வடமத்திய மாகாண சபையில் பெரும்பான்மையானோர் ஒன்றிணைந்த எதிரணிக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய, இது தொடர்பில் வடமத்திய மாகாண ஆளுநருக்கு எழுத்து மூலம் அறிவிக்க அவர்கள் தயாராக உள்ளனர். மேலும், வட மாகாண சபையில் 33 உறுப்பினர்கள் உள்ளனர். அதில் 21 பேர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் ஆவர். மிகுதி 11 பேர் ஐக்கிய தேசிய கட்சியையும் மேலும் ஒருவர் ஜே.வி.பியையும் பிரதிநிதித்தவப்படுத்துபவர்கள் ஆவர். இதில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களில் 17 பேர் ஒன்றிணைந்த எதிரணிக்கு ஆதரவு வழங்கி தனித்து செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Category: செய்திகள்
அமெரிக்காவின் அழுத்தத்தை நம்பியிருக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரன்
ஜெனீவா தீர்மானங்களை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தங்களை, சர்வதேச அரசாங்கங்கள் வழங்க வேண்டுமென, ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் உறுப்பினரான பில் ஜோன்சனிடம் வலியுறுத்தியுள்ளதாக, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
(“அமெரிக்காவின் அழுத்தத்தை நம்பியிருக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரன்” தொடர்ந்து வாசிக்க…)
குமுதினி படகு படுகொலை 32 ஆண்டுகள்
இலங்கையில் விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட எண்ணிலடங்காத சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த சம்பவங்கள் அனைத்தும், இன்று வரையிலும் தமிழ் மக்களின் ஆழ் மனதில் பதிந்துள்ள நிலையில், 1985ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி இடம்பெற்ற படுகொலை சம்பவம் யாராலும் மறக்க முடியாத ஒன்றாகும்.
அடங்காத வட கொரியா நேற்றுமோர் ஏவுகணையை அனுப்பியது!
அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது, ஐக்கிய நாடுகள் சபையின் கண்டனங்களுக்குச் செவி மடுக்காது, சீனாவின் ஆலோசனைகளுக்கு மதிப்பளிக்காது, ஐரோப்பிய நாடுகளின் எதிர்ப்பலைகளைக் கவனத்திற் கொள்ளாது வட கொரியா நேற்று ஞாயிற்றுக் கிழமையும் ஓர் ஏவுகணையை வானில் செலுத்தியுள்ளது.
(“அடங்காத வட கொரியா நேற்றுமோர் ஏவுகணையை அனுப்பியது!” தொடர்ந்து வாசிக்க…)
“மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் மயானம் வேண்டாம்
“மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் மயானம் வேண்டாம் அல்லது மயானங்களை நவீனப்படுத்துங்கள்“ என்ற கோரிக்கையை முன்வைத்து 13.05.2017 இன்று யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்தது. ஏராளமான பெண்களும் இளைய தலைமுறையினரும் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்திருந்தனர். பலரிடமும் இந்தப் பிரச்சினை தொடர்பான தெளிவான புரிதல் இருந்தது. புதிய சனநாயக மார்க்சிச-லெனினிசக் கட்சி (New-Democratic Marxist-Leninist Party, NDMLP) யின் செயலாளர் சி. கா. செந்தில்வேல், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் செயலர் சுகு ஸ்ரீதரன் ஆகியோர் உள்பட பலரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு இந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேசினார்கள்.
(““மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் மயானம் வேண்டாம்” தொடர்ந்து வாசிக்க…)
போரின் மடியில்
14.05.2009 போரின் போது முள்ளிவாய்க்காலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு தப்பிச் செல்லும் போது புலிகளின் குண்டுத் தாக்குதலுக்கு பலியான எனது பெறாமகள் சர்மியா . முள்ளிவாய்க்காலிருந்து வட்டுவாகல் வந்து நீரேரியைக் கடக்க மரத்தின் கீழ் இருக்கும் போது புலிகளின் குண்டுகள் தப்பிச் செல்லும் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்டது.அப்போது இவளின் பின் மண்டையில் குண்டு பாய்ந்து மூளை சிதறி சாகடிக்கப்பட்டாள். உடலை அந்த இடத்திலேயே போட்டு விட்டு ஏனைய உயிர்களைக் காப்பாற்ற சில நிமிடங்களே தாய் மடியில் வைத்து அழுதுவிட்டு கடைசியாக தனது மகளை மரத்தினடியில் போட்டு விட்டு தப்பியோடி வாழ்ந்து கொண்டிருக்கும் நிலை .அந்த நேரத்தில் பல உயிர்கள் சாகடிக்கப்பட்டு அப்படியே உடல்கள் ஆங்காங்கே கைவிடப்பட்டன. போர் தந்த சிறந்த பாடம் தமிழ் மக்களுக்கு .அவளின் நினைவு தினம் இன்று.
