ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிக்கான தூதுவராகிறார் மலாலா யூசுப்!

பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுமி மலாலா 2012 ம் தலிபான்களினால் தலையில் சுடப்பட்டு உயிருக்குப் போராடிய நிலையில் அவசர அவசரமாக விமானத்தில் இங்கிலாந்துக்குக் கொண்டுவரப்பட்டு சத்திர சிகிச்சை பெற்றுக் குணமானதன் பின்னர் இங்கிலாந்திலேயே தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்து கல்வி கற்று வருகிறார். இஸ்லாமியப் பெண்கள் கல்வி கற்க வேண்டுமென்ற கோஷத்துடன் போராடிய மலாலா தனக்கெதிரான தலிபான்களின் தாக்குதலின் பின்னர் தனது போராட்டத்தை இங்கிலாந்திலிருந்தபடியே முன்னெடுத்தார்.

(“ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிக்கான தூதுவராகிறார் மலாலா யூசுப்!” தொடர்ந்து வாசிக்க…)

மத்திய அரசாங்கத்துக்கே பொறுப்பு; நழுவுகிறார் சி.வி

“மீள்குடியேறும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை உடனடியாக பெற்று கொடுக்க வேண்டியது, அரசாங்கத்தின் கடப்பாடு. அதில் நாம் தான்தோன்றித்தனமாகத் தலையீடு செய்ய இயலாது. அவ்வாறு மத்திய அரசாங்கம் தனது கடப்பாட்டைச் செய்யவில்லை என்பதை, மக்கள் எமக்கு எழுத்துமூலமாகத் தெரியப்படுத்தினால், அது தொடர்பாக மத்திய அரசாங்கத்துடன் பேசி மக்களுக்குரிய உதவிகளை பெற்று கொடுப்பதற்கு, எங்களால் ஆவன செய்ய இயலும்” என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். (“மத்திய அரசாங்கத்துக்கே பொறுப்பு; நழுவுகிறார் சி.வி” தொடர்ந்து வாசிக்க…)

பகடிவதை சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்களுக்கு வகுப்புத் தடை

பகடிவதை சம்பவத்துடன் தொடர்புடைய தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீடத்தின் 18 மாணவிகள் உள்ளிட்ட 28 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.    அறிவியல் பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட இந்த வகுப்புத்தடை, ஏப்ரல் 7ஆம் திகதிமுதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
புதிய மாணவர்களை கடந்த 6ஆம் திகதியன்று பகடிவதைக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில், 18 மாணவிகள் மற்றும் 10 மாணவர்கள், பகடி வதைக்கு பயன்படுத்தப்பட்ட சில உபகரணங்களுடன், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

(“பகடிவதை சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்களுக்கு வகுப்புத் தடை” தொடர்ந்து வாசிக்க…)

இந்திய உளவாளிக்கு பாகிஸ்தானில் மரண தண்டனை!

(எஸ். ஹமீத்)

உளவு பார்த்ததாக பிடிபட்ட இந்தியருக்கு பாகிஸ்தானில் மரணதண்டனை விதிப்பு பாகிஸ்தானில் உளவு வேலை பார்த்ததாகக் கைது செய்யப்பட்டிருந்த இந்தியருக்கு இன்று பாகிஸ்தானின் இராணுவ நீதிமன்றம் மரண தண்டனை அளித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

(“இந்திய உளவாளிக்கு பாகிஸ்தானில் மரண தண்டனை!” தொடர்ந்து வாசிக்க…)

”அமெரிக்காவைக் கதறச் செய்யுங்கள்!” ரஷ்யாவிடம் ஈரான் ஜனாதிபதி வேண்டுகோள்!

(எஸ். ஹமீத்.)

”சிரியாவில் ஜனாதிபதி அசாத்துக்கு எதிராகக் குண்டு வீசிய அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுத்துக் கதறச்செய்யுங்கள். தமது நடவடிக்கைக்காக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் அமெரிக்காவும் வருந்தக் கூடிய நிலையை ஏற்படுத்துங்கள்.” மேற்கண்டவாறு ரஷ்யப் பிரதமர் விளாதிமிர் புட்டினிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி.

(“”அமெரிக்காவைக் கதறச் செய்யுங்கள்!” ரஷ்யாவிடம் ஈரான் ஜனாதிபதி வேண்டுகோள்!” தொடர்ந்து வாசிக்க…)

உணவு விஷமான விவகாரம்: பாதித்தோர் எண்ணிக்கை 1,005ஆக உயர்வு

அம்பாறை, இறக்காமம், வாங்காமம் பிரதேசத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக சுகவீனம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1,005ஆக உயர்வடைந்துள்ளது என, வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.    வாங்காமம் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் கந்தூரி வைபவத்தையிட்டு, கடந்த புதன்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது. இதன்போது, உணவு ஒவ்வாமையால் 950 பேர் பாதிக்கப்பட்டனர். அதில், 3 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மேலும் 55 பேர், வைத்தியசாலைகளில் சனிக்கிழமை (8) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு பகுதியினர், அம்பாறை பொது வைத்தியசாலையிலும் இன்னுமொரு பகுதியினர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  தற்போதைய நிலையில், அம்பாறை பொது வைத்தியசாலையில் 18 பேரும், இறக்காமம் பிரதேச வைத்தியசாலையில் 25 பேரும், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் 35 பேரும், மற்றும் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் 27 பேருமென 105 பேர் மட்டுமே, தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதேவேளை, இந்தச் சம்பவத்தையடுத்து, கந்தூரிக்காக சமையல் வேலைகளில் ஈடுபட்டிருந்தவர்களில் சமையற்காரர்கள் இருவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று கைதுசெய்யப்பட்டனர்.

