தனி நபர்களோ, குழுக்களோ சட்டத்தைக் கையில் எடுக்க முடியாது!

தோப்பூர் சம்பவம் மற்றும் வென்னப்புவ வியாபார நிலையத் தீ பற்றி அமைச்சர் ரிசாத்

(எஸ். ஹமீத்)

”இந்த நாட்டில் வாழும் அனைத்து இன மக்களினதும் வாழ்விட உரிமைகள் சட்டத்தினால் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. நாட்டின் சட்டத்தைப் பாதுகாப்பதற்கு அரசாங்கமும் பொலிஸாரும் தேவையேற்படும் பட்சத்தில் முப்படையினரும் இருக்கின்றனர். எனவே, தனி நபர்களோ அல்லது குழுக்களோ சட்டத்தைத் தமது கைகளில் எடுத்துக் கொண்டு செயற்படுவதை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது.”

(“தனி நபர்களோ, குழுக்களோ சட்டத்தைக் கையில் எடுக்க முடியாது!” தொடர்ந்து வாசிக்க…)

ஐ.நா அறிக்கையை நிராகரித்தது மியான்மார் இராணுவம்

ரோகிஞ்சா முஸ்லிம்கள் மீது, மியான்மார் இராணுவத்தினால் கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டன என்று ஐக்கிய நாடுகள் அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுகளை, மியான்மார் இராணுவம், இன்று (23) நிராகரித்துள்ளது.

(“ஐ.நா அறிக்கையை நிராகரித்தது மியான்மார் இராணுவம்” தொடர்ந்து வாசிக்க…)

பிரசாரக் குழுவுக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான தொடர்பை மறுக்குமாறு கோரிய ட்ரம்ப்

தனது பிரசாரக் குழுவுக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான தொடர்புகள் குறித்து எந்தவித ஆதாரமுமில்லை என பொதுவெளியில் தெரிவிக்குமாறு, சிரேஷ்ட புலனாய்வு அதிகாரிகள் இருவரை, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இவ்வாண்டு மார்ச்சில் கோரியதாக, முன்னாள், இந்நாள் அதிகாரிகளை மேற்கோள்காட்டி, வொஷிங்டன் போஸ்ட், நேற்று (22) செய்தி வெளியிட்டுள்ளது.

(“பிரசாரக் குழுவுக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான தொடர்பை மறுக்குமாறு கோரிய ட்ரம்ப்” தொடர்ந்து வாசிக்க…)

பிரிட்டன் மன்செஸ்டரில் பயங்கர குண்டு வெடிப்பு! 19 பேர் மரணம்! 50ற்கு அதிகமானோர் படு காயம்!

நேற்றிரவு பிரித்தானிய நேரம் சுமார் 10.30 மணியளவில் மன்செஸ்டர் நகரில் நடைபெற்றுக் கொண்டிருந்த இசை நிகழ்ச்சியொன்றில் பாரிய குண்டு வெடித்து, இச் செய்தி எழுதும் வரை 19 பேர் பலியாகியுள்ளனர். 50ற்கும் அதிகமானோர் படுகாயங்களுக்குள்ளாகியிருக்கின்றனர்.

(“பிரிட்டன் மன்செஸ்டரில் பயங்கர குண்டு வெடிப்பு! 19 பேர் மரணம்! 50ற்கு அதிகமானோர் படு காயம்!” தொடர்ந்து வாசிக்க…)

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் மனோகணேசன்…சிவாஜிலிங்கம் காட்டம்

தேசிய சுகவாழ்வு, நல்லிணக்க அமைச்சர் மனோகணேசன் பொதுபலசேனாவோடு தன்னை இணைத்து பேசியதற்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். அத்துடன் அமைச்சர் மனோகணேசன் நாகரிகமான முறையில் பேசுவதற்கு பழகிகொள்ள வேண்டும் எனவும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

(“மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் மனோகணேசன்…சிவாஜிலிங்கம் காட்டம்” தொடர்ந்து வாசிக்க…)

ஈரான் தேர்தல்: அமோக வெற்றி பெறுகிறார் ஹசன் ரூஹானி!

ஏறத்தாழ எல்லா வாக்குகளும் எண்ணப்பட்டிருக்கும் நிலையில் 68 வயதான ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி 22 .9 மில்லியன் வாக்குகள் பெற்று மீண்டும் ஈரானின் ஜனாதிபதியாக வாய்ப்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட 56 வயதான இப்ராஹீம் ரைசி இதுவரை 15 .5 மில்லியன் வாக்குகளையே பெற்றிருக்கிறார்.

