மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் கருணாநிதி

கடந்த ஒரு வாரமாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி வெள்ளிக்கிழமை வீடு திரும்பினார். கருணாநிதியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அவர் வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். காரில் இருந்து சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி வந்த கருணாநிதியை, கோபாலபுரம் இல்லத்தில் திரண்டிருந்த திமுக தொண்டர்கள் வரவேற்றனர். சிகிச்சை நிறைவடைந்து உடல்நிலை தேறியுள்ள நிலையில், கருணாநிதி முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்றும், பார்வையாளர்களைச் சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

(“மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் கருணாநிதி” தொடர்ந்து வாசிக்க…)

முஸ்லிம்களை நாட்டுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று கூறியது சரியே – டொனால்டு ட்ரம்ப்

ஜெர்மனி, துருக்கியில் நடந்துள்ள தீவிரவாத தாக்குதல்களின் மூலம், முஸ்லிம்களை நாட்டுக்குள் அனுமதிக்கக் கூடாது என்ற தனது திட்டம் மிகச் சரியானது என நிரூபிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு ட்ரம்ப், முஸ்லிம்களுக்கு எதிரான பல்வேறு சர்ச்சைக்குரிய யோசனைகளை முன்வைத்தார். முஸ்லிம்களுக்கு தனி பதிவேடு, அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் குடியேறத் தடை விதிப்பது போன்ற அவரின் பல திட்டங்கள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகின.

(“முஸ்லிம்களை நாட்டுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று கூறியது சரியே – டொனால்டு ட்ரம்ப்” தொடர்ந்து வாசிக்க…)

ரவிராஜ் கொலை வழக்கு: தொகுப்புரைகள் நிறைவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கின் தொகுப்புரைகள் சற்று முன்னர் நிறைவடைந்தன. தொகுப்புரைகள், இன்று காலை முதல் எழுவர் அடங்கிய விசேட சிங்கள ஜூரிகள் முன்னிலையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வைத்து ஆற்றுப்படுத்தப்பட்டன. கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி மணிலால் வைத்திய திலக்க, இன்னும் சொற்ப நேரத்தில், ஜூரிகளுக்கு தெளிவுரையளிப்பார். விசேட சிங்கள ஜூரிகள், 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் திகதி நியமிக்கப்பட்டனர். 23 ஆம் திகதியிலிருந்து 22 நாட்கள் சாட்சியமளிப்புகள் இடம்பெற்றன. சாட்சியமளிப்பு நேற்று வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது.

(“ரவிராஜ் கொலை வழக்கு: தொகுப்புரைகள் நிறைவு” தொடர்ந்து வாசிக்க…)

த.மு.கூவின் இணை பேச்சாளர்கள் நியமனம்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணை பேச்சாளர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.திலகராஜ், வேலுகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பதுளை மாவட்ட எம்.பி அரவிந்தகுமார், கூட்டணியின் நாடாளுமன்ற குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இம்முடிவுகளை கொழும்பில் கூடிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் மத்தியக்குழு எடுத்துள்ளது. கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பிரதி தலைவர்களான பழனி திகாம்பரம், வி.இராதாகிருஷ்ணன், செயலாளர் அன்டன் லோரன்ஸ், தவிசாளர் புத்திர சிகாமணி, உப செயலாளர் சண் பிரபாகரன், சரத் அத்துகோரள ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

சுவாதி கொலையில் நம்பகமான தகவல்கள் கிடைத்திருக்கின்றன:

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதி கொலையாளி குறித்த நம்பகமான தகவல்கள் கிடைத்திருக்கின்றன. ஏறக்குறைய கொலையாளியை நெருங்கிவிட்டோம். கொலையாளி விரைவில் பிடிபடுவார் என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் கூறினார். சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஐ.டி. பெண் ஊழியர் சுவாதி (24) கடந்த 24-ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். கண்காணிப்பு கேமராக்களில் பதிவான நபரின் புகைப்படத்தை சூளைமேடு மற்றும் நுங்கம்பாக்கம் பகுதிகளில் வீடு வீடாகக் காட்டி போலீஸார் துப்பு துலக்கி வருகின்றனர்.

