பிடலுக்கு இன்று அனுதாபப் பிரேரணை

கியூபாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிடல் கெஸ்ட்ரோவுக்கு, நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை, அனுதாபப் பிரேரணை கொண்டுவரப்படும். அனுதாப பிரேரணையை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன கொண்டுவருவார். அந்த அனுதாப பிரேரணை, இன்று மாலை 5 மணிமுதல் 7 மணி வரையிலும் இடம்பெறும். இதேவேளை, பிடல் கஸ்ட்ரோவின் இறுதி கிரியைகளில் பங்கேற்பதற்கு இலங்கை அரசாங்கத்தின் சார்ப்பில், அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பங்கேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பதவி விலகத் தயாரென்கிறார் தென்கொரிய ஜனாதிபதி

சர்ச்சைகளில் சிக்கியுள்ள தென்கொரிய ஜனாதிபதி பார்க் கியுன் ஹி, தனது பதவிக்காலம் முடிவடைய முன்னரே தனது பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ய தயார் என்றும், தனது ஜனாதிபதிப் பதவி குறித்து தீர்மானிப்பதற்கான பொறுப்பை நாடாளுமன்றத்திடம் விடுவதாக நேற்றுச் செவ்வாய்க்கிழமை (29) தெரிவித்துள்ளார்.

(“பதவி விலகத் தயாரென்கிறார் தென்கொரிய ஜனாதிபதி” தொடர்ந்து வாசிக்க…)

குணரத்னத்தை நாடு கடத்தமாட்டோம்

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரத்னத்தை நாடுகடத்த மாட்டோம் என்று தெரிவித்துள்ள அரசாங்கம், ஸ்ரீ லங்கா பிரஜாவுரிமைக்காக விண்ணப்பித்தால், அது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார். குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்திட்டங்களை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர், கேகாலை, அங்குருவெல பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

‘சிவாஜிலிங்கத்தைப் பற்றி ஆராய்ந்தால் திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும்’

“நிலைத்தன்மையற்ற கோமாளி அரசியலை எப்போதும் செய்யும் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்துக்கு பதிலளிக்க, நான் விரும்பவில்லை. என்றாலும், இவரது போக்கிரித்தனமான கருத்துகள் ஒரு சிலரைகூட தவறாக வழிநடத்திவிடக்கூடாது என்பதால், இந்த பதிலை தர விரும்புகிறேன்” என என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

(“‘சிவாஜிலிங்கத்தைப் பற்றி ஆராய்ந்தால் திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும்’” தொடர்ந்து வாசிக்க…)

அம்மானுக்கு விளக்கமறியல்

கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை டிசெம்பர் மாதம் 7ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம், இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. அரச வாகனமொன்றை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பாக, கருணா அம்மான், நிதிக் குற்றப் புலனாய்வு பொலிஸார் முன்னிலையில் இன்று காலை ஆஜரான நிலையில், கைது செய்யப்பட்டார். அதனையடுத்து, நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்ட ​ போது, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

‘கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதற்கான பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது’

தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் அரசியல் ரீதியாக இணைந்து செயற்படுவதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த இரு அமைப்புகளும் அரசியல் ரீதியாகவும் ஒன்றுப்பட்டு செயற்பட முடியும் என எதிர்பார்க்கின்றேன் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

(“‘கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதற்கான பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது’” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் பிடலுக்கு எம் இதய அஞ்சலி

அமெரிக்காவின் வாசலில் சாமானியர்களின் அதிகாரத்தை நிறுவிய மானிடத்தை வரலாறு விடுதலை செய்யும் என்றூ எதிர்வு கூறிய சுதந்திர விடியலை நேசிக்கும் உலக மக்களின் கனவு நாயகன் மாநிட நேயன் உலக ஜனநாயகவாதி ஏற்றத்தாழ்வற்ற நீதியான உலகை நிறூவ முடியும் என்றூ எம் காலத்தின் வாழும் உதாரணமான அந்த மாபெரும் சிந்தனயாளன் செயல் பாட்டாளன் நிரந்தரமாகா உறங்கி விட்டான். தோழர் பிடலுக்கு எம் இதய அஞ்சலி.

தமிழர் சமூக ஜனநாயக கட்சி (SDPT)

கண்ணீர் அஞ்சலி

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (EPRLF) கிளி நொச்சி மாவட்ட ஆரம்பகால உறுப்பினர் தோழர் ஜீவா நேற்று இரவு பாண்டிச்சேரி மருத்துவ மனையில் மாரடைப்பால் காலமானார். தோழரின் இறுதிச் சடங்கு நாளை திருவண்ணாமலை அடி அண்ணாமலை முகாமில் ( இலங்கை அகதிகள் முகாம்) நடைபெறவுள்ளது.மக்களின் விடுதலைக்காய் உழைத்த முதன்மைத்தோழர்களில் ஒருவரான இவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது.

யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின சுவரொட்டிகள்

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தினுள் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தும், மாவீரர் தினத்தை நினைவூட்டும் வகையிலான சுவரொட்டிகள், இன்று வெள்ளிக்கிழமை (25) ஒட்டப்பட்டுள்ளன.

(“யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின சுவரொட்டிகள்” தொடர்ந்து வாசிக்க…)

ரவிராஜ் எம்.பி கொலை வழக்கு: சுட்டுக் காட்டினார் சாட்சியாளர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் மீது, 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதியன்று காலை துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டபோது, செனவிரத்ன என்ற சந்தேகநபர், கறுப்புநிறப் பையினுள் ரி-56 ரகத் துப்பாக்கியை வைத்து எவ்வாறு சுட்டார் என்பதை, முதலாவது சாட்சியாளரான மனம்பேரிகே பிருதிவிராஜ் சம்பத், கொழும்பு மேல்நீதிமன்றத்தில், நேற்று வியாழக்கிழமை செய்துகாட்டினார்.

(“ரவிராஜ் எம்.பி கொலை வழக்கு: சுட்டுக் காட்டினார் சாட்சியாளர்” தொடர்ந்து வாசிக்க…)