தீவிர புலி ஆதரவு அரசியல் பேசும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும், இராணுவ புலனாய்வுத் துறைக்கும் தொடர்பிருக்கலாம் என நீண்ட காலமாக சந்தேகம் இருந்தது. தற்போது அது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவை சேர்ந்த அறுவர் கைது செய்யப் பட்டுள்ளனர். கொழும்பில் இருந்து சென்ற பயங்கரவாத தடுப்புப் பொலிஸ் விசேட பிரிவினரின் விசாரணைகளின் பின்னரே கைது நடவடிக்கை இடம்பெற்றது. கைது செய்யப் பட்டவர்களில் ஒருவர் இராணுவத்தை சேர்ந்தவர். இன்னொருவர் சைக்கிள் கட்சி என்று அழைக்கப் படும் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர். இவர் எழுக தமிழ் நிகழ்வையும் முன் நின்று நடத்தியவர் என்பது குறிப்பிடத் தக்கது.
(“எழுக தமிழ் நிகழ்வையும் முன் நின்று நடத்தியவர் ஆவா குழு உறுப்பினர்” தொடர்ந்து வாசிக்க…)