விடுதலைப் புலிகளின் மாவீரர் நாள் நிகழ்வினையொட்டிய துண்டுப்பிரசுரத்தை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் பாரிஸ் கார் டு( Gare du Nord )நோர்ட் புகையிரத நிலையத்தின் குட்டி யாழ்ப்பாணம் என்று அழைக்கப்படும் தமிழர் வர்த்தக நிலையங்கள் கொண்ட லாச்சப்பல் வெளிச்செல்லும் நுழைவாயிலில் நேற்று பிற்பகல் 4.00 மணியளவில் விநியோகித்துக் கொண்டிருந்த அங்கு வந்த மற்றொரு சாரார் பிரான்ஸ் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் பணிமனையினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள மாவீரர் நாள் நிகழ்வினையொட்டிய துண்டுப் பிரசுரத்தை அதே நுழைவாயிலில் விநியோகிக்க முற்பட்டனர். இந்த வேளையில்; இரு சாராருக்கும் இடையேயான வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி இறுதியில் வாள்வவெட்டு சம்பவமாக முடிவடைந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் சம்பவ இடத்திற்கு விரைந்த பிரான்ஸ் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் முதற் கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.
Category: செய்திகள்
அரசியமைப்பு பேரவை: ஜனவரியில் 3 நாட்கள் விவாதம்
அரசியலமைப்பு பேரவை வழிநடத்தல் குழுவின் கீழுள்ள ஆறு உப-குழுக்களின் அறிக்கை நாடாளுமன்றத்தில், நேற்று சனிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த அறிக்கைகளின் மீதான விவாதம், 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9,10 மற்றும் 11ஆம் திகதிகளில் இடம்பெறும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
(“அரசியமைப்பு பேரவை: ஜனவரியில் 3 நாட்கள் விவாதம்” தொடர்ந்து வாசிக்க…)
ஒன்பது ஈழத் தமிழர்களை நாடுகடத்திய சுவிட்சர்லாந்து
சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்த மேற்குறித்த ஒன்பது இலங்கையரை அந்த நாட்டு அரசு நாடுகடத்தியுள்ளது. இன்று (புதன்கிழமை) 1.5 என்ற விஷேட விமானம் மூலம் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர். ஒன்பது பேரும் வடக்கை சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் 6 மாதங்கள் தொடக்கம் இரண்டு வருடங்கள் வரை சுவிட்சர்லாந்தில் வசித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இலங்கையர்கள் தொடர்பில் சுவிட்சர்லாந்து அரசு மேற்கொண்ட விசாரணைகளை தொடர்ந்தே இவர்கள் நாடுகடத்தப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
(“ஒன்பது ஈழத் தமிழர்களை நாடுகடத்திய சுவிட்சர்லாந்து” தொடர்ந்து வாசிக்க…)
பானுவையும் இளந்திரையனையும் புலிகளே சுட்டுக் கொன்றனர்!
ஆனந்தபுரத்தில் இராணுவத்தின் தாக்குதல் உக்கிரமாக இருந்ததனால் அதனை முறியடித்து பிரபாகரன் முல்லைத்தீவுக் காட்டிற்குள் தப்பிச் செல்ல கடும் யுத்தம் நடந்தது. ஆனால் இராணுவத்தின் தாக்குதலை புலிகளால் சமாளிக்க முடியவில்லை. ஆனந்தபுரத்தில் இராணுவத்தின் கடுமையான தாக்குதலில் புலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட நூற்றுக் கணக்கான புலிகள் கொல்லப்பட்டனர்.
(“பானுவையும் இளந்திரையனையும் புலிகளே சுட்டுக் கொன்றனர்!” தொடர்ந்து வாசிக்க…)
ஐ.நாவின் கேள்வியால் ஆட்டங்கண்டது அரசாங்கம்
கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் மட்டக்களப்பிலும் உள்ள சித்திரவதைக் கூடங்களை, இலங்கை அரசாங்கம் விசாரித்ததா என்பது தெளிவில்லாமல் இருப்பதாக, சித்திரவதைக்கெதிரான செயற்குழுவின் 59ஆவது மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. இந்த அமர்வில், அச்செயற்குழுவின் தலைவர் ஜென்ஸ் மொட்விக், உப தலைவர் பெலிஸ் காயெர் உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள், தங்களது கருத்துகளை முன்வைத்ததோடு, கேள்விகளையும் முன்வைத்தனர்.
