காணாமற்போன உறவுகளின் உணவு தவிர்ப்புப் போராட்டம்

வவுனியாவில் கடந்த 19 நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் சுழ்ற்சி முறையிலான காணாமற்போன உறவுகளின் உணவு தவிர்ப்புப் போராட்டத்திற்கு இன்று (14) தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், சீடோ அறிக்கையகத்திற்கான பெண்கள் ஒன்றியம் என்பன ஆதரவு வழங்கின. வவுனியா கலாச்சார மண்டபத்திலிருந்து போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு பேரணியாக சென்று தமது ஆதரவினை இவர்கள் வழங்கியுள்ளனர். கடந்த 19 நாட்களாக சுழற்சி முறையில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டு வரும் காணாமற் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அரசியல் கைதிகளின் விடுதலை, அவசரகாலச் சட்டத்தினை உடனே இரத்துச் செய்து காணாமற் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு பதில் கூறவேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். மக்கள் பிரதிநிதிகள் குறிப்பாக ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் தமது நியாயமான போராட்டத்திற்கு நேரில் வந்து வாக்குறுதி அளிக்கும் வரையில் தமது போராட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்து வருகின்றார்கள்.

கேப்பாபுலவு அ​டையாளம் தெரியவில்லை

 

படையினர் வசமுள்ள கேப்பாப்புலவு கிராமத்தில், பொதுமக்களின் வீடுகள் பல அழிக்கப்பட்டுள்ள நிலையில், ​மக்களின் பூர்வீகக் காணிகளையும் அடையாளம் காண முடியாதவாறான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு, கேப்பாப்புலவு பிரதேசமானது, பொதுமக்களுக்குச் சொந்தமான 482 ஏக்கர் காணிகளையும் பாடசாலை, கோயில், தேவாலயம், பொதுநோக்கு மண்டபம், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் உள்ளடங்கலாக, நான்கு கிராமங்களையும் உள்ளடக்கியிருந்தது.

(“கேப்பாபுலவு அ​டையாளம் தெரியவில்லை” தொடர்ந்து வாசிக்க…)

உணவு தவிர்ப்பு போராட்டம் நிறைவு; மீண்டும் கவனயீர்ப்பு

முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் பொதுமக்களின் காணிகளை விடுவிக்க கோரி, பிரதேச மக்கள், சனிக்கிழமை (11) முதல் மேற்கொண்டு வரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம் இன்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அத்துடன், இந்தப் போராட்டம் கவனயீர்ப்பு போராட்டமாக தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முதலாம் திகதி முதல் தமது சொந்த நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் சனிக்கிழமை (11) முதல், உணவுத் தவிர்ப்பு போராட்டமாக மாற்றமடைந்தது. கேப்பாபுலவு கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட புலவுக்குடியிருப்பு, சீனியாமோட்டை, சூரிபுரம் ஆகியவற்றை போராட்டம் மூலம் பெற்றுக்கொண்ட மக்கள் பூர்வீக நிலத்தை மீட்கும் இந்த தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

பேரணிப் பிரச்சினை மோசமடைகிறது துருக்கி அமைச்சர்களை தடுத்தது நெதர்லாந்து

துருக்கியின் குடிபெயர்ந்தோர் மத்தியில் துருக்கி மேற்கொண்டுவரும் அரசியல் பிரசாரம் தொடர்பான பிரச்சினையொன்றில், றொட்டர்டாமில் துருக்கி அமைச்சர்கள் நேற்று முன்தினம் (11) பேசுவதை, நெதர்லாந்து தடுத்துள்ளது. இதனையடுத்து, எஞ்சியிருக்கும் நாஸி என நெதர்லாந்தை, துருக்கி ஜனாதிபதி தயீப் எர்டோவான் விளித்துள்ளார். றொட்டர்டாமிலுள்ள துருக்கித் துணைத் தூதரகத்துக்குள் நுழைய, துருக்கியின் குடும்ப அமைச்சர் பாத்மா பெதுல் சயான் காயா, பொலிஸாரினால் தடைசெய்யப்பட்டமையைத் தொடர்ந்தே, ஏற்கெனவெ இருந்த பிரச்சினை, பாரிய இராஜதந்திர சம்பவமாக மாறியிருந்தது.

