முப்படைகளின் உயர்பொறுப்பை ஏற்க பொன்சேகாவுக்கு அழைப்பு

நாட்டின் சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக முப்படைகளில் அதியுட்ச பொறுப்பை ஏற்பதற்கு முன்னாள் இராணுவ தளபதியும் பிரதேச அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. அதற்கான அதிகாரங்களுடன் உரிய பதவியை வழங்கினால் தனக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு சரத் பொன்சேகா சம்மதம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றபோது, அவர் இதனைக் கூறினார்.

வட கொரியாவின் ஏவுகணை 10 நிமிடங்களில் ஜப்பானுக்கு…!

அவசர அவசரமாக ஜப்பான் நாட்டின் அரசாங்கம் தங்கள் நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கியுள்ளது. ஜப்பானின் குடிமக்களுக்கான பாதுகாப்பு வலைத்தளத்தில், வடகொரியா ஏவுகணை தாக்குதல் நடத்தினால், ஜப்பான் மக்கள் எல்லோரும் உறுதியான கொங்கிறீட் இடமாகப் பார்த்துப் பாதுகாப்பாக இருந்து கொள்ளுமாறும் ஜன்னல்களுக்கு அருகில் எவரும் நின்று கொண்டிருக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

(“வட கொரியாவின் ஏவுகணை 10 நிமிடங்களில் ஜப்பானுக்கு…!” தொடர்ந்து வாசிக்க…)

‘பெயர்’ மாற்றம் வேண்டாம்

வவுனியா வடக்கில் உள்ள புராதனக் கிராமங்களின் பெயர்களை எக்காரணம் கொண்டும் மாற்றவேண்டாமென, வவுனியா வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பிரதேச செயலகத்தில் நேற்று (25) இடம்பெற்றது. இதன்போதே, மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டது.

(“‘பெயர்’ மாற்றம் வேண்டாம்” தொடர்ந்து வாசிக்க…)

”அமெரிக்கப் போர்க் கப்பலை ஒரே அடியில் மூழ்கடிப்போம்!” வட கொரியா சூளுரை!

”அமெரிக்க அணு சக்தி விமானம் தாங்கிக் கப்பலை ஒரே அடியில் மூழ்கடித்து அழிப்பதற்கு எங்களின் புரட்சிப் படைகள் தயாராகவே உள்ளன. பெரிய விலங்கு என்று எம்மாற் கூறப்படும் அதனை அழிப்பதன் மூலம் எங்கள் இராணுவத்தின் சக்தியை அமெரிக்காவுக்கு எடுத்துரைப்போம்!” என்று வடகொரியாவின் ஆளுங்கட்சியான தொழிலாளர் கட்சியின் பத்திரிகையான நோடாங் ஷின்முன் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது செய்தியிற் கூறியிருக்கிறது.

(“”அமெரிக்கப் போர்க் கப்பலை ஒரே அடியில் மூழ்கடிப்போம்!” வட கொரியா சூளுரை!” தொடர்ந்து வாசிக்க…)

மலேரியா அற்ற நாடு இலங்கை : மகிழ்ச்சி! டெங்கு நிறைந்த நாடு இலங்கை : துக்கம்!

(எஸ். ஹமீத்)

மலேரியா அற்ற நாடாக நான்காவது முறையாகவும் இலங்கை தெரிவாகி இருப்பதானது வரலாற்றிலேயே முதன்முறை என்றும், இலங்கையின் சுகாதார வளர்ச்சியில் இது ஒரு மைல்கல் வெற்றி என்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். மலேரியா நோய் பற்றிய விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு ஒன்று இன்று கொழும்பில் நடைபெற்ற போதே அமைச்சர் மேற்சொன்ன செய்தியைத் தெரிவித்துள்ளார்.

(“மலேரியா அற்ற நாடு இலங்கை : மகிழ்ச்சி! டெங்கு நிறைந்த நாடு இலங்கை : துக்கம்!” தொடர்ந்து வாசிக்க…)

கனடாவில் பாலியல் சாத்திரம் பார்த்த முனியப்பா! இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார் இனியப்பா!!

