின் பின்னால் தமிழ் கடும்போக்கு சக்திகள்: மைத்திரி

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமது அரசாங்கம் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ள போதிலும் அதனை வடக்கிலுள்ள தமிழ் கடும்போக்குவாதிகள் குழப்பி வருவதாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குற்றம்சாட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மனை இன்று சந்தித்த ஸ்ரீலங்கா ஜனாதிபதி இராணுவத்தினர் வசமிருக்கும் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இடம்பெயர்ந்த மக்கள் தொடர்ச்சியாக நடத்திவரும் போராட்டங்களையும் வடக்கிலுள்ள தமிழ் கடும்போக்குவாதிகளே தூண்டி வருவதாகவும் குற்றம்சாட்டியிருக்கின்றார். (“போராட்டங்களின் பின்னால் தமிழ் கடும்போக்கு சக்திகள்: மைத்திரி” தொடர்ந்து வாசிக்க…)

‘இளஞ்செழியன் இலக்கு அல்ல’

‘நல்லூரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டது அல்ல. நீதிபதிக்கு, யாழ்ப்பாணத்தில் எந்த அச்சுறுத்தலும் இல்லை’ என யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் கனிஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ் தெரிவித்து உள்ளார். நல்லூரில், சனிக்கிழமை( 22) மாலை 5:10க்கு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

(“‘இளஞ்செழியன் இலக்கு அல்ல’” தொடர்ந்து வாசிக்க…)

இரு தரப்பினர் இன்று புறக்கணிப்பர்

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தைக் கண்டித்து வடமாகாணத்தில், இன்றுத் திங்கட்கிழமை பணிப் புறக்கணிப்புகள் இடம்பெறவுள்ளன. வடமாகாண சட்டத்தரணிகள் மற்றும் வட மாகாண தனியார் பஸ் உரிமையாளர்கள் இந்தப் பணிப் புறக்கணிப்புகளில் ஈடுபடவுள்ளனர். இந்தப் பணிப் புறக்கணிப்புத் தொடர்பில் வட இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நீதிபதியை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகமானது மிலேச்சத்தனமான செயற்பாடாகும். நல்லாட்சி அரசியல் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதனை நாம் கண்டிக்கின்றோம். நீதித்துறைக்கே இந்நாட்டில் பாதுகாப்பு இல்லையாயின் சாதாரண பொதுமக்களின் நிலை என்ன என்பதனை சிந்திக்க தலைப்பட்டுள்ளோம்.

(“இரு தரப்பினர் இன்று புறக்கணிப்பர்” தொடர்ந்து வாசிக்க…)

‘பிரபாகரனை காப்பாற்ற முயலவில்லை’

இலங்கையின் இறுதிக்கட்டப் போரில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைக் காப்பாற்ற முயன்றார் என்ற குற்றச்சாட்டை, இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவராகப் பணியாற்றிய றொபேர்ட்ஓ . பிளேக் நிராகரித்துள்ளார்.

அத்தோடு, விடுதலைப் புலிகளின் படகுகளை மூழ்கடிப்பதற்கு, ஐ.அமெரிக்கா உதவியது என்ற தகவலும் பொய்யானது எனத் தெரிவித்த அவர், எனினும், படகுகளின் இருப்பிடம் தொடர்பான தகவலை, ஐ.அமெரிக்க புலனாய்வுப் பிரிவு வழங்கியதை ஏற்றுக் கொண்டார்.

(“‘பிரபாகரனை காப்பாற்ற முயலவில்லை’” தொடர்ந்து வாசிக்க…)

மானத்தமிழன் தானே என்று இன்று மார் தட்டி பேசும் சப்ரா எம்.பி ஒரு ஈனத்தமிழன் என்று உங்களில் யாருக்கு தெரியும்?..

1981 மே 31 நல்லிரவு வேளை யாழ் நூலகம் எரித்தழிக்கப்பட்ட தமிழினத்தின் வரலாற்றுப்பண்பாட்டு படுகொலையின் சூத்திரதாரி; யார் என்று தெரியுமா?…
சரவணபாவன் எம். பியின் தந்தை ஈஸ்வரபாதம் ஐக்கிய தேசிய கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்.
சிங்கள அரசு என்று இன்று சரவணபவான் கூறி வரும் அதே அரசின் சேவகனாக தொழில் புரிந்து வந்த ஓர் போலிஸ் அதிகாரிதான் இவரது தந்தை ஈஸ்வரபாதம்.

(“மானத்தமிழன் தானே என்று இன்று மார் தட்டி பேசும் சப்ரா எம்.பி ஒரு ஈனத்தமிழன் என்று உங்களில் யாருக்கு தெரியும்?..” தொடர்ந்து வாசிக்க…)

மரண அறிவித்தல்

Obituary Overview

In Loving Memory


Passed away peacefully at the age of 90 in Mississauga. Beloved husband of Ambihai Muthulingam. Cherished father of Sukumary Vinayagamoorthy, Sukumathy Pandithan and Sujeeva Muthulingam and loving father-in-law to Sivam Vinayagamoorthy, Soma Gnanapandithan and Sutha Vinayagamoorthy. Proud grandfather to Sivani, Saishiva, Amita, Kavith, Ashna and Avinash. He will be dearly missed by many extended family members and friends here in Canada and Sri Lanka.

https://www.arbormemorial.ca/glenoaks/obituaries/santhirasegaram-muthulingam/6430/

மயிலிட்டி துறைமுகம் 27 வருடங்களின் பின் விடுவிப்பு

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள பொதுமக்களின் காணிகளில் சிலவற்றை, மக்களின் மீள்குடியேற்றத்துக்காக விடுவிக்க, படைத்தரப்பு இணங்கியுள்ளது. இது தொடர்பில், பலாலி ஊடகப்பிரிவு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில், ‘தையிட்டி வடக்கு ஜே. 249 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட 54 ஏக்கர் காணியை, மக்களின் பாவனைக்காக, எதிர்வரும் ஜூலை மாதம் 3ஆம் திகதி விடுவிப்பதற்கு, படைதரப்பு நடவடிக்கை எடுத்துள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

(“மயிலிட்டி துறைமுகம் 27 வருடங்களின் பின் விடுவிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

ஐங்கரநேசன், குருகுலராஜாவின் இடங்கள் அனந்தி, சர்வேஸ்வரனுக்கு

வடமாகாண விவசாய அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோர் இராஜினாமா செய்திருக்கும் நிலையில், புதிய அமைச்சர்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வடமாகாண அமைச்சர்கள் மீது ஆளுங்கட்சி உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முறைகேட்டுக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால், விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டு, விசாரணைகள் நடத்தப்பட்டன. இந்த விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கையின் பிரகாரம், மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா ஆகியோர், தமது பதவிகளை இராஜினாமா செய்திருந்தனர்.

(“ஐங்கரநேசன், குருகுலராஜாவின் இடங்கள் அனந்தி, சர்வேஸ்வரனுக்கு” தொடர்ந்து வாசிக்க…)