தேசிய பட்டியல் ஆசனம் புளொட்டுக்கு உரியது

வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கான சுழற்சி முறை தேசிய பட்டியல் ஆசனம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)க்கு உரியது என்று, அக்கட்சியின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

(“தேசிய பட்டியல் ஆசனம் புளொட்டுக்கு உரியது” தொடர்ந்து வாசிக்க…)

பிரித்தானியாவில் தொங்கு நாடாளுமன்றம்?

பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு நேற்று முடிவடைந்த நிலையில், இன்று வாக்குகள் எண்ணும் பணிகள் இடம்பெற்றன. இதில், பிரதமர் தெரசா மே தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், ஜெர்மி கார்பின் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும் இடையில் போட்டி நிலவியது. முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், தொழிலாளர் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. ஆனால், இறுதியில் கன்சர்வேட்டிவ் கட்சி, தொழிலாளர் கட்சியை விட சுமார் 50 இடங்களை அதிகம் வெற்றி பெற்றுள்ளது.

(“பிரித்தானியாவில் தொங்கு நாடாளுமன்றம்?” தொடர்ந்து வாசிக்க…)

இலண்டனில் தாக்குதல்கள்: 6 பேர் பலி ; 30 பேர் காயம்

ஐக்கிய இராச்சியத்தின் தலைநகரான இலண்டனின் மத்திய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 2 தாக்குதல்களில், 6 பேர் கொல்லப்பட்டதோடு, 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தவிர, தாக்குதல்களை மேற்கொண்ட 3 பேரும் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல்கள், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 2:38 மணிக்கு (ஐ.இராச்சிய நேரப்படி நேற்று முன்தினம் இரவு 10:08) ஆரம்பித்துள்ளன.

(“இலண்டனில் தாக்குதல்கள்: 6 பேர் பலி ; 30 பேர் காயம்” தொடர்ந்து வாசிக்க…)

அனர்த்தங்களின் பின்னரான நோய்களிலிருந்து எவ்வாறு தப்புவது?

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை, தற்போது சற்றுத் தணிந்துள்ள நிலையில், அவ்வாறான அனர்த்தங்களின் பின்னர் ஏற்படக்கூடிய நோய்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளதென, சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறான நோய்களிலிருந்து பாதுகாப்புப் பெறவேண்டுமாயின், சில நடைமுறைகளைப் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

(“அனர்த்தங்களின் பின்னரான நோய்களிலிருந்து எவ்வாறு தப்புவது?” தொடர்ந்து வாசிக்க…)

‘என் மீது பாய்ந்து தாக்கினர் அதனால் பார்வை இழந்தேன்’ – டக்ளஸ் தேவானந்தா

“களுத்துறை சிறைச்சாலையில் இடம்பெற்ற கைதிகளின் உண்ணாவிரதத்தை நிறுத்துமாறு கூறுவதற்குச் சென்ற என்னை, சிறைக் கூடமொன்றுக்குள் வைத்து கைதிகள் சிலர், பாய்ந்து தாக்கினர்” என, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, கொழும்பு மேல் நீதிமன்றத்தில், நேற்று (01) சாட்சியமளித்தார்.

(“‘என் மீது பாய்ந்து தாக்கினர் அதனால் பார்வை இழந்தேன்’ – டக்ளஸ் தேவானந்தா” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கின் உதவிக்கரங்கள்…

நாட்டில் ஏற்பட்டிருந்த அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக, வடமாகாணத்தைச் சேர்ந்த பொதுமக்கள், அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் என்பவற்றினால் அளிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய வாகனங்கள், இன்று பிற்பகல் 2 மணியளவில், வடமாகாண ஆளுநர் அலுவலகத்திலிருந்து, தெற்கை நோக்கிப் புறப்பட்டன. வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் தலையீட்டின் கீழ், இந்த நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Tamil Mirror)

யாழ். வாள்வெட்டு சூத்திரதாரிகள் இந்தியாவில் கைது

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கொலை, வாள்வெட்டு மற்றும் சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் இருவர், படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்ற நிலையில், திருச்சியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும், தமிழக காவல்துறையினரால் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். எனினும், வாள்வெட்டுக் குழுவின் பிரதான சூத்திரதாரி கைது செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

(“யாழ். வாள்வெட்டு சூத்திரதாரிகள் இந்தியாவில் கைது” தொடர்ந்து வாசிக்க…)

இதை சொன்னால்தான் அமெரிக்காவுக்கு செல்லாமாம்

அமெரிக்கா வீசாவை எதிர்பார்க்கும் வௌிநாட்டவர்களுக்கு, அவர்கள் கடந்த 5 வருடங்களில் பயன்படுத்திய சமூகவலைத்தள பெயரை வௌியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சட்டத்தின் கீழ், இது கட்டாயமாக்கப்படும். இது குறித்த சட்டத்துக்கு, கடந்த 23ஆம் திகதி ​​அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் தலைமையிலான அரசாங்கத்ததால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

(“இதை சொன்னால்தான் அமெரிக்காவுக்கு செல்லாமாம்” தொடர்ந்து வாசிக்க…)

கவிக்கோ அப்துல் ரஹ்மான் காலமானார்

கவிக்கோ அப்துல் ரஹ்மான் உடல் நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை, தனது 80ஆவது வயதில் காலமானார். மூச்சுத்திணறல் காரணமாக, சென்னையில் உள்ள அவரது வீட்டில் அதிகாலை 2 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. பல்வேறு படைப்புகளுக்கு சொந்தக்காரரான கவிக்கோ அப்துல் ரஹ்மான், சினிமாவுக்கு பாடல்களை எழுத மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தார். கவிக்கோவுக்கு, சினிமாவில் இடம் பெறும் குத்துப்பாட்டுகள் பிடிப்பதில்லை.

(“கவிக்கோ அப்துல் ரஹ்மான் காலமானார்” தொடர்ந்து வாசிக்க…)

’கடமையை மறந்த தமிழ்த் தலைமைகள்’

தற்போது நாட்டில் நிலவும் இயற்கை அனர்த்தங்களின் போது, எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தங்களது கடமைகளைப் புறக்கணித்துள்ளனர் என்று, பிவிதுரு ஹெல உறுமய கட்சி, குற்றஞ்சாட்டியுள்ளது.

(“’கடமையை மறந்த தமிழ்த் தலைமைகள்’” தொடர்ந்து வாசிக்க…)