Category: செய்திகள்
விடுதலைப்புலி: கலையழகனின் மனைவிக்கு அழைப்பு
கிளிநொச்சி விநாயகபுரத்தில் வசித்து வரும் வடபோர்முனையின் கட்டளைத்தளபதியாக இருந்து மரணமடைந்த லெப்டினன்ட் கேணல் கலையழகனின் மனைவிக்கு, கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைப்பானை விடுத்துள்ளனர். வட போர்முனையின் கட்டளைத் தளபதிகளில் ஒருவராக இருந்து மரணமடைந்த கெங்காதரன் எனும் லெப்டினன்ட் கேணல் கலையழகனின் மனைவி விடுதலைப்புலிகள் அமைப்பில் ஏழு வருடங்கள் இருந்ததாகவும், கலையழகன் பயன்படுத்திய கைத்துபாக்கியை தற்போதும் வைத்திருப்பதாகவும், புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்புகளை பேணுவதாகவும், வெளிநாடுகளில் இருந்து அதிகளவான உதவியை பெற்றுக்கொள்வதாகவும் கூறி பல தடவைகள் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரித்துள்ளனர்.
(“விடுதலைப்புலி: கலையழகனின் மனைவிக்கு அழைப்பு” தொடர்ந்து வாசிக்க…)
யாழ்ப்பாணம் – “போதையற்ற தேசம்”
யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் பூங்கா திறந்தவெளி அரங்கில் இடம்பெற்றுவரும் “போதையற்ற தேசம்” தேசிய வேலைத் திட்டத்தின் 8 ஆவது மாவட்ட நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு யாழ்.பொதுநூலகத்தின் அருகில் உள்ள வளாகத்தில் இடம்பெற்றது.
உடுவில் மகளிர் கல்லூரிப் பிரச்சினை முடிவுக்கு வந்தது
உடுவில் மகளிர் கல்லூரியில் கடந்த 3 ஆம் திகதி முதல் மாணவிகள் மற்றும் நிர்வாகத்துக்கும் இடையில் நிலவிய முரண்பாடு, இன்று (08) முடிவுக்கு வந்ததுள்ளது. ‘நான் விட்டுக்கொடுக்கிறேன், எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னதாக எனது அனைத்துக் கடமைகளையும் ஒப்படைப்படைக்கிறேன்’ என முன்னாள் அதிபர் சிரானி மில்ஸ் அறிவித்ததையடுத்து, பிரச்சினை முடிவுக்கு வந்தது.
(“உடுவில் மகளிர் கல்லூரிப் பிரச்சினை முடிவுக்கு வந்தது” தொடர்ந்து வாசிக்க…)
துமிந்த சில்வா உள்ளிட்ட 5 பேருக்கு மரண தண்டனை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 5 பேருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
யாழ் உடுவில் மகளிர் கல்லூரி அதிபர் ஷிரானிமில் அவர்களின் திடீர் இடமாற்றத்தின் பின்னணி இதுதான்!
யாழ் உடுவில் மகளிர் கல்லூரி அதிபர் ஷிரானிமில் அவர்களை திடீரென தென்னிந்திய திருச்சபையின் ஆயர் தியாகராஜா அவர்கள் சில அரசியல் நரிகளின் உதவியுடன் இடமாற்றம் ஒன்றை ஏற்படுத்தியிருந்தார் .அதற்கான காரணங்களை ஊடகங்களில் தெளிவாக அவர் குறிப்பிட தவறியிருந்த போதும் எமது புலனாய்வு ஊடகவியலாளர்களின் முயற்சியில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.
நீதியான போராட்டத்திற்கு நியாயத்தீர்ப்பு கிடைக்கும் – உடுவில் பாடசாலை மாணவர் சமூகத்திற்கு டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
உடுவில் மகளிர் கல்லூரியின் அதிபர் ஷிரானி மில்ஸை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கல்லூரி மாணவிகளினால் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் பாடசாலை நிர்வாகத்தால் கட்டாயப்படுத்தப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்தாக போராட்டத்திலீடுபட்ட மாணவர்களும் பெற்றோரும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவித்தனர்.
பிலிப்பைன்ஸைப் பின்பற்றுகிறது இந்தோனேஷியா
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியாக றொட்ரிகோ டுட்டேர்ட்டே பதவியேற்றதைத் தொடர்ந்து, அந்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் சர்ச்சைக்குரிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையான “போதைக்கெதிரான போரினால்” உந்தப்பட்டு, அந்நாட்டின் அயல்நாடான இந்தோனேஷியாவிலும், அவ்வாறான நடவடிக்கையொன்று எடுக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
(“பிலிப்பைன்ஸைப் பின்பற்றுகிறது இந்தோனேஷியா” தொடர்ந்து வாசிக்க…)
உயர்ஸ்தானிகரை தாக்க 12 பேர் சென்றுள்ளனர்? மலேஷிய அரசாங்கம்
மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது தாக்குதல் நடத்துவதற்காக, 12பேர் அடங்கிய குழுவொன்று சென்றிருந்ததாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ள ‘தி ஸ்டார்’ பத்திரிகை, சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களும், அந்நாட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க, இன்று புதன்கிழமை (07) வரை, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் செய்தி வெளியிட்டுள்ளது.
(“உயர்ஸ்தானிகரை தாக்க 12 பேர் சென்றுள்ளனர்? மலேஷிய அரசாங்கம்” தொடர்ந்து வாசிக்க…)
சிரியப் போர்நிறுத்த ‘பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன’
சிரியாவில் போர்நிறுத்தமொன்றை ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள், தோல்வியில் முடிவடைந்துள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதன் காரணமாக, சிரியாவில் மனிதாபிமான உதவிகளை அதிகரிப்பதற்கான வாய்ப்பு, இல்லாது செய்யப்பட்டுள்ளதாகக் கருப்படுகிறது.
(“சிரியப் போர்நிறுத்த ‘பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன’” தொடர்ந்து வாசிக்க…)