மலையக மக்கள் கோரிக்கை

அபிவிருத்தி முதல் அரசியல் பிரதிநிதித்துவம் வரை, கிளிநொச்சியில் வாழ்கின்ற மலையக மக்களும் பாரபட்சமின்றி ஏனைய சமூகங்கள் போன்று சமமாக வாழ்கின்ற சூழலை உருவாக்குங்கள் என, கிளிநொச்சி வாழ் மலையக மக்கள், இன்று வெள்ளிக்கிழமை, நல்லிணக்க பொறிமுறை செயலணிக் குழுவினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனா். கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அமா்வின் போதே இக்கோரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.

(“மலையக மக்கள் கோரிக்கை” தொடர்ந்து வாசிக்க…)

ட்ரம்ப்பைத் துவைத்தெடுத்தார் ஜனாதிபதி ஒபாமா

ஜனநாயகக் கட்சியின் 2004ஆம் ஆண்டுக்கான தேசிய மாநாட்டின்போது, அப்போது இலினொய்ஸ் மாநிலத்தின் செனட்டின் உறுப்பினராக இருந்த 42 வயதான பராக் ஒபாமா, மிகச்சிறந்த உரையொன்றை ஆற்றினார். அந்த உரை தான், பராக் ஒபாமாவின் அரசியல் வாழ்க்கையை உண்மையில் தொடக்கி வைத்தது என்று சொல்வர்.

(“ட்ரம்ப்பைத் துவைத்தெடுத்தார் ஜனாதிபதி ஒபாமா” தொடர்ந்து வாசிக்க…)

போரால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு மலே­ஷி­யாவில் திரட்­டப்­பட்ட நிதி தொடர்பில் விபரம் வேண்டும் வட மாகா­ண­சபை உறுப்­பினர் அனந்தி சசி­தரன் கோரிக்கை

இலங்­கையில் போரால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உதவும் நோக்கில் மலே­ஷிய தமிழர் பேரவை அமைப்­பினால் திரட்­டப்­பட்ட நிதி செல­வி­டப்­பட்­டமை தொடர்பில் விப­ரங்­களை அறியத் தரவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வட மாகாண சபை உறுப்­பினர் அனந்தி சசி­தரன் கோரிக்கை விடுத்­துள்ளார்.

(“போரால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு மலே­ஷி­யாவில் திரட்­டப்­பட்ட நிதி தொடர்பில் விபரம் வேண்டும் வட மாகா­ண­சபை உறுப்­பினர் அனந்தி சசி­தரன் கோரிக்கை” தொடர்ந்து வாசிக்க…)

பாதயாத்திரையால் வாகன நெரிசல்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் இணைந்து முன்னெடுத்துள்ள பாதயாத்திரை காரணமாக பேராதனை மற்றும் பிலிமத்தலாவ ஆகிய பிரதேசங்களுக்கிடையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வாகன நெரிசலை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.

இந்திய அம்பியூலன்ஸ் சேவை ஆரம்பம்

இந்திய அரசாங்கத்தின் அனுசரணையில் முன்னெடுக்கப்படும் அவசர அம்பியூலன்ஸ் சேவையின் முதலாவது கட்டம் இன்று வியாழக்கிழமை(28) ஆரம்பமாகியுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் காலியில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்து இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் சுமார் 470 உள்நாட்டு இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாயப்பு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிள்ளைகளை லண்டனுக்கு அனுப்பிபோட்டு, பிச்சைக்காரனின் புண்ணைக் காட்டி பிச்சை எடுக்கிற அரசியவாதிகள் நீங்கள்..!! சுரேஸ்மீது – ரிசாட் பதிதியூன் பாய்ச்சல்

