குடிவரவு, குடியகழ்வு சட்டத்தை மீறி அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயற்சித்த 17 இலங்கையர்களை, மட்டக்களப்பு வடக்குக் கடற்பிராந்தியத்தில் வைத்து, நேற்றுத் திங்கட்கிழமை (15) கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். நாட்டை விட்டு வெளியேறுவதற்காக மட்டக்களப்பு, வாழைச்சேனைப் பிரதேசத்திலிருந்து புறப்பட்ட குறித்த நபர்கள், நீண்ட நாட்களாகப் படகில் தங்கியிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Category: செய்திகள்
பொங்கு தமிழ்போல பொங்குவோம்: கூட்டாகத் தீர்மானம்
தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய பொங்கு தமிழ் எழுச்சிக்கு ஒப்பான பாரிய மக்கள் போராட்டம் ஒன்றை, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதியன்று, கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பித்து, 9ஆம் திகதியன்று யாழ். மாவட்டத்திலும் தொடர்ச்சியாக வடக்கு, கிழக்கின் சகல மாவட்டங்களிலும் நடத்துவதற்கு, தமிழ் மக்கள் பேரவை மற்றும் அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள் என்பன, கூட்டாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.
(“பொங்கு தமிழ்போல பொங்குவோம்: கூட்டாகத் தீர்மானம்” தொடர்ந்து வாசிக்க…)
பௌத்தர்களே இல்லாத சாம்பல் தீவுச் சந்தியில் புத்தர் சிலை எதற்கு?’
சாம்பல் தீவுச் சந்தியிலிருந்து சுமார் 5 கிலோமீற்றர் சுற்றளவில், பௌத்த மதத்தைச் சேர்ந்த எவருமே இல்லாதபோது, அந்தச் சந்தியில் புத்தர் சிலை வைக்கப்பட்டது ஏன் என்று கேட்டுள்ள உப்புவெளி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் க.காந்தரூபன், இந்த விவகாரம் நல்லாட்சியைக் குழப்புவதற்கான சூழ்ச்சியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
(“பௌத்தர்களே இல்லாத சாம்பல் தீவுச் சந்தியில் புத்தர் சிலை எதற்கு?’” தொடர்ந்து வாசிக்க…)
குஜராத் : மோடி வகை ஆட்சியின் தர்க்க பூர்வமான முடிவு..
காஷ்மீர் மட்டுமல்ல இன்று குஜராத்தும் பற்றி எரிகிறது. வரலாறு காணாத தலித் எழுச்சி இன்று அந்த மாநில முதல்வர் ஆனந்திபென் படேலைக் காவு கொண்டுள்ளது. அவரது பதவி விலகலுக்குப் பின் குஜராத்துக்குப் பொறுப்பேற்க பாஜகவில் எல்லோருக்கும் தயக்கம். அமித் ஷா பெயர் சொல்லப்பட்டவுடன் அவரும் தயாராக இல்லை என உடன் செய்திகள் வெளியாயின. இப்போது யாரோ அவரது விசுவாசி ஒருவரைத் தேர்வு செய்துள்ளாராம்.
(“குஜராத் : மோடி வகை ஆட்சியின் தர்க்க பூர்வமான முடிவு..” தொடர்ந்து வாசிக்க…)
உலகை உருக வைத்த அழுகை!
ஒலிம்பிக்கில் முதன் முறையாக ஒரு ஆப்பிரிக்க – அமெரிக்க கறுப்பின நீச்சல் வீராங்கனை, தங்கம் வென்றதோடு, ஒலிம்பிக் சாதனையும் படைத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல், முன்னொருபோதும் இல்லாதவாறு பல திருப்பங்களை கொண்டு வரவுள்ளது. ஹிலாரி கிளின்டன் தேர்தல் செலவுகள் பற்றிய இரகசிய ஆவணங்கள் வெளியிடப் படும் என்று விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தெரிவித்துள்ளார்.
ஈழத்து வாசகர்களிடையே….
2016ஆம் ஆண்டு முடிவடைவதற்குள் இலங்கையின் இனப்பிரசினைக்கான ஒரு அரசியல் தீர்வை காணவேண்டும் – தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி(SDPT)
திருகோணமலையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழர் சமூக ஜனநாயக் கட்சி அறைகூவல்
தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் மத்திய குழு கூட்டம் நேற்று (07.08.2016) திருகோணமலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியுடைய காங்கிரஸ் கடந்த ஏப்ரல் மாதம் கூடி அந்த கட்சியின் பெயரை தமிழ் சமூக ஜனநாயக கட்சி என பெயர் மாற்றம் செய்து வடக்கு கிழக்கு எங்கும் வட்டாரங்கள் தோறும் அடிப்படைக் கிளைகளை அமைத்து ஒரு பரந்து பட்ட மக்களின் கட்சி ஒன்றை கட்டி எழுப்புதல் என்ற தீர்மானம் எடுத்திருந்தது. அதன் பிறகு தமிழர் சமூக ஜனநாயக கட்சியை ஒரு புதிய அரசியல் கட்சியாக பதிவதற்காக ஏற்கனவே தேர்தல் ஆணையாளருடன் பேச்சு வார்த்தையும் நடாத்தப் பட்டிருக்கின்றது. மிக விரைவில் அந்த பதிவுக்கான முறையான விண்ணப்பங்கள் கொடுக்கப்படும். அதற்கான பதிவு மிகவிரைவில் நடைபெறும் என்று நம்புகின்றோம்.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழர் சமூக ஜனநாயக கட்சியாக மாற்றம்!
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தமது கட்சியின் பெயரை தமிழர் சமூக ஜனநாயக கட்சியாக பெயர் மாற்றம் செய்துள்ளது. வடகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்துள்ளார். திருகோணமலை கடல்முக வீதியில் அமைந்துள்ள கட்சியின் காரியாலத்தில், மத்தியகுழுக் கூட்டம் கட்சித் தலைவர் சுகு சிறீதரன் மற்றும் நிர்வாகச் செயலாளர் சிவராஜா மோகன் தலைமையில் இன்று இடம்பெற்றது. கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த, வடகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் இவ்வாறு தெரிவித்தார். நாட்டில் நல்லிணக்கத்தினை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும், நாட்டிலுள்ள அனைத்து மக்களும் இது நல்லாட்சிதான் என உணரும் வகையில் அரசாங்கம் செயற்படவேண்டும், இதேவேளை, அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டங்களை இந்த ஆண்டின் இறுதிக்குள் பாராளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஈழத்தை கைவிட்டது ஈ.பி.ஆர்.எல்.எப்
பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர முன்னணியானது, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியெனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், அதன் புதிய மத்திய குழு நிர்வாகிகளுக்கான முதலாவது கூட்டம், திருகோணமலை கடற்காட்சி வீதியில் அமைந்துள்ள தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி அலுவலகத்தில், ஞாயிற்றுக்கிழமை (07) மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் பேச்சாளரும் வடகிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சருமான அ.வரதராஜப்பெருமாளும் கலந்துகொண்டிருந்ததுடன், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியைப் பதிவு செய்வதற்காக தேர்தல் ஆணையாளருடன் பேச்சுவார்த்தை இடம்பெறுவதாகவும் விரைவில் பதிவு நடைபெறுமெனவும் கூறினார்.