(“ஐ.நாவின் கேள்வியால் ஆட்டங்கண்டது அரசாங்கம்” தொடர்ந்து வாசிக்க…)
கேள்விகளை எழுப்பியுள்ள ட்ரம்ப்பின் புதிய நியமனம்
ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப், அவரது முதற்கட்ட நியமனங்களை மேற்கொண்டுள்ளார். வெள்ளை மாளிகைக்கான இரண்டு பிரதான நியமனங்களே மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதில் ஒருவரது நியமனம், கேள்விகளை எழுப்பியுள்ளது.
(“கேள்விகளை எழுப்பியுள்ள ட்ரம்ப்பின் புதிய நியமனம்” தொடர்ந்து வாசிக்க…)
கவனயீர்ப்புப் போராட்டம் நடத்த ஏழு கட்சிகள் தீர்மானம்
வடக்கில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மக்கள் மத்தியில் ஓர் அச்ச சூழ்நிலையை உருவாக்குவோருக்கு எதிராகவும், அவ்வாறானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு வலியுறுத்தியும் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை நடத்துவதற்கு ஏழு கட்சிகள் தீர்மானித்துள்ளன. யாழ். குடாநாட்டைப் பதற்றசூழலில் தொடர்ந்து வைக்க முயலும் அரச புலனாய்வின் நிகழ்ச்சி நிரலை விரிவாக ஆராய, ஆறு தமிழ்க் கட்சிகளை அழைத்து, ரெலோ நடத்திய இரண்டு மணிநேரச் சந்திப்பின் பின்னர், இவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
(“கவனயீர்ப்புப் போராட்டம் நடத்த ஏழு கட்சிகள் தீர்மானம்” தொடர்ந்து வாசிக்க…)
E.P.D.P. ஒருபோதும் ஆயுதக்குழுவாகச் செயற்பட்டதில்லை – டக்ளஸ் தேவானந்தா…!
ஈழமக்கள் ஜனநாயக கட்சி உட்பட புலிகளின் அச்சுறுத்தலை எதிர்நோக்கிய தமிழ் அமைப்புகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாத நிலையிலேயே அவர்களது தற்பாதுகாப்பிற்காக கடந்த கால அரசுகள் ஆயுதங்களை வழங்கியிருந்தன. அவ்வாயுதங்கள் 2002 ஆம் அண்டு ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னர் போர்நிறுத்த கண்காணிப்பு குழு முன்னிலையில் அரசிடம் மீளவும் ஒப்படைக்கப்பட்டன. நாம் ஒருபோதும் ஆயுதக்குழுவாகச் செயற்பட்டதில்லை என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
(“E.P.D.P. ஒருபோதும் ஆயுதக்குழுவாகச் செயற்பட்டதில்லை – டக்ளஸ் தேவானந்தா…!” தொடர்ந்து வாசிக்க…)
“1952-1986 தோழர் விசுவானந்ததேவன்” நூல் அறிமுக நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றபோது…..
வடமாகாணசபையின் எதிர்கட்சி தலைவர் தவராசாவிற்கும் ஈபிடிபி தலைமைக்குமிடையே முரண்பாடு….?
வடமாகாணசபையின் எதிர்கட்சி தலைவர் தவராசாவிற்கும் ஈபிடிபி தலைமைக்குமிடையே முரண்பாடுகள் உண்டு என்பதை ஈபிடிபி கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா ஏற்றுக்கொண்டுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களது கேள்வியொன்றிற்கு பதிலளித்த அவர் ஜனநாயக ரீதியிலான கருத்து முரண்பாடே அதுவெனவும் அவர் தெரிவித்தார்.