“இரண்டரை வருட ஆட்சிக்காலத்தில் வடக்கு முஸ்லீம்களுக்கு ஒரு மலசலகூடத்தைக்கூட கட்டிக்கொடுக்காத விக்கினேஸ்வரன் ஐயா, அரசு நியமித்துள்ள செயலணிக் குழுவை நிராகரிப்பதாக கூறுகின்றார்.
மீள்குடியேற்றம் மத்திய அரசு செய்கின்ற பணியாகும். அந்த மக்களிற்காக வடக்கு மாகாணசபை அதுவரை எந்த ஒரு பணியையும் செய்யவில்லை” என அமைச்சர் ரிசாட் பதிதியூன் குற்றஞ்சாட்டினார்.
“தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இதுவரை அந்த மக்கள் குறித்து தம்மிடம் பேச்சுவார்த்தை நடத்தக்கூட வரவில்லை. இப்போது தம்மைக்கேட்டுத்தான் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என கூறுகிறார்கள்” என்றார்.

(“பிள்ளைகளை லண்டனுக்கு அனுப்பிபோட்டு, பிச்சைக்காரனின் புண்ணைக் காட்டி பிச்சை எடுக்கிற அரசியவாதிகள் நீங்கள்..!! சுரேஸ்மீது – ரிசாட் பதிதியூன் பாய்ச்சல்” தொடர்ந்து வாசிக்க…)

விடுதலைப்புலி ஆதரவாளர்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களின் செயற்பாடுகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு படையினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக, இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சர்வதேச ரீதியில் தீவிரவாத அமைப்புக்களின் செயற்பாடுகள் குறித்து இலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், இராணுவத்திற்கு விளக்கம் அளித்துள்ளார். பயங்கரவாத செயற்பாடுகளை முறியடிக்க நவீன உத்திகள் பின்பற்றப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை மீள ஒருங்கிணைத்தல் அல்லது மீள எழுச்சிபெறுதல் தொடர்பான சாத்தியங்கள், வெளிநாடுகளில் தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கை பிரச்சாரம் செய்யப்படுதல் குறித்தும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமானது என அவர் கூறியுள்ளதாக, பிரபல ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது.

வேற்றுகிரகவாசிகள் வாழும் கிரகம் கண்டு பிடிப்பு

வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு பெரும்பாலான விஞ்ஞானிகள் ஆம் என்றே பதில் கூறுகிறார்கள்.

(“வேற்றுகிரகவாசிகள் வாழும் கிரகம் கண்டு பிடிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

ஐரோம் சானு ஷர்மிளா தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்

இம்பால்: மணிப்பூரின், “இரும்பு பெண்’ என்று அழைக்கப்படும், ஐரோம் சானு ஷர்மிளா, தனது 16 ஆண்டு கால உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொண்டு தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.

(“ஐரோம் சானு ஷர்மிளா தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்” தொடர்ந்து வாசிக்க…)

‘தனிநாடு தேவையா எனக்கேட்டு அடித்தே கொன்றனர்’: பரபரப்புச் சாட்சியம்

நண்பரை, அடித்துக் கொலை செய்த சுன்னாகம் பொலிஸார், அந்தக் கொலையை தற்கொலையாக மாற்றி, மரணச் சான்றிதழ் வழங்கினர்’ என, சுன்னாகம் பொலிஸாருக்கு எதிராக சந்தேகநபர்கள், மல்லாகம் நீதிமன்றத்தில் நேற்றுத் திங்கட்கிழமை (25), பரபரப்புச் சாட்சியம் வழங்கியுள்ளனர். ‘உனக்கு தனி நாடு தேவையா?’ எனக்கூறி நண்பரை அடித்துக் கொலை செய்ததாகத் தெரிவித்த சந்தேகநபர்கள், நண்பனைக் கொலை செய்ததாகக் கூறப்படும் பொலிஸாரையும் அடையாளங்காட்டினர். அவர்கள் அடையாளம் காட்டிய அனைத்துப் பொலிஸாரையும் கைது செய்யுமாறு, நீதவான் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

(“‘தனிநாடு தேவையா எனக்கேட்டு அடித்தே கொன்றனர்’: பரபரப்புச் சாட்சியம்” தொடர்ந்து வாசிக்க…)