சூரிச் மாநகரில் “புளொட்” அமைப்பினர் கலந்து கொள்ளும் மாபெரும் மேதின ஊர்வலம்..!!

மே 1 தொழிலாளர் தினம் – 2016
சூரிச் மாநகரில் மாபெரும் மேதின ஊர்வலம்,
01.05.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணிக்கு…

தோழமை உணர்வுள்ள சுவிஸ் வாழ் தமிழ் மக்களே! கழகத் தோழர்களே! தோழமைக் கட்சி உறுப்பினர்களே! ஆதரவாளர்களே!

சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் 2016 மே முதலாம் திகதி சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு முன்னணிகள் மற்றும் உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்களும் கலந்து கொள்ளும் தொழிலாளர் தினத்தில் பேதங்கள் இன்றி நாமும் கலந்து கொண்டு, இலங்கை தாயகத்தில் தமிழினத்தின் ஜனநாயக அரசியல் தீர்வை அரசு அங்கீகரிக்க சர்வதேசம் தனது நியாயமான பங்களிப்பைச் செய்யக்கோரி குரல் கொடுத்து எமதின உரிமைப் போராட்டத்தை ஜனநாயக வழியில் உறுதியான வெற்றிக்கு இட்டுச்செல்ல வலுச்சேர்ப்போமாக!

(“சூரிச் மாநகரில் “புளொட்” அமைப்பினர் கலந்து கொள்ளும் மாபெரும் மேதின ஊர்வலம்..!!” தொடர்ந்து வாசிக்க…)

எம்மவரின் விசுவாசம்

இன்று யாழ்ப்பாணம் கச்சேரி கேட்போர் கூடத்தில் போலீஸ் பொதுமக்கள் சந்திப்பு நடந்தது……அதின் போது கூட்டமைப்பின் மாகாணசபை அங்கத்தவர ஒருவர் கூறினாராம்…..புலிகளின் காலத்தில் குற்றங்கள் மிகவும் குறைவாக நடந்தது என்று மறைமுகமாக….அதற்கு ஒரு ASP பதிலளிக்கையில் …பயங்கரவாதிகள் போன்று விரும்பிய எல்லோரையும் கொலைசெய்தும்,,,,வழக்கு கணக்கு இல்லாமல் தண்டனை கொடுத்தும்….அதை விட யுத்த காலங்களில் நடந்தது போன்று விசாரணை இல்லாத விடயங்களை செய்ய முடியுமானால்???? 2 மணி நேரத்தில் இவைகளை அடக்க தம்மால் முடியும்…..ஆனால் ஒரு அரசின் சட்ட திட்டங்களுக்கு அமைய அப்படி தாங்கள் செய்ய முடியாது என்று….. அதை புரிந்துகொண்ட புலிகேசி திரும்ப கேள்வியே கேட்கவில்லையாம்….

யாழ். இளைஞர்கள் கைது

இரவு வேளையில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 16 இளைஞர்களை யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று (24) ஞாயிற்றுக்கிழமை இரவு கைதுசெய்துள்ளனர். 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் யுhழ். பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் இரவு வேளையில் நடமாடியதுடன், மது போதையில் தகராற்றிலும் ஈடுபட்டுள்ளனர். குற்றச் செயல்களை தடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட பொலிஸ் குழுவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ். நகரப்பகுதியில் மேற்கொண்ட சோதனையின் போதே சந்தேகத்திற்கு இடமாக நின்ற 8 பேரையும், மதுபோதையில் நின்ற 6 பேரையும், அடிபட்ட 1 நபரையும், மதுபோதையில் தாக்குதல் மேற்கொண்ட ஒருவர் உட்பட 16 பேரை கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட 16 பேரும் யாழ். பொலிஸ் நிpலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களை யாழ். நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

வட மாகாணசபையை கலைத்து கையிலெடுக்கவும்: கம்மன்பில

வட மாகாணசபையைக் கலைத்துவிட்டு, அதன் நிர்வாகத்தை ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், பிவிதுரு ஹெல உறுமய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.பியுமான உதய கம்மன்பில, கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது, வட மாகாணசபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் கருத்துரைத்தார்.

