EPDP கட்சியிலிருந்து விலகி, புதிய செயற்பாட்டைத் தொடரவுள்ளேன் – சந்திரகுமார்

தமிழ் மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளித்து எனது அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா் முருகேசு சந்திரகுமார் அவா்கள் தெரிவித்துள்ளார் தமிழ்பேசும் மக்களுக்குரிய நியாயமான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்ளுவதற்கு அர்த்த புர்வமாகச் செயற்படவுள்ளதாகவும் இதற்கான புதிய சூழ்நிலைகள் உருவாகி வரும் சந்தர்ப்பத்தில் பல்வேறு சக்திகளையும் அவற்றின் தனித்தன்மைகளுடன் ஒன்றிணைய வைத்துச் செயலாற்ற விரும்புவதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்திருக்கிறார்.

(“EPDP கட்சியிலிருந்து விலகி, புதிய செயற்பாட்டைத் தொடரவுள்ளேன் – சந்திரகுமார்” தொடர்ந்து வாசிக்க…)

மா.பா.சி. கேட்டவை (தினக்குரல் பதிவுகள்)” எனும் நூலை புதிய பண்பாட்டுத்தளம் வெளியிடுகிறது

மா.பா.சி. கேட்டவை (தினக்குரல் பதிவுகள்)” எனும் நூலை புதிய பண்பாட்டுத்தளம் வெளியிடுகிறது.இந் நூல் வெளியீடும் நூலாய்வும் கொழும்பு தமிழ்ச் சங்கம், சங்கரப்பிள்ளை மண்டபத்தில், 17.04.2016 மாலை 4.30 மணியளவில் நடைபெறவுள்ளது. வேறுபட்ட பல அமைப்புகளது பரிமாணங்களை இந்நூலில் தரிசிக்க இயலுகிறது. கூட்ட உரைகளின் விவரணம், பத்திரிகைத் தமிழ், இலக்கிய ரசனைப்பாங்கு என்பவற்றின் சங்கமிப்போடு கூடிய இந்த நூலின் நடையியல் தமிழுக்குப் புதிது; 2007 – 2014 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்டதான காலகட்டத்தின் எமது கலை – இலக்கிய – சமூக அரங்குகளின் இயங்காற்றல் – செல்நெறிப் பரிணமிப்புகளை வெளிப்படுத்தும் வடிவத்தினாலும், புதிய பாணி நடையியல் வீச்சுக் காரணமாயும் இந்த நூல் பெரும் கவனிப்புக்குரியது. இலங்கையிலுள்ள 844 ஆளுமைகளின் விவரிப்புகள் இந்நூலின் பெயர்ச்சுட்டியில் இடம்பெறுவது தனிச் சிறப்பு.

 

(“மா.பா.சி. கேட்டவை (தினக்குரல் பதிவுகள்)” எனும் நூலை புதிய பண்பாட்டுத்தளம் வெளியிடுகிறது” தொடர்ந்து வாசிக்க…)

பணத்தால் நான்: பணத்தோடு நான்: பணத்திற்காகத்தான் நான்

விருத்தாசலத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு செல்கிறார் ஜெயலலிதா. இரண்டு பேர் சாகின்றனர்; 17 பேர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்படுகின்றனர். இது, பொதுக் கூட்டத்திற்கு சென்றவர்களின் நிலை. அது பொதுக்கூட்டம் தானே, போர்க்களம் அல்லவே! பின் ஏன் சாவுகள் நிகழ வேண்டும்? ஈ.வெ.ரா., அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவர், ராஜாஜி போன்ற தலைவர்களின் சிந்தனை திறன் மிக்க பேச்சைக் கேட்க, மக்கள் கடலெனத் திரண்டனர். அவர்களின் பேச்சுகள் நிகழும் மைதானங்கள், மாலை நேர கல்லுாரிகளாகவே மாறின. அந்த வகையில், பழைய தலைமுறையின் கருத்து வளமும், சொல்வளமும் மிக்க பேச்சாளர்களில் இன்று எஞ்சி இருக்கும் இருவர், கருணாநிதியும், அன்பழகனும் தான்.

