குட் பை போர் எவர்'( GOODBYE FAOREVER)  சொல்கிறது BBC தமிழ் சேவை!

(எஸ். ஹமீத்.)
BBC யின் தமிழ் மொழிச் சேவையான ‘தமிழோசை’ யின் சேவை வெகு விரைவில்  முடிவுக்கு வருகிறது. இந்தச் செய்தி தமிழ் நெஞ்சங்களில் மிக்க கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

(“குட் பை போர் எவர்'( GOODBYE FAOREVER)  சொல்கிறது BBC தமிழ் சேவை!” தொடர்ந்து வாசிக்க…)

இ-விசா மூலம் இந்தியா செல்லும் வெளிநாட்டவர்களுக்கு

இ-விசா என்று அழைக்கப்படும் மின்னணு விசாக்கள் பெற்று இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செல்லும் வெளிநாட்டினர்கள் இனிமேல் இரண்டு மாதங்கள் வரை தங்கலாம் என மத்திய அமைச்சர் ராஜநாத் சிங் அறிவித்துள்ளார். முன்னதாக, இ-விசா மூலம் இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டினர்களுக்கு ஒரு மாத காலம் மட்டும் தங்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், இந்த விதிமுறை கடந்த ஏப்ரல் 1ஆம் திகதி முதல் தளர்த்தப்பட்டு தற்போது இரண்டு மாதங்கள் வரை தங்குவதற்கு மத்திய அரசு வழிவகை செய்துள்ளது.

(“இ-விசா மூலம் இந்தியா செல்லும் வெளிநாட்டவர்களுக்கு” தொடர்ந்து வாசிக்க…)

ஜேசுதாஸ் லக்சாயினியின் படுகொலை சம்பவத்தில் குற்றவாளிக்கு மரண தண்டனை

யாழ் – நெடுந்தீவு பகுதியில் ஜேசுதாஸ் லக்சாயினியின் படுகொலை சம்பவத்தில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் இன்று விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது கந்தசாமி ஜெகதீஸ்வரன் என்ற குற்றவாளிக்கே இந்த மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் 10 இலட்சம் ரூபாய் நஷ்டஈடும் வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

(“ஜேசுதாஸ் லக்சாயினியின் படுகொலை சம்பவத்தில் குற்றவாளிக்கு மரண தண்டனை” தொடர்ந்து வாசிக்க…)

சுமந்திரன் கொலை முயற்சி: ஐவருக்கும் மறியல் நீடிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனைக் கொலை செய்யத் திட்டமிட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐவரின் விளக்கமறியலையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நீடித்து, கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, நேற்று (05) உத்தரவிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைக் கொலை செய்யத் திட்டமிட்டனர் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட ஐவர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் நேற்று ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே இவர்களின் விளக்கமறியலை நீடித்து நீதவான் உத்தரவிட்டார்.

6,176 இலங்கையர் கைது

“சட்ட விரோதமான முறையில், கடல் வழியாக வெளிநாடுகளுக்குச் செல்லும் நபர்களைத் தடுப்பதற்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் நிறுவப்பட்டுள்ள பிரிவினால், கடந்த ஐந்து வருடத்தில் 6,176 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்” என,

சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார். அத்துடன், கடந்த ஐந்து வருட காலத்துக்குள் கடல் வழியாக சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்ல முற்பட்டு, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சமுத்திரப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ள இலங்கைப் பிரஜைகளை வெகு விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

(“6,176 இலங்கையர் கைது” தொடர்ந்து வாசிக்க…)

கேப்பாபுலவில் 394 ஏக்கர் விடுவிக்கப்படும்

முல்லைத்தீவு, கேப்பாபுலவு பகுதியில் 394 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்திருப்பதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், நாடாளுமன்றத்தில் நேற்று(04) தெரிவித்தார். ஈ.பி.டி.பி.யின் யாழ். மாவட்ட எம்.பி.யான டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் சுவாமிநாதன் இந்த விடயத்தை குறிப்பிட்டார். கேப்பாபுலவில் தமது காணிகளை விடுவிக்குமாறு மக்கள் நடத்திவரும் தொடர் போராட்டம் தொடர்பாக டக்ளஸ் தேவானந்த இதன்போது கேள்வி எழுப்பினார்.

(“கேப்பாபுலவில் 394 ஏக்கர் விடுவிக்கப்படும்” தொடர்ந்து வாசிக்க…)

ரிஷாட் இராஜினாமா?

கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், தன்னுடைய அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்வதற்குக் கலந்தாலோசித்து வருவதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகிறது. வில்பத்து சரணாலயத்துக்கு வடக்காக உள்ள காடுகளில் நான்கு காடுகளை, பாதுகாப்பான சரணாலயங்களாக பிரகடனப்படுத்தி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2017 மார்ச் 24ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிர்ப்பை தெரிவித்தே, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தன்னுடைய அமைச்சுப் பதவியைத் துறப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது.

(“ரிஷாட் இராஜினாமா?” தொடர்ந்து வாசிக்க…)

‘கூட்டமைப்பை ஏமாற்றுவது போல மக்களை ஏமாற்ற முடியாது’ – கருணா

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை ஏமாற்றுவதைப்போல் நல்லாட்சி அரசாங்கத்தினால் இந்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது. நாட்டில் இனிமேல்தான் நல்லாட்சி ஏற்படப்போகின்றது என மீள் குடியேற்றத்துக்கான முன்னாள் பிரதியமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் பட்டதாரிகள் உட்பட பல்வேறு தரப்பினர் மேற்கொண்டு வரும் பல்வேறு போராட்டங்கள் தொடர்பில் அவர் கருத்து வெளியிட்டார்.

(“‘கூட்டமைப்பை ஏமாற்றுவது போல மக்களை ஏமாற்ற முடியாது’ – கருணா” தொடர்ந்து வாசிக்க…)

விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் தமிழகத்தில் இன்று பொது வேலைநிறுத்தம் :திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு

ரயில், பஸ் மறியல் போராட்டமும் நடத்த முடிவு

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கங் களின் கூட்டியக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று வேலைநிறுத்தப் போராட்டம் நடக்கிறது. இதற்கு திமுக, காங்கிரஸ் அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) உள்ளிட்ட கட்சிகள், வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

(“விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் தமிழகத்தில் இன்று பொது வேலைநிறுத்தம் :திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு” தொடர்ந்து வாசிக்க…)