‘மீண்டும் யுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அனைவரினதும் பொறுப்பாகும்’

“நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அனைவரினதும் பொறுப்பாகும்” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். “அத்துடன், தேசிய நல்லிணக்கத்தைப் பலப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படும்” என்றும் அவர் குறிப்பிட்டார். காங்கேசன்துறை, கீரிமலை, நல்லிணக்கபுரம் கிராமத்தை இன்று(31) பிற்பகல் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

(“‘மீண்டும் யுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அனைவரினதும் பொறுப்பாகும்’” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில்‘வட மாகாணசபை அசமந்தப்போக்கு’ – எம். ஏ.சுமந்திரன்

“வடமாகாண சபையின் நிர்வாகத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பொறுப்பில்லை எனக் கூறமுடியாது. எனினும் வடமாகாண சபை, வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் அசமந்தப் போக்கைக் காட்டுகிறது” என, நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம். ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

(“வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில்‘வட மாகாணசபை அசமந்தப்போக்கு’ – எம். ஏ.சுமந்திரன்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 21 நாட்களுக்கு காலக்கெடு

வடமாகாணத்தில் சேவையாற்றிவரும் தமிழ் பொலிஸ் உத்தயோகத்தர்களை இலக்குவைத்து, அச்சுறுத்தல் கடி​தமொன்று வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் என்று குறிப்பிட்டு, “பிரபாகரன் படை” எனும் அமைப்பொன்றினால் உரிமை கோரப்பட்ட கடிதமொன்றே, இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரு மாணவர்களும் உயிரிழந்த சம்பவத்தில் நியாயம் கிட்டும் வரை, தமிழ் பொலிஸ்
உத்தி​யோகத்தர்கள் அனைவரும், தங்களது சேவையிலிருந்து தற்காலிகமாக விலகியிருக்க வேண்டும் என, அக்கடிதத்தின் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

(“தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 21 நாட்களுக்கு காலக்கெடு” தொடர்ந்து வாசிக்க…)

‘ஆவா’ வுடன் தொடர்புடைய‘அக்லின்’ குழு தலைவர் கைது

ஆவா குழுவுடன் தொடர்பினைப் பேணி, பொதுமக்களை அச்சுறுத்தி வந்தவர் என்று கூறப்படும் இளைஞர் ஒருவரை, பத்தமேனிப் பிரதேசத்தில் வைத்து, சனிக்கிழமை (29) கைது செய்ததாக, அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர். சமூக விரோதக் குழுவெனக் குறிப்பிடப்படும் ஆவா குழுவுடன், இவர் தொடர்பினை பேணி வந்துள்ளமை பொலிஸ் புலன் விசாரணையிலும், பேஸ்புக் தொடர்பு மூலமும் தெரியவந்துள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டனர்.

(“‘ஆவா’ வுடன் தொடர்புடைய‘அக்லின்’ குழு தலைவர் கைது” தொடர்ந்து வாசிக்க…)

வலதுசாரிகள் பக்கம் செல்கிறது பிரேஸில்

பிரேஸில் றியோ டி ஜெனீரோவின் மேயராக, சீர்திருத்த சபையைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் தெரிவாகியுள்ளார். கத்தோலிக்கர்களை ஒரு முறை, “அரக்கர்கள்” என்றழைத்த இவரின் தெரிவு, பிரேஸிலின் அரசியல், வலதுசாரிகள் பக்கமாகச் செல்வதைக் காட்டுவதாகக் கருதப்படுகிறது.

(“வலதுசாரிகள் பக்கம் செல்கிறது பிரேஸில்” தொடர்ந்து வாசிக்க…)

வவுனியாவில் வெவ்வேறு இடங்களில் வாள் வெட்டு சம்பவங்கள் – 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி !!

வவுனியாவில் தீபாவளி திருநாளான அன்று இளைஞர் குழுக்களிடைய ஏற்பட்ட மோதல்மற்றும் விபத்து காரணமாக கடந்த மணிநேரத்தில் வவுனியா வைத்தியசாலையில் 10பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வைத்தியசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பும்வழங்கப்பட்டுள்ளது.

(“வவுனியாவில் வெவ்வேறு இடங்களில் வாள் வெட்டு சம்பவங்கள் – 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி !!” தொடர்ந்து வாசிக்க…)

மரண அறிவித்தல்

திருமதி செல்லப்பா பரமேஸ்வரி
தோற்றம் : 10 செப்ரெம்பர் 1932 — மறைவு : 25 ஒக்ரோபர் 2016
யாழ். நாவாந்துறை தெற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு, கனடா Toronto Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா பரமேஸ்வரி அவர்கள் 25-10-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

(“மரண அறிவித்தல்” தொடர்ந்து வாசிக்க…)

‘சபைக்குள் பாலியல் தொந்தரவுகள்’

‘இலங்கையில், பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபையிலுள்ள அமைச்சர்களாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களினாலும், பாலியல் ரீதியிலான தொந்தரவுகளை அனுபவித்து வருகின்றனர்” என்று, முன்னாள் எம்.பி.யும் நடிகையுமான உபேக்ஷா சுவர்ணமாலி தெரிவித்துள்ளார்.

(“‘சபைக்குள் பாலியல் தொந்தரவுகள்’” தொடர்ந்து வாசிக்க…)

மரண அறிவித்தல்

(ரெலோ சிவா. அல்லது லிமோ சிவா என பலராலும் அறியப்பட்ட சிவா இன் மனைவியின் தயார் கனடாவில் இயற்கை எய்தியுள்ளார்)

திருமதி புஸ்பரத்தினம் நவரட்ணம்
மலர்வு : 29 யூலை 1932 — உதிர்வு : 24 ஒக்ரோபர் 2016

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கட்டப்பிராயை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பரத்தினம் நவரட்ணம் அவர்கள் 24-10-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற நவரட்ணம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

தர்மகுலசிங்கம்(குலம்- இலங்கை), காலஞ்சென்ற புஸ்பகாந்தன், ரஞ்சினி(கனடா), றஞ்சன்(டென்மார்க்), பாக்கியநாதன்(கிளி- கனடா), ஸ்ரீதரன்(தவம்- கனடா), சுகுமார்(கமல்- கனடா), சுகன்யா(கண்ணா- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

(“மரண அறிவித்தல்” தொடர்ந்து வாசிக்க…)