ஐ.நாவிலிருந்து விலகுவதாக பிலிப்பைன்ஸ் எச்சரிக்கை

பிலிப்பைன்ஸின் உள்விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் தலையிடுவதாக மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ள பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி றொட்ரிகோ டுட்டேர்ட்டே, ஐக்கிய நாடுகளிலிருந்து விலகுவதைப் பற்றிச் சிந்திக்க வேண்டியேற்படும் என எச்சரித்துள்ளார்.

(“ஐ.நாவிலிருந்து விலகுவதாக பிலிப்பைன்ஸ் எச்சரிக்கை” தொடர்ந்து வாசிக்க…)

கடவுச்சீட்டுத் திணைக்களம் இடமாறுகிறது

மக்கள் நலன் கருதி, வினைத்திறனுடன் கூடிய செயற்பாட்டினை முன்னெடுத்துச் செல்லும் பொருட்டு, குடிவரவு – குடியகழ்வுத் திணைக்களம், பத்தரமுல்ல, ‘சுஹுருபாய’ புதிய கட்டத்தொகுதிக்கு, எதிர்வரும் 29ஆம் திகதியிலிருந்து இடமாற்றப்படவுள்ளது. ஆகையால், கொழும்பு -10, ஆனந்த ராஜகருணா மாவத்தை இல: 41 இல், அமைந்துள்ள பிரதான காரியாலம் மற்றும் கண்டி, மாத்தறை, வவுனியா ஆகிய பிரதேச காரியாலயங்கள், எதிர்வரும் 26ஆம் திகதியிலிருந்து மூடப்படும்.

(“கடவுச்சீட்டுத் திணைக்களம் இடமாறுகிறது” தொடர்ந்து வாசிக்க…)

கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக ரோஸி?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஸி சேனநாயக்க, கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக நியமனம் செய்வதற்கு பரிந்துரைக்கப்படவுள்ளதாக அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் அலுவலகத்தின் துணைத்தலைவியாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஊடகப்பேச்சாளராகவும் கடமையாற்றி வரும் இவர், ஏ.ஜே.எம். முஸமில்லுக்கு பதிலாக நியமிக்கப்படவுள்ளார்.

(“கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக ரோஸி?” தொடர்ந்து வாசிக்க…)

பொட்டு அம்மானின் காணிக்கு ஸ்ரீதரன் எம்பி உரிமை கோருகின்றாரா?

கிளிநொச்சியிலிருந்து 1990 ஆம் ஆண்டு புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட நாங்கள் மீண்டும் தற்போது மீளகுடியேறியுள்ள நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் இனவாத நடவடிக்கையால் கிளிநொச்சியில் வாழ்கின்ற முஸ்ஸிம் மக்களின் இருப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது என பாரூக் பாயிஸ் என்பவர் தெரிவித்துள்ளார்.

(“பொட்டு அம்மானின் காணிக்கு ஸ்ரீதரன் எம்பி உரிமை கோருகின்றாரா?” தொடர்ந்து வாசிக்க…)

‘வட மாகாண சபையில் மூன்று அமைச்சர்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கிடைக்கும்வரை பதவியை துறந்திருக்க வேண்டும்’

‘வட மாகாண சபையில் மூன்று அமைச்சர்களின் நடவடிக்கைகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு குழுவொன்று அமைக்கப்பட்டு விசாரணை செய்வதற்கான தீர்மானத்தை வடமாகாணசபை நிறைவேற்றியுள்ளதானது எனக்கு மிகவும் அதிர்ச்சியை தருகின்றது’ என்று தெரிவித்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி, ‘குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும்வரை அமைச்சு பதவிகளில் இருந்து தாமாகவே விலகியிருக்க வேண்டும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

(“‘வட மாகாண சபையில் மூன்று அமைச்சர்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கிடைக்கும்வரை பதவியை துறந்திருக்க வேண்டும்’” தொடர்ந்து வாசிக்க…)

ரூ.67 கோடிக்கு என்னய்யா நடந்தது?

’67 கோடியே 44 இலட்சம் ரூபாய்க்கு வடமாகாணத்தில் என்ன நடந்தது என தெரியவில்லை’ என வடமாகாண எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா, கணக்காய்வு திணைக்கள அறிக்கையை சுட்டிக்காட்டி தெரிவித்துள்ளார்.

(“ரூ.67 கோடிக்கு என்னய்யா நடந்தது?” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கில் சந்திக்குச் சந்தி புத்தர்: ‘வணங்கவோ ஆட்களில்லை’

‘வடமாகாணத்தில், சந்திக்குச் சந்தி, புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அச்சிலைகளை வணங்குவதற்கு, அங்கு ஆட்களில்லை. மற்றுமொரு மதத்தையோ அல்லது இனத்தையோ சவாலுக்கு உட்படுத்தும் வகையில் நடந்துகொள்ளுமாறு, பௌத்த தர்மம் போதிக்கவில்லை.

(“வடக்கில் சந்திக்குச் சந்தி புத்தர்: ‘வணங்கவோ ஆட்களில்லை’” தொடர்ந்து வாசிக்க…)

ஐந்தாவது நாளாகவும் தொடரும் பரவிப்பாஞ்சான் மக்களின் கவனயீர்ப்பு போராட்டம்

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படும் கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பிரதேசத்திலுள்ள தமது காணிகளை முழுமையாக விடுவிக்குமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஐந்தாவது நாளாக இன்றும் (புதன்கிழமை) தொடர்கிறது.

(“ஐந்தாவது நாளாகவும் தொடரும் பரவிப்பாஞ்சான் மக்களின் கவனயீர்ப்பு போராட்டம்” தொடர்ந்து வாசிக்க…)

வவுனியா பொருளாதார அபிவிருத்தி மையத்தை அமைப்பதில் நிலவிய இழுபறிக்கு தீர்வு

கிராமிய பொருளாதார அமைச்சின் கீழ் வவுனியா மாவட்டத்திற்கான பொருளாதார அபிவிருத்தி மையத்தை, வவுனியா தாண்டிக்குளத்தில் அமைப்பதா அல்லது ஓமந்தை நகரில் அமைப்பதா என்று இழுபறியில் இருந்து வந்த பிரச்சினைக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இன்று வவுனியாவுக்கு விஜயம் செய்த கிராமிய பொருளாதார அமைச்சர் பி.ஹரிசன் மற்றும் கைத்தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஆகியோர் வடமாகாண முதலமைச்சரின் பிரதிநிகளாக வருகை தந்திருந்த அதிகாரிகள் சகிதம் வவுனியா பொருளாதார அபிவிருத்தி மையத்தை வவுனியா புறநகர்ப்பகுதியில் உள்ள மதகுவைத்தகுளம் மற்றும் வவுனியாவுக்கு வடக்கே மாங்குளம் நகரம் ஆகிய இரண்டு இடங்களில் அமைப்பதற்கான தீர்மானத்தை உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
அமைச்சர்களும், அதிகாரிகளும் மதகுவைத்தகுளத்தைப் பார்வையிட்டதுடன் அங்கு உடனடியாக வேலைகளை ஆரம்பிக்குமாறு அதிகாரிகளுக்குப் பணித்துள்ளனர்.

(“வவுனியா பொருளாதார அபிவிருத்தி மையத்தை அமைப்பதில் நிலவிய இழுபறிக்கு தீர்வு” தொடர்ந்து வாசிக்க…)