(“சுவாதி கொலையில் நம்பகமான தகவல்கள் கிடைத்திருக்கின்றன:” தொடர்ந்து வாசிக்க…)

அரசியல் தீர்வு பற்றி : ‘சம்பந்தன் உறுதிப்படுத்திவிட்டார்’

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், அதிகாரப் பகிர்வு தொடர்பில் தெரிவித்த கருத்தானது, அவர் ஒரு ஜனநாயகவாதி என்பதை உறுதிபடுத்திவிட்டார்” என, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைமை அலுவலகத்தில், நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அதிகாரப்பகிர்வு மற்றும் ஆளுநர் நீக்கம் தொடர்பான கூட்டமைப்பின் கருத்து தொடர்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

(“அரசியல் தீர்வு பற்றி : ‘சம்பந்தன் உறுதிப்படுத்திவிட்டார்’” தொடர்ந்து வாசிக்க…)

ஐ.நா தீர்மானம் நிறைவேற்றம்; சிரியாவுக்குள் ஐ.நா கண்காணிப்பாளர்கள்

சிரியாவில் முற்றுகைக்குள்ளாகியுள்ள பொதுமக்கள் வெளியேறுவதைக் கண்காணிக்கவும் நகரங்களில் எஞ்சியுள்ள மக்களின் நலன்களைக் கண்காணிக்கவும், ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பாளர்களை அனுப்புவதற்கான தீர்மானத்தை, ஐ.நா பாதுகாப்புச் சபை நிறைவேற்றியுள்ளது. இது தொடர்பான தீர்மானத்தை, ஐக்கிய அமெரிக்கா கொண்டுவரவிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு வெளியிட்ட ரஷ்யா, தன் சார்பில் புதிய தீர்மானமொன்றைச் சமர்ப்பிக்க முடிவு செய்திருந்தது. எனினும், பிரான்ஸும் ரஷ்யாவும் இணைந்து தயாரித்த தீர்மானம், திங்கட்கிழமையன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, அலெப்போவில் ஏற்கெனவே காணப்படும் 100க்கும் அதிகமாக ஐ.நா மனிதாபிமானப் பணியாளர்கள், இதற்காகப் பயன்படுத்தப்பட முடியுமென, ஐ.நா அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

(“ஐ.நா தீர்மானம் நிறைவேற்றம்; சிரியாவுக்குள் ஐ.நா கண்காணிப்பாளர்கள்” தொடர்ந்து வாசிக்க…)

‘மைத்திரி மரணிப்பார்: கோட்டா ஜனாதிபதியாவார்’

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனவரி மாதத்துக்குள் இயற்கையாக மரணமடைவார் என்றும், அதன் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும். அத்தேர்தலில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ வெல்வார் என்றும் ஜோதிடரினால் கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளமையாது, சாஸ்திர சதியாகும் என்று ஊடகத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பாக வெளியாகியுள்ள ஜோதிடரின், ஜாதகக் கணிப்பின் பின்னணியைக் கண்டறிவதற்காக அது தொடர்பான காணொளி, பொலிஸ்மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்றும் அவ்வமைச்சு அறிவித்துள்ளது.

(“‘மைத்திரி மரணிப்பார்: கோட்டா ஜனாதிபதியாவார்’” தொடர்ந்து வாசிக்க…)

நீர்மூழ்கியை அமெரிக்காவிடம் ஒப்படைத்தது சீனா

தென்சீனக் கடல் பகுதி முழு வதையும் சீனா சொந்தம் கொண் டாடி வருகிறது. ஆனால் அந்தப் பகுதி சர்வதேச கடல் எல்லை என்று அமெரிக்கா வாதிட்டு வருகி றது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பிலிப்பைன்ஸ் அருகே தென்சீனக் கடலில் மிதந்த அமெரிக்க கடற் படையின் ஆளில்லா நீர்மூழ்கியை சீன கடற்படை கைப்பற்றியது. சீன கடல் பகுதியில் அமெரிக்கா உளவு பணியில் ஈடுபட்டதாக அந்த நாடு குற்றம் சாட்டியது.

(“நீர்மூழ்கியை அமெரிக்காவிடம் ஒப்படைத்தது சீனா” தொடர்ந்து வாசிக்க…)

துருக்கியில் ரஷ்ய தூதர் சுட்டுக் கொலை

துருக்கி தலைநகர் அங்காராவில் உள்ள கலைக்கூடத்தில், துருக்கிக்கான ரஷ்ய தூதர் ஆண்ட்ரே கார்லோஃப் மீது நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் அவர் உயிரிழந்தார். துருக்கிக்கான ரஷ்ய தூதரான ஆண்ட்ரே கார்லோஃப் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். கலைக்கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், துருக்கிக்கான ரஷ்ய தூதரான ஆண்ட்ரே கார்லோஃப் உரையாற்றிய தொடங்கிய போது, சிரியாவின் அலெப்போ நகர் குறித்த தகவலுடன் கோஷமிட்டவாறு துப்பாக்கி ஏந்திய ஒருவர் கார்லோஃபை நோக்கி சுட்டதாக தகவல்கள் தெரிக்கின்றன.