கேப்பாபுலவு காணிகள், மே 15க்கு முன் விடுவிப்பு

கேப்பாபுலவில் அமைந்துள்ள 279 ஏக்கர் காணிகள், எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதி விடுவிக்கப்படுமென, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
கடந்த வாரம், அமைச்சருக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் விளைவாகவே, கேப்பாபுலவில் உள்ள 279 ஏக்கர் காணியை, மே 15ஆம் திகதிக்கு முன்னர் விடுவிப்பதாக, பாதுகாப்பு அமைச்சு உறுதியளித்துள்ளது. அந்தவகையில், கேப்பாபுலவிலிருந்து 248 ஏக்கர் காணியும் சீனியாமோட்டையிலிருந்து 31 ஏக்கர் காணியும் விடுவிக்கப்படவுள்ளது. அத்துடன், பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கமைய, 5 மில்லியன் ரூபாய் நிதி, எமது மீள்குடியேற்ற அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்படுமிடத்து, 189 ஏக்கர் தனியார் காணிகளும், ஒரு மாத காலத்துக்குள் விடுவிக்கப்படும். இதன் பிரகாரம், மொத்தமாக 468 ஏக்கர் காணிகள், பாதுகாப்பு அமைச்சின் மூலமாக விடுவிக்கப்படும் என, மீள்குடியேற்ற அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மே-17 இயக்கம் விடுதலைப் போராட்டம்!

இலங்கையில் மீண்டும் விடுதலைப் போராட்டமொன்றை மேற்கொள்வது தொடர்பில் தமிழ்நாட்டின் மே-17 இயக்கம் ஆலோசனையொன்றை நடத்தியுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் வருடாந்த அமர்வில் இலங்கை தொடர்பில் மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அத்துடன் குறித்த அமர்வில் கலந்து கொண்டிருந்த இலங்கையின் தமிழ் அரசியல்வாதிகளை சந்தித்து உரையாடிய அவர், மீண்டும் போராட்டங்களை ஆரம்பிப்பது தொடர்பில் ஆலோசனைகளும் வழங்கியுள்ளார். தமிழ் மக்கள் சுயநிர்ணயம், தங்களைத் தாங்களே நிர்வகிக்கும் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதாயின் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் தேர்தல் முறை தொடர்பில் எந்தவொரு நம்பிக்கையும் வைக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளதாகவும் குறித்த செய்தியில் தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

5 மாணவர்கள் படுகொலை வழக்கு; 2 சாட்சிகளுக்கு அழைப்பாணை

திருகோணமலைக் கடற்கரையில் வைத்து 2006ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் திகதியன்று, இலங்கை சிறப்பு இராணுவப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 5 மாணவர்கள் படுகொலை வழக்கில், வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ள சாட்சியாளர்கள் இருவருக்கு சர்வதேச அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு, திருகோணமலை நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (28) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே, நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

(“5 மாணவர்கள் படுகொலை வழக்கு; 2 சாட்சிகளுக்கு அழைப்பாணை” தொடர்ந்து வாசிக்க…)

வடமாகாணத்தில் நாளை போராட்டங்கள்

வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்டச் செயலகங்களுக்கு முன்பாக, வேலையற்ற பட்டதாரிகளால் நாளை (30) கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இப்போராட்டங்களுக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆகியன தமது ஆதரவைத் தெரிவித்துள்ளன. கடந்த 27ஆம் திகதி முதல், வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் யாழ். மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக, காலவரையறையற்ற தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தங்களுக்கு இதுவரையில் உரிய தீர்வு கிடைக்கவில்லை எனக் கூறி, வடமாகாணத்தின் 5 மாவட்டச் செயலகங்களுக்கும் முன்பாக நாளை போராட்டங்களை நடத்தவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

அரசாங்கத்தை எச்சரிப்பதற்கு இரா. சம்பந்தன் எம்.பிக்கு சங்கரி ஐடியா

இரு வாரங்களுக்குள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாவிட்டால், எதிர்கட்சித் தலைவர் பதவியை இராஜினாமாச் செய்வேன் என, இராஜினாமாக் கடிதத்தை எழுதிவைத்துகொண்டு அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்குமாறு, எதிர்க்கட்சி தலைவரான இரா. சம்பந்தன் எம்.பிக்கு, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி ஆலோசனை வழங்கியுள்ளார்.