(“பேரணிப் பிரச்சினை மோசமடைகிறது துருக்கி அமைச்சர்களை தடுத்தது நெதர்லாந்து” தொடர்ந்து வாசிக்க…)

மாணவர் ஒன்றியம் கலைக்கப்பட்டது

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கலைக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக பதிவாளர், பத்திரிகை விளம்பரம் மூலம் அறிவித்துள்ளார். பல்கலைக்கழகச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தமை மற்றும் பல்கலைக்கழக ஒழுக்க விதிகளை மீறி, கலைப்பீட பீடாதிபதி மற்றும் பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர் ஆலோசகர் ஆகியோரின் எழுத்துமூல மற்றும் வாய்மொழிமூலமாக வழங்கப்பட்ட பணிப்புரைகளை மீறியமை ஆகியவற்றுக்காக, கலைப்பீட மாணவர் ஒன்றியம், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கலைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒழுக்கவிதிகளை மீறிய மாணவர்களுக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

(“மாணவர் ஒன்றியம் கலைக்கப்பட்டது” தொடர்ந்து வாசிக்க…)

கூட்டமைப்பிலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எப் விலகும்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் இலங்கைக்கு நிபந்தனையுடன் கூடிய கால அவகாசம் வழங்குவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டமைக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப், தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

(“கூட்டமைப்பிலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எப் விலகும்?” தொடர்ந்து வாசிக்க…)

ஊழல் செய்த தென் கொரிய பெண் அதிபர் அதிரடியாக வந்த ஆப்பு !

தென் கொரிய நாட்டின் அதிபராக முதன்முதலாக ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமைக்குரியவர் பார்க் கியுன் ஹை (வயது 65). பெண்ணான இவருக்கு சோய் சூன் சில் என்ற தனது நெருங்கிய தோழியின் வாயிலாக வினை தேடி வந்தது. இந்த சோய் சூன் சில், அதிபர் பார்க்கிடம் தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி, தனது அறக்கட்டளைகளுக்கு பல கோடி டாலரை முன்னணி தொழில் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடையாக பெற்று ஊழல் புரிந்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஊழலில் பார்க் கியுன் ஹைக்கு நேரடி தொடர்பு இருந்தது; அதிலும் குறிப்பாக அவர் தனது அலுவலகத்தில் ஏற்கத்தகாத வகையில் தோழிக்கு சகல உரிமைகளையும் வழங்கி இருந்தார் என்று கூறப்படுகிறது.

(“ஊழல் செய்த தென் கொரிய பெண் அதிபர் அதிரடியாக வந்த ஆப்பு !” தொடர்ந்து வாசிக்க…)

ட்ரம்ப்பின் புதிய பயணத் தடை: முதலில் நீதிமன்றத்தில் சவால் விடுத்தது ஹவாய்

முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஆறு நாடுகளிலிருந்தான பயணத்தைக் கட்டுப்படுத்தும் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் புதிய நிறைவேற்றுப் பணிப்புரையில் அவசர நிறுத்தமொன்றை மேற்கொள்ளுமாறு, மத்திய நீதிமன்றமொன்றை, ஹவாய் மாநிலம் நேற்று (08) வினவியுள்ளது. இதனையடுத்து, புதிய தடையை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தும் முதலாவது, மாநிலமாக ஹவாய் மாறியுள்ளது.

(“ட்ரம்ப்பின் புதிய பயணத் தடை: முதலில் நீதிமன்றத்தில் சவால் விடுத்தது ஹவாய்” தொடர்ந்து வாசிக்க…)

வடமாகாண சபையில் பாதினிய செடி வளர்க்கும் விவசாய அமைச்சர்வடமாகாண சபையில் பாதினிய செடி வளர்க்கும் விவசாய அமைச்சர்

உடையார் செய்தால் குற்றமில்லை என்பது வடமாகாண சபைக்கு பொருந்தும். விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் தனது நிதி ஒதுக்கீட்டில் பல லட்சங்களை பாதினியம் ஒழிப்புக்கு செலவிடுவதாக காட்டி நிதி மோசடி செய்வது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை அலுவலகத்தில் பாதினிய செடிகள் பரவலாக காணப்படுகிறது. நீ திருந்து உலகம் தானாக திருந்தும்.

சிறீதரனின் சிறுபிள்ளை தனமும் சந்திரகுமாரின் செல்வாக்கும்

கிளிநொச்சியை வசித்த தன் குடும்பத்தை பா.உறுப்பினர் ஆனவுடன் யாழ்ப்பாணத்தில் வீடெடுத்து மாற்றினார் மனைவிக்கு பாராளுமன்றத்தால் வழங்கப்படும் பதவியை எடுத்துக்கொடுத்து வீட்டில் இருத்தினார். பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தலுக்கான இடைவெளியில் மனைவி வட்டக்கச்சி ம.விக்கு கற்பிக்க வேண்டிய சூழல் வந்தபோது இரண்டு மாதங்களுக்காக கல்வியங்காட்டுக்கு இடமாற்றம் செய்து கொண்டார். சிறீதரனின் பிள்ளைகள் யாழ்ப்பாணத்தின் புகழ்பூத்த பாடசாலைகளில் கல்வி கற்கின்றனர்.
சென்னையில் ஒரு வீட்டோடு காணி வாங்கியுள்ளார்.

(“சிறீதரனின் சிறுபிள்ளை தனமும் சந்திரகுமாரின் செல்வாக்கும்” தொடர்ந்து வாசிக்க…)