யாழில் தற்போது மீண்டும் தலை தூக்கியுள்ள வாள் வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு தமிழ் பேசும் பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்குவேலியில் ரவுடிக் கும்பல் ஒன்றின் வாள் வெட்டினால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். குடும்பஸ்தர் தனது வீட்டுக்கு முன்னால் நின்றபோது திடீரென்று மோட்டார் சைக்கிளில் வந்திறங்கிய இளைஞர் குழு இவரை சரமாரியாக வாளால் வெட்டியது. தலை, கழுத்து, கை, கால் போன்ற பல இடங்களிலும் வெட்டுக் காயங்களுக்கு இலக்கான அவரை உறவினர்கள் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்தார்.
(“யாழில் தமிழ் பேசும் பொலிஸார் அதிரடி” தொடர்ந்து வாசிக்க…)