எரிந்து முடிந்த கிளிநொச்சிச் சந்தையின் அழிவைப்பற்றிய….

எரிந்து முடிந்த கிளிநொச்சிச் சந்தையின் அழிவைப்பற்றிய
மதிப்பீட்டுப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதை களத்திலிருந்தே செய்து கொண்டிருக்கிறார் கரைச்சிப்பிரதேச சபையின் செயலாளர் கே.கம்ஸநாதன். பதிவு செய்யப்பட்ட 124 கடைகள் அழிவில் சிக்கியுள்ளன. 64 கடைகள் முற்றாக அழிந்திருக்கின்றன. 60 கடைகள் பகுதிச் சேதம் அல்லது பகுதி அழிவு. மொத்தமாக 124 கடைகளில் 225 மில்லியன் ரூபா சொத்தழிவுகள் ஏற்பட்டுள்ளது என பிரதேச சபையின் ஆரம்ப கட்ட மதிப்பீட்டு தகவல்கள் குறிப்பிடுகின்றன.

(“எரிந்து முடிந்த கிளிநொச்சிச் சந்தையின் அழிவைப்பற்றிய….” தொடர்ந்து வாசிக்க…)

இன்றைய இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் சூழல்

 

மாற்றுக் குரலுக்கான செயற்பாட்டாளர்கள், அமைப்பின் ஒழுங்கு படுத்தலின் விளைவாக , இன்று 17.09.2016, யாழ். நூலக உணவு விடுதியில், இன்றய இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் சூழல் பற்றிய விவாதம் நடைபெற்றது. மிகவும் நல்ல முயற்சி இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற ஒரு முற்போக்கான மாற்றுத்தலமையை உருவாக்க வேண்டும் இது மக்களுக்கான கூட்டுத்தலமையாக அமைய வேண்டும். பெண்கள் பெருமளவில் வரவில்லை . அது ஒழுங்குபடுத்தியோரின் ‘நெட்வெர்க்’ ‘பற்றாகுறை’ அல்லது அழைக்கப்பட்ட அமைப்புகள் பெண்களை இதில் பங்கு அனுப்பவில்லை .. இதில் பெண்கள் சிலர் இந்த படங்களை எடுத்த எனக்கு பின்னால் , இருந்தனர். இதில் பங்குபற்றியோர் அனைவரின் படமும் இங்கு பிரசுரமாகவில்லை… இது ஒருபக்கமிருக்க , இந்த கூட்டத்தில் பெண்ணுரிமை, பெண்ணியம் பற்றி பலர் கருத்து தெரிவித்தனர். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மாற்றங்களை ஏற்படுத்த போராட முடியும் ..

ஏறாவூர் இரட்டைப்படுகொலை: மேலும் நால்வர் கைது

ஏறாவூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற படுகொலையுடன் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் நால்வர், சற்று முன்னர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஏறாவூரைச் சேர்ந்த மூவரும் ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் அடங்குகின்றனர்.

(“ஏறாவூர் இரட்டைப்படுகொலை: மேலும் நால்வர் கைது” தொடர்ந்து வாசிக்க…)

நியுயோர்க்கில் பாரிய வெடிப்பு: 29 பேர் காயம்

ஐக்கிய அமெரிக்காவின் நியுயோர்க் நகரத்தில் இடம்பெற்ற வெடிப்பில், குறைந்தது 29 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செல்சியா மாவட்டத்தின் மன்ஹற்றன் பகுதியிலேயே, இலங்கை நேரப்படி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கே பாரிய சத்தத்துடன் வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

(“நியுயோர்க்கில் பாரிய வெடிப்பு: 29 பேர் காயம்” தொடர்ந்து வாசிக்க…)

கிளிநொச்சியில் பாரிய தீ , 5 இராணுவத்தினர் காயம்

கிளிநொச்சி பொதுச் சந்தையில்,வெள்ளிக்கிழமை 16-08-2016 இரவு ஏற்பட்ட பாரிய தீ காரணமாக புடவை மற்றும் பழக் கடைகள் என்பன முற்றாக எரிந்து அழிந்துள்ளன. தீயை கட்டுப்படுத்த முயன்றவர்களில் 5 இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.

(“கிளிநொச்சியில் பாரிய தீ , 5 இராணுவத்தினர் காயம்” தொடர்ந்து வாசிக்க…)

‘புதிய அரசியல் யாப்பானது சகலருக்கும் ஏற்றதாக அமையும்’

புதிய அரசியல் சாசனமானது பொதுஜன வாக்கெடுப்பின் மூலமே நிறைவேற்றறப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்பதுடன், அதற்கு மாறாக எவரும் பொதுமக்களை ஏமாற்ற முடியாது என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

(“‘புதிய அரசியல் யாப்பானது சகலருக்கும் ஏற்றதாக அமையும்’” தொடர்ந்து வாசிக்க…)

பளை விபத்தில் ஐவர் பலி

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மங்கேணி பகுதியில் 278 ஆவது மைல்கல் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை (15) காலை 5.30 க்கு இடம்பெற்ற வாகன விபத்தில், வானில் பயணித்த நால்வர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும் அறுவர் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

(“பளை விபத்தில் ஐவர் பலி” தொடர்ந்து வாசிக்க…)

‘ட்ரம்ப் ஒரு தேசிய அவமானம்’

ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப், “ஒரு தேசிய அவமானம்” என, குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும் முன்னாள் இராஜாங்கச் செயலாளருமான கொலின் பவல் தெரிவித்துள்ளார். அவரது மின்னஞ்சல்கள், ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுவோரால் ஊடுருவப்பட்டு (ஹக்), வெளியிடப்பட்டுள்ளன. அதிலேயே, இந்த விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

(“‘ட்ரம்ப் ஒரு தேசிய அவமானம்’” தொடர்ந்து வாசிக்க…)

பல மில்லியன் பணத்துடன் விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் கைது

மில்லியன் கணக்கான அமெரிக்க டொலர்களுடன் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் இந்திய கடலோர பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அருள் ஜயரத்னம் என்றழைக்கப்படும் ராஜன் என்ற 41 வயது நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(“பல மில்லியன் பணத்துடன் விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் கைது” தொடர்ந்து வாசிக்க…)

‘அப்பாவின் குரல் கேட்கிறது’ – ஹிருணிகா பிரேமச்சந்திர

தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, நீதி கிடைத்துள்ளது. எனினும், ஆட்சி மாறாமல் இருந்திருந்தால், தன்னுடைய தந்தையின் படுகொலை தொடர்பில் நேற்று (08) வழங்கப்பட்ட தீர்ப்பு, அறிவிக்காமலே விடப்பட்டிருக்கலாம் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்தார்.

(“‘அப்பாவின் குரல் கேட்கிறது’ – ஹிருணிகா பிரேமச்சந்திர” தொடர்ந்து வாசிக்க…)