‘அடைக்கலப் பாம்புகள்’ – சிறுகதைத் தொகுப்பு வெளியீடு

என் நேசத்துக்குரியவருக்கு,

இந்த வருடத்தில், இந்த வாரம் சென்னை, சர்வதேச புத்தகக் கண்காட்சியில் வெளிவந்திருக்கும் எனது மற்றுமொரு புத்தகம் ‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு. பிரபல ‘வம்சி’ பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் இத் தொகுப்பில், விருதுகள், பரிசுகளை வென்ற சிறுகதைகள் மற்றும் புதிய சிறுகதைகளுமாக எனது 25 சிறுகதைகள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. இதில் அடங்கியுள்ள சிறுகதைகளைக் குறித்து, நூலின் பின்னட்டை வாசகங்கள் தெளிவுபடுத்தும் என நம்புகிறேன். இத் தொகுப்பையும், சென்னையில் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் சர்வதேச புத்தகக் கண்காட்சியில், ‘வம்சி’ பதிப்பக அரங்குகளில் (எண்:293,294) பெற்றுக் கொள்ளலாம்.

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
08.01.2017

‘நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும்வரை ஒற்றுமையுடன் உழைப்போம்’

“தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும்வரை ஒற்றுமையுடன் உறுதியாக உழைப்போம்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தின் பின் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் திருப்திகரமான முறையில் நடைபெற்றதாகவும் அனைவரும் தமது கருத்துக்களை சுதந்திரமாக வெளியிட்டதாகவும் அவற்றிளை உள்வாங்கி அதனடிப்படையில் செயல்படுவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

(“‘நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும்வரை ஒற்றுமையுடன் உழைப்போம்’” தொடர்ந்து வாசிக்க…)

5 பில்லியன் அமெரிக்க டொலரை முதலிட சீனா முன்வந்துள்ளது

அடுத்த ஐந்து வருட காலப்பகுதியில் ஹம்பாந்தோட்டை வர்த்தக வலயத்தில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய சீனா தயாராகியுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் யிசியென் லியேன் கூறியுள்ளார். ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் நோக்கில் இந்த முதலீட்டை சீனா மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஹம்பாந்தோட்டை வர்த்தக வலய திறப்பு இன்று இடம்பெற்ற போது, அதில் கலந்து கொண்ட போது சீன தூதுவர் இதனைக் கூறியுள்ளார்.

கிழக்கில் ‘எமது சமூகம்” பற்றிய கலந்துரையாடல்

கனடா வாழ் நம்உறவுகளுக்கு,

கிழக்கிலங்கையில் நமதுபாரம்பரியமான காணி, வியாபாரம், கல்வி, சுகாதாரம் என்பனவற்றுடன் வறிய மக்களுக்கும் விதவைகளுக்கான பொருளாதார அபிவிருத்தி, பின்தங்கிய பிரதேச கல்விவளர்ச்சி இடம்பெயர்ந்து அடிப்படை வசதியின்றி வாழும்மக்கள் போன்றவற்றுடன் கலாசாரசீரழிவும் மிகப்பெரிய பிரச்சனைகளாக உள்ளன என்பது நீங்கள் அறிந்ததே.

(“கிழக்கில் ‘எமது சமூகம்” பற்றிய கலந்துரையாடல்” தொடர்ந்து வாசிக்க…)

ராக்கைன் கொடூரங்கள்: ‘வெள்ளையடிக்க முயல்கிறது மியான்மார்’

மியான்மாரில், சிறுபான்மை முஸ்லிம் இனக்குழுவான றோகிஞ்சாக்கள் வாழும் ராக்கைன் மாநிலத்தில், பாதுகாப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுவருவதாகக் கூறப்படும் படுகொலைகளையும் குற்றங்களையும் மூடிமறைப்பதற்கு, மியான்மார் அரசாங்கம் முயல்வதாக, மனித உரிமைகள் அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

(“ராக்கைன் கொடூரங்கள்: ‘வெள்ளையடிக்க முயல்கிறது மியான்மார்’” தொடர்ந்து வாசிக்க…)

அரசியலமைப்பு சபையின் கூட்டம் ஒத்திவைப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று வியாழக்கிழமை இடம்பெறவிருந்த அரசியலமைப்பு சபையின் கூட்டம், மறுஅறிவித்தல் வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட காரணம் இதுவரையிலும் வெளியாகவில்லை.

மரண அறிவித்தல்

திருமதி சரஸ்வதியம்மா பாலசுந்தரம்
தோற்றம் : 25 பெப்ரவரி 1933 — மறைவு : 2 சனவரி 2017

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு ஞானபோஸ்கரோதய வீதியை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதியம்மா பாலசுந்தரம் அவர்கள் 02-01-2017 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை செல்லத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும், பாலசுந்தரம்(சங்கீத பூஷணம்) அவர்களின் அன்பு மனைவியும்,

(“மரண அறிவித்தல்” தொடர்ந்து வாசிக்க…)

மாவீரர் நினைவு சமாதி அமைக்கும் பணிகள் நிறுத்தம்

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் பொது நினைவுச் சமாதி அமைக்கும் பணி இன்று, முன்னெடுக்கப்பட்ட நிலையில், பின்னர் அப்பணிகள் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று ஒன்று கூடிய மாவீரர்களின் உறவினர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் இந்தப் பணியை ஆரம்பித்தனர். “யுத்தம் முடிவுக்கு வந்தப் பின்னர் 2016 ஆம் ஆண்டு மாவீரர் நாள் கொண்டாடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டது. அப்போது அப்போது வெறும் தரையில் சிதைக்கப்பட்ட கல்லறை மற்றும் நினைவுக் கற்களின் எச்சங்களை குவித்து அதன் முன் விளக்கேற்றி நினைவு கூறப்பட்டது.

(“மாவீரர் நினைவு சமாதி அமைக்கும் பணிகள் நிறுத்தம்” தொடர்ந்து வாசிக்க…)

‘வடக்கு முஸ்லிம்கள் கள்ளத்தோணியில் வந்தவர்கள் அல்லர்’

வட மாகாண முஸ்லிம்கள் கள்ளத்தோணியில் வந்தவர்கள் அல்லர். அவர்கள் இலங்கையர்கள் என, மேல் மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் முஜிர்பு ரஹ்மான் தெரிவித்தார். வில்பத்து பிரச்சினை தொடர்பாகத் தமது நிலைப்பாட்டினைத் தெரிவிக்கும் வகையில், முஸ்லிம் பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.

(“‘வடக்கு முஸ்லிம்கள் கள்ளத்தோணியில் வந்தவர்கள் அல்லர்’” தொடர்ந்து வாசிக்க…)

‘பொது சோசலிஷக் கட்சி உருவாகும்’

நாட்டிலுள்ள அனைத்து சோசலிஷக் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் வகையில், ஒரு பொதுவான சோசலிஷக் கூட்டணியொன்றை அமைப்பதற்கு, நடவடிக்கை எடுக்கப்படும் என்று, முன்னிலை சோசலிஷக் கட்சி தெரிவித்தது. இது தொடர்பாக திட்டமிடல் குறித்து, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1ஆம் திகதியன்று, சுகததாச விளையாட்டரங்களில் வைத்து தெரிவிக்கப்படும் என்று, குறித்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சேனதீர குணதிலக்க தெரிவித்தார்.

(“‘பொது சோசலிஷக் கட்சி உருவாகும்’” தொடர்ந்து வாசிக்க…)