(Kala)
இலங்கையில் மோடியை வேவு பார்த்த மர்ம இளைஞர்…!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி பயணித்த வாகன பேரணியில் யாருக்கும் தெரியாமல் தானும் கலந்து கொண்டு அவரைப் பின் தொடர்ந்து வேவு பார்த்தவரென நம்பப்படும் மர்ம நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நரேந்திர மோடியுடன் பயணித்த பிரபுக்களுக்கான பாதுகாப்பு பிரிவு மோட்டார் சைக்கிள்களுடன் தானும் இணைந்து சந்தேகத்திற்கிடமாக பயணித்த அந்த இளைஞர் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. அவரது பெயர் W.A.D. டில்ஷான் என்றும் தெரிய வருகிறது. அந்த மர்ம இளைஞர் இளைஞர் கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 25 ஆயிரம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேசப்பிதா நடேசையரின் கனவு நனவாகிறது – மனோ கணேசன்
மலையகத்தில் சொந்த காணியுடன் கூடிய புதிய மலையக கிராமங்கள் உருவாக வேண்டும் என்று, 75 ஆண்டுகளுக்கு முன்னரே கனவு கண்டு, பிரசாரம் செய்து போராடிய, மலையக தேசப்பிதா நடேசையரின் தேசிய கனவு, இன்று படிபடியாக நிறைவேறி வருகிறது என்று, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்ட சந்திப்பு குறித்து, வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
(“தேசப்பிதா நடேசையரின் கனவு நனவாகிறது – மனோ கணேசன்” தொடர்ந்து வாசிக்க…)
இலங்கை சென்றடைந்தார் இந்தியப் பிரதமர் மோதி
சர்வதேச வெசாக் தின நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோதி இலங்கை வந்துள்ளார். வியாழக்கிழமை மாலை கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்த இந்திய பிரதமரை இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்பட அமைச்சர்கள் வரவேற்றனர். இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய பிரதமர் நாளை கொழும்பில் நடைபெறவுள்ள சர்வதேச வெசாக் தின நிகழ்வுகளில் கலந்துகொள்வார்.
(“இலங்கை சென்றடைந்தார் இந்தியப் பிரதமர் மோதி” தொடர்ந்து வாசிக்க…)
நம்ப முடியாது; ஆனாலும் உண்மை! ஈரானில் ஒரு லயனல் மெஸ்ஸி!
அச்சு அசலாக அந்த இளைஞர் உலகப் பிரபல உதைப்பந்தாட்ட வீரர் லயனல் மெஸ்ஸி போலவே இருக்கிறார். அவர் ஈரானைச் சேர்ந்தவர். அவரது பெயர் ரிசா பர்தேஷ். சமயங்களில் ரிசா பர்தேஷ் பார்சிலோனா வீரர் லயனல் மெஸ்ஸியின் உதைப்பந்தாட்டத்திற்கான மேலங்கியைப் போன்ற 10 இலக்கம் கொண்ட சட்டையை அணிந்து கொண்டே வெளியில் செல்கிறார். அப்போதெல்லாம் அவருக்கும் மெஸ்ஸிக்குமிடையில் எந்த வித்தியாசத்தையும் காண முடியாமலிருப்பதால், ஈரானியத் தெருக்களில் அவரைக் காண மக்கள் கூட்டம் திரண்டு விடுகிறது. இது பொலிஸாருக்கு மிகுந்த தொல்லையையும் கொடுக்கிறது. அதனால் அவரைச் சமயங்களில் போலீஸ் வாகனத்தில் ஏற்றி போலீஸ் நிலையத்துக்கே கொண்டு போகிறார்களாம் ஈரானியப் போலீசார்.
(“நம்ப முடியாது; ஆனாலும் உண்மை! ஈரானில் ஒரு லயனல் மெஸ்ஸி!” தொடர்ந்து வாசிக்க…)