(“அரசாங்கத்தை எச்சரிப்பதற்கு இரா. சம்பந்தன் எம்.பிக்கு சங்கரி ஐடியா” தொடர்ந்து வாசிக்க…)

பொலிஸார் வசமுள்ள காணிகள் ‘வருட இறுதிக்குள் விடுவிக்கப்படும்’

“மட்டக்களப்பு மாவட்டத்தில், பொலிஸாரால் பயன்படுத்தப்பட்டு வரும், வெல்லாவெளி, களுவாஞ்சிக்குடி, கொக்கட்டிச்சோலை மற்றும் மயிலம்பாவெளி ஆகிய இடங்களிலுள்ள பொதுமக்களின் காணிகளை, இவ்வருட இறுதிக்குள் விடுவித்துக் கொடுக்கமுடியும்” என்று, மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் யாகொட ஆராய்ச்சி தெரிவித்தார்.

(“பொலிஸார் வசமுள்ள காணிகள் ‘வருட இறுதிக்குள் விடுவிக்கப்படும்’” தொடர்ந்து வாசிக்க…)

ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட 900 பேர் கைது

ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நேவல்னி உள்ளிட்ட 900 பேர், நேற்று முன்தினம் (26) கைது செய்யப்பட்டனர். மோசடிக்கெதிராக, தடையினை மீறி, ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையிலேயே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சொத்து சாம்ச்சியமொன்றை, இலாபமற்ற நிறுவனங்களின் நிழல் வலையமைப்பூடாக, பிரதமர் டிமித்திரி மித்வேவ் கட்டுப்படுத்துகிறார் என்ற விவரமான அறிக்கையை இம்மாதம் பிரசுரித்திருந்த நேவல்னி, ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

(“ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட 900 பேர் கைது” தொடர்ந்து வாசிக்க…)

தென்சூடானில் தாக்குதலொன்றில் ஆறு தொண்டுப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர்

தென்சூடான் தலைநகர் ஜுபாவிலிருந்து பிபோர் நகரத்துக்குச் சென்றுகொண்டிருந்தபோது, கடந்த சனிக்கிழமை (25) இடம்பெற்ற தாக்குதலொன்றில், ஆறு தொண்டுப் பணியாளர்கள் கொல்லப்பட்டதாக, ஐக்கிய நாடுகள், நேற்று முன்தினம் (26) தெரிவித்துள்ளது. எவ்வாறெனினும், கொல்லப்பட்டவர்கள், ஐக்கிய நாடுகளுக்காகப் பணியாற்றினார்களா என்று ஐக்கிய நாடுகள் குறிப்பிட்டி -ருக்கவில்லையென்பதுடன், மேலதிக விவரங்கள் எதனையும் வழங்கியிருக்கவில்லை.

(“தென்சூடானில் தாக்குதலொன்றில் ஆறு தொண்டுப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர்” தொடர்ந்து வாசிக்க…)

விமான சேவை 6இல் வழமைக்கு திரும்பும்

கட்டுநாயக்க – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவைகள், வழமைபோல எதிர்வரும் 6ஆம் திகதியில் இருந்து முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள், தற்போது இறுதிக் கட்டத்தை எய்தியுள்ளதாக விமான நிலையத்தின் பிரதான கட்டுமானப் பொறியியலாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. விமான ஓடு பாதையின் பணிகளும் நவீன தொழில்நுட்ப ரீதியான சமிக்ஞைக் கட்டமைப்பும், தற்போது பொருத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(“விமான சேவை 6இல் வழமைக்கு திரும்பும்” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கைப் பயணத்தை இரத்துச் செய்தார் ரஜினி

தமிழக அரசியல்வாதிகள் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், தனது இலங்கைப் பயணத்தை இரத்து செய்துள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வீடுகளை இழந்து தவிக்கும் ஏழை மக்களுக்காக வவுனியாவில் கட்டப்பட்ட வீடுகளைக் கையளிக்க தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகவும், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி போன்ற இடங்களுக்குச் சென்று மக்களைச் சந்திக்கத் தாம் இலங்கை செல்ல சம்மதித்ததாகவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தாம் அரசியல்வாதியல்ல எனச் சுட்டிக்காட்டியுள்ள ரஜினிகாந்த், இனிவரும் காலங்களில் இலங்கை வந்து, புனிதப்போர் நிகழ்ந்த பூமியைக் காணும் பாக்கியம் தமக்குக் கிடைத்தால், அரசியல் காரணங்களுக்காகப் போகவிடாமல் செய்து விடாதீர்கள் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.