 

சிரியாவை மீண்டும் தாக்கினால் கடும் விளைவுகள் ஏற்படும் அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை

சிரியா மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. சிரியாவின் அல்-சாய்ரத் விமானப் படை தளத்தை குறிவைத்து அமெரிக்க கடற்படை நேற்றுமுன்தினம் 59 டோமாஹாக் ஏவுகணைகளை வீசியது. இதில் அல்-சாய்ரத் விமான தளம் கடுமையாக சேதமடைந்தது. 6 வீரர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர்.

(“சிரியாவை மீண்டும் தாக்கினால் கடும் விளைவுகள் ஏற்படும் அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை” தொடர்ந்து வாசிக்க…)

பணப்பட்டுவாடா புகார் எதிரொலி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து- தேர்தல் ஆணையம் நடவடிக்கை

சென்னை ஆர்.கே.நகரில் வரும் 12-ம் தேதி (ஏப்ரல் 12) நடைபெறவிருந்த இடைத்தேர்தலை ரத்து செய்து தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு இதற்கான உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்தது. தலைமைத் தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி, தேர்தல் ஆணையர்கள் ஓ.பி.ராவத், ஏ.கே.ஜோதி ஆகியோர் தேர்தல் ரத்து உத்தரவில் கையெழுத்திட்டனர்.

(“பணப்பட்டுவாடா புகார் எதிரொலி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து- தேர்தல் ஆணையம் நடவடிக்கை” தொடர்ந்து வாசிக்க…)

திருமதி நேசம்மா செபரெத்தினம் அவர்கள் காலமானார்.

அமரர் வித்துவான் செபரெத்தினம் அவர்களின் அன்பு மனைவி திருமதி நேசம்மா செபரெத்தினம் அவர்கள் , ஏப்ரல் 6ம் திகதி, நேற்று இரவு Scarborough, ரொறொண்டோவில், Canada காலமானார். 

திருமதி நேசம்மா செபரெத்தினம் அவர்கள் மட்டக்களப்பு திருப்பளுகாமத்தை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்டு, தான் பிறந்த கிரமத்தில் நீண்ட காலம் ஆசிரியையாகக் கடமையாற்றியவராவார்.

தனது கணவர் அமரர் செபரெத்தினம் ஐயாவின் இலக்கியப்ப் பணிக்கு பக்க பலமாக விளங்கிவராவார்.

அன்னாருக்கு எமது இதயபூர்வ அஞ்சலிகள்.
அவர்தம் குடும்பத்தினரின் துயரில் பங்கெடுப்போம்.

Viewing: Friday, April 14th 5:00- 9.00 pm
Viewing: Saturday, April 15th 9:00- 10:00 am
Service: Saturday 10:00- 11:00 am
Chapel Ridge Funeral Home
8911 Woodbridge Ave- Markham

Funeral: Saturday 11:00- 12:00
Christ the King Cemetery
7770 Steels Ave E, Markham, ON L6B 1A8
Markham

தொடர்புகளுக்கு:
416-809-4338 (நாளோ – மகள்)
416-697-1321 (போதகர் ஜெயராஜா)
416-779-5589 (போதகர் மில்ரன்)

விடுதலைப்புலி உறுப்பினர்கள் ஐவருக்கு 20 ஆண்டு கால சிறைத் தண்டனை

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்காக நிதி சேகரித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் ஐந்து பேர் மீதான தண்டனையை, நெதர்லாந்து நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. நெதர்லாந்தில், 2003-2010க்கு இடைப்பட்ட காலங்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக நிதி சேகரித்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதன்போது பலரும் அச்சுறுத்தலுக்கு உள்ளானதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், சட்டத்துக்குப் புறம்பான முறையில் அதிர்ஷ்ட லாபச் சீட்டுக்களையும் இவர்கள் வினியோகித்ததாகவும் கூறப்பட்டது. இவை மூலம் பெறப்பட்ட பணத்தை சட்ட விரோதமாக இலங்கைக்கு அனுப்பியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இக்குற்றச்சாட்டுக்களின் பேரில் குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், சந்தேக நபர்களுக்கு இருபது ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இவர்களில் நால்வர் மேன்முறையீடு செய்தபோதும், அவர்களது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதுடன் தண்டனையும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.