(“ஈரான் தேர்தல்: அமோக வெற்றி பெறுகிறார் ஹசன் ரூஹானி!” தொடர்ந்து வாசிக்க…)

கோமி விவகாரம்: கருத்து முரண்பாடுகள் தொடர்கின்றன

ஐக்கிய அமெரிக்காவின் புலனாய்வுக் கூட்டாட்சிப் பணியகத்தின் (எப்.பி.ஐ) பணிப்பாளராக இருந்த ஜேம்ஸ் கோமியை, அப்பதவியிலிருந்து நீக்கியமை தொடர்பாக, மாறுபட்ட கருத்துகள், தொடர்ச்சியாக வெளியாகிக் கொண்டுள்ளன. அவரைப் பதவியிலிருந்து நீக்கிய பின்னர், ரஷ்ய வெளிநாட்டமைச்சர் சேர்ஜெய் லவ்ரோவ், ரஷ்யத் தூதுவர் சேர்ஜெய் கிஸ்லியாக் ஆகியோரைச் சந்தித்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பணிப்பாளர் கோமியை நீக்கியமை தொடர்பாக அவர்களோடு கலந்துரையாடியதாகவும், அதன்போது கோமியை, “கிறுக்கர்” என்று வர்ணித்ததாகவும், அவரைப் பதவியிலிருந்து நீக்கியமையால், “அழுத்தம் நீங்கும்” எனத் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

(“கோமி விவகாரம்: கருத்து முரண்பாடுகள் தொடர்கின்றன” தொடர்ந்து வாசிக்க…)

இன்று பிற்பகல் வடகொரியா ஏவிய ”இனம்புரியாத” ஏவுகணை!

வடகொரியாவின் நேரப்படி இன்று பிற்பகலில் இனம்புரியாத ஏவுகணையொன்றை வட கொரியா வானில் ஏவியுள்ளதாக தென்கொரியா மற்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த திங்கட்கிழமை வடகொரியா ஏவிய Hwasong-12 என்ற ஏவுகணை 700 கிலோ மீற்றர் தூரம் சென்றதாகவும் இன்று ஏவப்பட்ட இனம்புரியாத ஏவுகணை 500 கிலோ மீற்றர் தூரம் வரை சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வருடத்தில் வடகொரியாவினால் ஏவப்பட்ட 10 ஆவது ஏவுகணை இது என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சரவை மறுசீரமைப்பு விவரம்

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள்

1. மங்கள சமரவீர: நிதி மற்றும் ஊடகம்
2. எஸ்.பி.திஸாநாயக்க: சமூகமேம்பாடு, நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமை
3. டப்ளியு.டி.ஜே. செனவிரத்ன: தொழிலாளர், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சப்ரகமுவ அபிவிருத்தி
4. ரவி கருணாநாயக்க: வெளிவிவகாரம்
5. மஹிந்த சமரசிங்க: துறைமுகம் மற்றும் கப்பல்துறை
6. கயந்த கருணாதிலக்க: காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு
7. அர்ஜுன ரணதுங்க: பெற்றோலிய வளத்துறை அபிவிருத்தி அமைச்சர்
8. சந்திம வீரக்கொடி: திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி
9. திலக் மாரப்பன: அபிவிருத்தி பணிகள்

இராஜாங்க அமைச்சர
10.மஹிந்த அமரவீர: மகாவலி அபிவிருத்தி

கொழும்பில் தொலைக்காட்சி செய்தி வாசிக்கும் பெண் கடத்தப்பட்டு நிர்வாணமாகப் படம் பிடிக்கப்பட்டார்…

கொழும்பில் பிரபல தொலைக்காட்சி நிலையம் ஒன்றில் செய்தி வாசிப்பாளராகக் கடமையாற்றும் பெண்ணொருவர் இனம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு, நிர்வாணமாக்கப்பட்டுப் புகைப்படம் எடுக்கப்பட்டு, நகைகளும் கொள்ளையடிக்கப்பட்ட பின்னர் நடுவீதியில் இறக்கிவிடப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
(“கொழும்பில் தொலைக்காட்சி செய்தி வாசிக்கும் பெண் கடத்தப்பட்டு நிர்வாணமாகப் படம் பிடிக்கப்பட்டார்…” தொடர்ந்து வாசிக்க…)