ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக் கக் கோரி மெரினாவில் நள்ளிர விலும் கொட்டும் பனியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளை ஞர்கள் போராட்டத்தைத் தொடர்ந் தனர். முதல்வர் வந்து உறுதி அளிக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
Category: செய்திகள்
இரகசிய ஆவணம் வெளியீடு: பொரிந்து தள்ளினார் ட்ரம்ப்
ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதி வேட்பாளராக இருக்கும் போது, கடந்தாண்டு ஜூலையில் ஊடகச் சந்திப்பொன்றை நடத்திய டொனால்ட் ட்ரம்ப், நாட்டின் ஜனாதிபதியாகுவதற்கச் சில நாட்கள் இருப்பதற்கு முன்னர், தனது அடுத்த ஊடகச் சந்திப்பை, நேற்று நடத்தினார்.
(“இரகசிய ஆவணம் வெளியீடு: பொரிந்து தள்ளினார் ட்ரம்ப்” தொடர்ந்து வாசிக்க…)
மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளராக சகோதர இனத்தினைச் சேர்ந்தவரை நியமிக்க முயற்சி
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மட்டக்களப்பு மாநாகரசபையின் ஆணையாளராக சிறுபான்மையினத்தினைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் இன்று நியமிக்கப்படப்போவதாகவும், இதனை ஏற்க முடியாது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் இன்று(16) திங்கட்கிழமை இதுபற்றி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டார்.
புலிகளுக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த நிதி எவ்வளவு தெரியுமா? அது சொந்தப் பணமா? அல்லது றோ கொடுத்த பணமா?
விடுதலைப் புலிகளுக்காக எம்.ஜி.ஆரிடம் நிதி உதவி கோரியபோது, 10 லட்சம் ரூபாய் தருவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், 2 கோடி ரூபாய் தருவதாக கூறியவர் எம்.ஜி.ஆர் என பிரபாகரன் தெரிவித்தாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மத நல்லிணக்கத்துடன் பொங்கல் விழா
வட்டுக்கோட்டை பிட்டியம்பதி பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் பொங்கல் தினத்தன்று (14.01.2017) இன மத நல்லுறவுக்கான பொங்கல் விழா கலாநிதி சிதம்பரமோகன் தலைமையில் நடை பெற்றது. இந் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் திரு . இளங்கோவன் , மதத் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
3 இலட்சம் டொலருடன் வரும் வெளிநாட்டவருக்கு தற்காலிக விசா
3 இலட்சம் அமெரிக்க டொலருக்கு அதிகமாக இலங்கையில் முதலிட தயாராக இருக்கும் வௌிநாட்டு பிரஜைக்கு, இந்த நாட்டில் 5 வருடங்களுக்கு தங்கியிருப்பதற்கான விசா வழங்கப்படும்” என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நிதியமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, அவர் இதனைக் கூறியுள்ளார்.
(“3 இலட்சம் டொலருடன் வரும் வெளிநாட்டவருக்கு தற்காலிக விசா” தொடர்ந்து வாசிக்க…)
40 இலங்கை அகதிகள் இன்று நாடு திரும்புகின்றனர்
தமிழ்நாட்டில் உள்ள அகதி முகாம்களில் தங்கவைக்கபட்டிருந்த இலங்கை அகதிகள் 40 பேர் இன்று இலங்கையை வந்தடையவுள்ளனர். ஐக்கிய நாடுகளிள் அகதிகளுக்காக உயர்ஸ்தானிகர் மேற்கொண்ட நடவடிக்கைகையை அடுத்து இவர்கள் நாடு திரும்பவுள்ளனர். 14 குடும்பங்களை சேர்ந்த இந்த அகதிகள், திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கை நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
(“40 இலங்கை அகதிகள் இன்று நாடு திரும்புகின்றனர்” தொடர்ந்து வாசிக்க…)
மனிதம் இன்னும் வாழ்கிறது! நிரூபித்தனர் தமிழர்கள் உள்ளிட்ட குவைத் வாழ் மக்கள்!! குவிந்தன குளிர் ஆடைகளுடன் நிவாரண பொருட்கள்!!!
உள்நாட்டு போரின் பிடியில் சிக்கியுள்ள சிரியாவில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இலட்சக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். சிரியாவின் பெரிய நகரம் அலெப்பா. இங்குதான் அதிக அளவில் தாக்குதல் நடக்கிறது. அங்குள்ள மருத்துவமனை தாக்கப்பட்டு மருத்துவக் கருவிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு விட்டன. ஆனால், போரில் காயமடையும் மக்கள் அந்த மருத்துவமனையை நோக்கித்தான் ஓடுகிறார்கள். இந்த அபலை மக்களின் துயரங்களுக்கு அங்குள்ள இந்த மருத்துவமனையும் சில மருத்துவர்களும்தான் ஆறுதல். காயம்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய கட்டில் இல்லாத காரணத்தால் அவர்களை தரையில் படுக்க வைத்து அறுவை சிகிச்சை செய்கிறார்கள் மருத்துவர்கள்.
நடிகையுடன் மோதுகிறார் ட்ரம்ப்
ஐக்கிய அமெரிக்காவின் சிறந்த திரைப்படங்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் அங்கிகரிப்பதற்கான கோல்டன் குளோப் விருது வழங்கும் நிகழ்வில், நடிகை மெரைல் ஸ்ட்ரீப் ஆற்றிய உரையைத் தொடர்ந்து, அவருக்கெதிரான கருத்துகளை, ஐ.அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளிப்படுத்தியுள்ளார். இதில், வாழ்நாள் சாதனையாளர் விருதை வென்ற மெரைல், அந்த மேடையைப் பயன்படுத்தி, ஊடகவியலாளர்களுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் அங்கவீனமாவர்களுக்கும் ஆதரவான கருத்தை வெளிப்படுத்தினார்.
இனிய உழவர் தின வாழ்த்துகள்
அனைத்து சூத்திரம் இணையத்தள வாசகர்கள் நண்பர்கள் தோழர்களுக்கு இனிய உழவர் தின வாழ்த்துகள்