கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று 29-05-2017 மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவர்களான வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், ஆகியோர் சமூகமளிக்காத நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் அங்கஜன் இராமநாதன் இருவரின் தலைமையிலேயே இன்றையக் கூட்டம் நடைப்பெற்றது.
Category: செய்திகள்
மட்டக்களப்பிலிருந்து காலிவரை
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கென, பல்வேறு பகுதிகளிலிருந்தும் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய, மட்டக்களப்பு உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவக விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து, தங்களது முதல் தொகுதி நிவாரணப் பொருட்களை, மட்டக்களப்பு சிவில் சமூகத் தலைவர் மாமாங்க ராஜாவிடம் செவ்வாய்க்கிழமை மாலை கையளித்தனர்.
கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 201
இலங்கையின் தென்மேற்கு பகுதியில் கடந்த 25-ந்தேதி முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்து வரும் இந்த மழையால் வெள்ளப்பெருக்கும், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது. இதனால் சுமார் 5 லட்சம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும், நிலச்சரிவில் சிக்கியும், வீடுகள் இடிந்துமாக ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்து கிடந்த பலரின் உடல்கள் நேற்றும் மீட்கப்பட்டன. இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 201 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 104 பேரை காணவில்லை என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.
சாதிக்கொரு மயானம்
யாழ்ப்பாணம், புத்தூர் கிராமத்தில் நடந்த “சாதிக்கொரு மயானம்” பிரச்சினையில் தலையிட்ட சிங்களப் பொலிஸ் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளது. ஆனால், இது தொடர்பாக தமிழ்த் தேசியவாதிகள் யாரும் பொங்கி எழவில்லை. “சிங்களவனே வெளியேறு!” என்று போராட்டம் நடத்தவில்லை. அதற்கு மாறாக, தமிழ் செய்தி ஊடகங்களில் பொலிஸ் அத்துமீறலை நியாயப் படுத்தும் வகையில் செய்தி வெளியிடப் பட்டன. அங்கு இயங்கும் மார்க்சிய லெனினிசக் கட்சி, மக்களை ஒன்றுதிரட்டி போராட வைத்ததை பாராட்டாமல், “மக்களை வன்முறைக்கு தூண்டி விட்டார்கள்” என்று குற்றம் சாட்டின.
(“சாதிக்கொரு மயானம்” தொடர்ந்து வாசிக்க…)
‘நிரந்தர வழி வரும்வரை நிவாரணம் வழங்குக’
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு, நிர்க்கதிக்கு உள்ளான மக்களுக்கு நிரந்தரமான வருமான வழி கிடைக்கும் வரையிலும் நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளு -மாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதிகாரிகளைப் பணித்துள்ளார்.
(“‘நிரந்தர வழி வரும்வரை நிவாரணம் வழங்குக’” தொடர்ந்து வாசிக்க…)
Request for Flood Relief Assistance to Sri Lanka
The High Commission of Sri Lanka in Ottawa, Canada wishes to draw the urgent attention of all Sri Lankan expatriate community and well-wishers to the recent disaster in Sri Lanka due to the severe floods and landslides caused by heavy rainfall during the past few days. As a result, around 500,000 people have been affected at the moment. Please visit the Disaster Management Center (DMC) website: http://www.dmc.gov.lk/index_english.htm for regular situation updates.
(“Request for Flood Relief Assistance to Sri Lanka” தொடர்ந்து வாசிக்க…)
தனியாக சிறை செல்ல மாட்டேன் விக்னேஸ்வரனையும் அழைத்துச் செல்வேன் – ஞானசார தேரர்
நான் நினைத்தால், ஒரு மணித்தியாலத்தில் இந்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முடியும்” என்று, பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், இன்று (28) தெரிவித்தார். மேலும், “இம்முறை சிறைக்குச் செல்லும்போது, விக்னேஸ்வரன், அஸாத் சாலி, முஜிபுர் ரஹ்மான், ரிஷாட் பதியுதீன் அல்லது ரவூப் ஹக்கீம் ஆகியவர்களில் ஒருவருடனேயே செல்வேன்” எனவும் தெரிவித்தார். பொது பல சேனாவுக்கு ஆதரவான இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
(“தனியாக சிறை செல்ல மாட்டேன் விக்னேஸ்வரனையும் அழைத்துச் செல்வேன் – ஞானசார தேரர்” தொடர்ந்து வாசிக்க…)
சர்வதேசம் உதவி
மோசமான மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவ, ஐக்கிய நாடுகள், ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் முன்வந்துள்ளன. அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு, இலங்கை அரசாங்கத்தால் சர்வதேசத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு அமையவே, மேற்படி நாடுகளும் அமைப்புகளும், உதவ முன்வந்துள்ளன.
அப்பாத்துரை விநாயகமூர்த்தி இயற்கை எய்தினார்
யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி, இன்று ஞாயிற்றுக்கிழமை (28) மதியம், இயற்கை எய்தினார்.தமிழ் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக செயற்பட்டவர் பின்பு தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து அங்கேயே தங்கி தனது அரசியல் செயற்பாட்டைத் தொடரந்தவர். தமிழ் கைதிகளை விடுவிப்பதில் எந்த ஊதியமும் பெறாமல் நீதிமன்றங்களில் செயற்பட்டவர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு
மாயாவதியும் – முலாயம்சிங்கும் என்ன செய்யவேண்டும்?
மோடிக்கு நிகரானவர் யோகி
ஜாதிக்கலவரம் உத்தரப்பிரதேசத்தின் 8 மாவட்டங்களில் பரவி விட்டது, செவ்வாய்கிழமை ஒருவரின் இறுதி ஊர்வலத்தின் போது மீண்டும் கலவரம் வெடித்ததில் இரண்டு தலித் இளைஞர்கள் வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். மாநிலம் முழுவதும், இணைய தள சேவை, தொலைப்பேசி சேவை துண்டிக்கப்பட்டன. தொடர்ந்து ஜாதி வெறியர்களால் தாக்கப்பட்டு வந்த தலித் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.
(“மாயாவதியும் – முலாயம்சிங்கும் என்ன செய்யவேண்டும்?” தொடர்ந்து வாசிக்க…)