(“வட மாகாணசபையை கலைத்து கையிலெடுக்கவும்: கம்மன்பில” தொடர்ந்து வாசிக்க…)

காவத்தையில் கூட்டு மே தினம்

தோட்டத் தொழிலாளர்களின் நாட் சம்பளத்தை 1000/= ஆக உயர்த்து, தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உரித்துடன் வீட்டை வழங்கு, அனைவருக்கும் சமமான கல்வியும் இலவசக் கல்வியையும் உறுதி செய், கல்வியில் அரசியல் தலையீட்டை நிறுத்து, ஆசிரிய உதவியாளர்களுக்கு உடனடியாக நிரந்தர நியமனம் வழங்கு, வாழ்கை செவை குறை, தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்கு என்ற கோரிக்கைகளை முன்னிருத்தி மக்கள் தொழிலாளர் சங்கம், மக்கள் ஆசிரியர் சங்கம், இலங்கை கொம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம், மக்கள் பண்பாட்டுக் கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடாத்தும் கூட்டு மே தினக் கூட்டம் 01.05.2016 அன்று மு.ப. 10 மணிக்கு காவத்தை கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. தமது உறுப்பினர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் ஏனைய உழைக்கும் மக்களுக்கும் அவ் அமைப்புகள் மே தினக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

புதிய பொருளாதார வலயம் அறிவிப்பு

ஐரோப்பா, சீனா, சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளை ஒன்றிணைத்து, ஒரே பொருளாதார வலயத்தை அறிவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது. இந்தப் புதிய பொருளாதார வலயம் தொடர்பிலான அரசாங்கத்தின் தீர்மானத்தை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜூன் மாதத்தில் நாடாளுமன்றத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என்றும் அறியமுடிகின்றது.

(“புதிய பொருளாதார வலயம் அறிவிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

கைக்குண்டுடன் அரசியல்வாதியின் தேசிய அடையாள அட்டை

வவுனியா குட் ஷெட் பகுதியிலிருந்து, கைக்குண்டொன்றும் அதன் அருகிலேயே பிரபல தமிழ் அரசியல்வாதியொருவரின் தேசிய அடையாள அட்டையொன்றும் மீட்கப்பட்டுள்ளது. உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலையத்தே குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டதாகவும் கைக்குண்டு தணிக்கைச் செய்யும் விசேட அதிரடிப்படையினர் மூலம் குண்டு செயலிழக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பிள்ளையானின் விளக்கமறியல் மே 04 வரை நீடிப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 04 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராஜா முன்னிலையில் இன்று (20) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறுஉத்தரவிட்டார்.

(“பிள்ளையானின் விளக்கமறியல் மே 04 வரை நீடிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

கஞ்சாவுடன் மூவர் கைது

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று பேரை மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில்; இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், இவர்களிடமிருந்து கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர். கஞ்சா விற்பனை இடம்பெறுவதாக பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து, திடீர்ச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, மீராகேணிக் கிராமத்திலுள்ள இரண்டு வீடுகளில் மறைந்திருந்த 32 வயதுடைய ஒருவர் 3,000 மில்லிகிராம் கஞ்சாவுடனும் 40 வயதுடைய ஒருவர் 3,100 மில்லிகிராம் கஞ்சாவுடனும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, மிச்நகர் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து 2,220 மில்லிகிராம் கஞ்சாவுடன் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெட்கித் தலைகுனிவோம் – யாழில் 3 ஊடகவியலாளர்கள் பணி விலகல்

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கடந்த வாரம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்த கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு யாழ் ஊடகமொன்றில் பிரசுரிக்கப்பட்ட செய்தி தவறானது என சுமந்திரன் எம்.பி யினால் கொடுக்கப்பட்ட மறுப்பினை வெளியிட்டமை தொடர்பில் இரா.சம்பந்தன் குறித்த செய்தியை எழுதிய ஊடகவியலாளரும் அவரிற்கு ஆதரவாக இரு ஊடகவியலாளர்களும் தமது பணியினை இராஜினாமாச் செய்துள்ளதாக தெரிவிகப்படுகின்றது.

(“வெட்கித் தலைகுனிவோம் – யாழில் 3 ஊடகவியலாளர்கள் பணி விலகல்” தொடர்ந்து வாசிக்க…)