(எஸ். ஹமீத்)

தன்னிடம் ஆன்மீக சக்தி நிறைந்திருப்பதாகச் சொல்லி சாத்திரம் பார்ப்பதில் ஈடுபட்டுப் பல பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய இலங்கையையைச் சேர்ந்த பாஸ்கர் முனியப்பா என்பவரைக் கனேடிய பொலிஸார் விரைவில் இலங்கைக்கு நாடு கடத்தவுள்ளனர்.

(“கனடாவில் பாலியல் சாத்திரம் பார்த்த முனியப்பா! இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார் இனியப்பா!!” தொடர்ந்து வாசிக்க…)

‘சம்பந்தன் செல்லும் பாதையில் கண்களை மூடிக்கொண்டு செல்வோம்’ – சித்தார்த்தன்

“ஈழத் தமிழ் அரசியலில் எத்தகைய முரண்பாடுகள், மாற்றங்கள் ஏற்பட்டாலும் அரசியலமைப்பு முயற்சிகள் முடிவுறும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தலைவர் சம்பந்தனையும் விட்டு விலகமாட்டோம்.அதுவரை அவர் செல்லும் பாதையில் கண்களை முடிக்கொண்டு செல்வோம்” என்று, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

(“‘சம்பந்தன் செல்லும் பாதையில் கண்களை மூடிக்கொண்டு செல்வோம்’ – சித்தார்த்தன்” தொடர்ந்து வாசிக்க…)

நலிந்த விவசாயிகள் 10 பேருக்கு உதவிய பிரசன்னா – சினேகா

நலிந்த விவசாயிகள் 10 பேருக்கு பிரசன்னாவும், சினேகாவும் ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் டெல்லியில் கடந்த 41 நாட்களாக போராட்டம் நடத்தினர். இவர்களுக்கு பல தரப்பில் இருந்தும் ஆதரவு பெருகியுள்ளது. விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் இதன் மூலம் பலருக்கு ஏற்பட்டுள்ளது.

(“நலிந்த விவசாயிகள் 10 பேருக்கு உதவிய பிரசன்னா – சினேகா” தொடர்ந்து வாசிக்க…)

டொனால்ட் ட்ரம்ப் ஒரு மன நோயாளி! முழு உலகும் ஆபத்தில்! உளவியல் நிபுணர்கள் அதிர்ச்சித் தகவல்!

(எஸ். ஹமீத்)

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்ஒரு மிக மோசமான மன நோயாளியென்றும் அவர் கடுமையான மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க உளவியல் நிபுணர்கல் குழுவினர் அதிர்ச்சி தரக்கூடிய செய்தியை வெளியிட்டுள்ளனர். இந்த அதிர்ச்சிச் செய்தியினால் அமேரிக்கா மட்டுமல்ல, கிட்டத்தட்ட முழு உலகமும் ஆடிப் போயுள்ளது.

(“டொனால்ட் ட்ரம்ப் ஒரு மன நோயாளி! முழு உலகும் ஆபத்தில்! உளவியல் நிபுணர்கள் அதிர்ச்சித் தகவல்!” தொடர்ந்து வாசிக்க…)

மனோ கணேசனும் நெடியவனும்

சிங்கள அரசுடன் கைகோர்த்த புலம்பெயர் புலிகளின் பிரதிநிதிகள். கனடா, நோர்வே போன்ற பல நாடுகளில் இருந்து அரசின் அழைப்பின் பேரில் சென்று, அமைச்சர் மனோகணேசனை சந்தித்த நேரம் எடுத்துக் கொண்ட படம். இதில் நோர்வேயில் இருந்து சென்றவர்கள் (அமைச்சருக்கு அருகில்) நெடியவன் தலைமையில், புலிகள் அமைப்பை மீளக் கட்டமைக்க உதவியவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

(“மனோ கணேசனும் நெடியவனும்” தொடர்ந்து வாசிக்க…)