(“பணத்தால் நான்: பணத்தோடு நான்: பணத்திற்காகத்தான் நான்” தொடர்ந்து வாசிக்க…)

குஷ்புவுக்குக் கொடுப்பதற்கு பதில் ஜோதிமணிக்குக் கொடுங்கள்.. – ராகுல்

குஷ்புவுக்கு ஆர்.கே. நகர் தொகுதியை விட்டுக் கொடுக்க திமுக தயாரானது. ஆனால், ஆர்.கே. நகர் வேண்டாம், ஜோதிமணிக்காக அரவக்குறிச்சியை கொடுங்கள் என்று ராகுல் கூறிவிட்டாராம். தமிழக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே. நகர் தொகுதியில் குஷ்பு போட்டியிடும் வகையில், அந்த தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக் கொடுக்க திமுக மேலிடம் முன்வந்தது. ஜெயலலிதாவுக்கு சரியான போட்டியாகவும் இருக்கும், குஷ்புவுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற ஆசையில் திமுக இந்த தொகுதியை விட்டுக் கொடுக்க நினைத்தது.

(“குஷ்புவுக்குக் கொடுப்பதற்கு பதில் ஜோதிமணிக்குக் கொடுங்கள்.. – ராகுல்” தொடர்ந்து வாசிக்க…)

வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம்

வவுனியா தாண்டிக்குளத்தில் விவசாய திணைக்கள அரச விதை உற்பத்தி பண்ணையின் காணியில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்படவள்ளது. இது நீண்டகால நோக்கில் சாத்தியமானதா
ஏற்கனவே வவுனியா நகரம் குடிநீர் போக்குவரத்து பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளது. வர்த்தக மையம் அமையும்போது இன்னும் அதிகரிக்கும். ஒமந்தை அல்லது பூவரசங்குளத்தில் அமைந்தால் சிறப்பானதாகும். ஆனால் அரச விதை பண்ணை அதில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றபடுவதுடன் வவுனியா வைத்தியசாலைக்கு அவ்விடங்களை வழங்குவது சிறப்பானதாகும். எதிரகாலத்தில் அதிகரிக்கும் சனத்தொகை கருத்தில் கொள்வதுடன் நகர அபிவிருத்தி கீழ் நிதி ஒதுக்கப்பட்டமையால் நகரத்துக்கு உள்ளே அமைக்கபட்ட வேண்டும் என்றால் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண அமைச்சர் மாகாண சபை உறுப்பினர்கள் அத்துடன் நல்லாட்சி எதிர்கட்சி தலைவர் போன்றவர்களால் மாற்றமுடியாதா.

மாவோயிஸ்ட் அச்சுறுத்தலால் தமிழக எல்லையோர மதுக்கடை மூடல்

கேரள பழங்குடி மக்களின் தொடர் போராட்டம் மற்றும் மாவோயிஸ்ட் அமைப்பினரின் அச்சுறுத்தல் காரணமாக ஆனைகட்டியில் இருந்த மதுக்கடை மூடப்பட்டது. தமிழக – கேரள எல்லையில் கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியான ஆனைகட்டியில் தமிழக அரசுக்கு சொந்தமான மதுக்கடை உள்ளது. இந்த கடையால் இரு மாநில மக்களும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாகவும், எனவே அதை அகற்ற வேண்டும் எனவும் கேரளப் பகுதியில் உள்ள அட்டப்பாடி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

(“மாவோயிஸ்ட் அச்சுறுத்தலால் தமிழக எல்லையோர மதுக்கடை மூடல்” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கையின் பொருளாதாரத்தைக் கவிழ்க்கும் விடுமுறைகள்

இலங்கையில் வருடம் ஒன்றுக்கு வழங்கப்படும் 25 பொது விடுமுறைகள் காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இலங்கையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தத்தினால் பல பில்லியன் டொலர்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் நாட்டின் பொருளாதாரம் பாரிய பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை நிவர்த்திப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையில் நாட்டில் வழங்கப்படும் பொது விடுமுறைகள் பெரும் தடையாக அமைவதாகப் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

(“இலங்கையின் பொருளாதாரத்தைக் கவிழ்க்கும் விடுமுறைகள்” தொடர்ந்து வாசிக்க…)

நம்பிக்கை இழக்காத ஜோதி… அதிர்ந்து நிற்கும் அரவக்குறிச்சி திமுக!

அரவக் குறிச்சி தொகுதி தி.மு.கவுக்கு என ஒதுக்கப்பட்டாலும், விடாமல் போராடிக் கொண்டிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி. சமூக வலைத்தள பிரசாரம், மக்களை சந்திப்பது என அவரது உற்சாகம் தி.மு.கவினரை அதிர வைத்துக் கொண்டிருக்கிறது. சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்புக்கு ஆறு மாதம் முன்பிருந்தே,  மக்களை சந்தித்து பிரசாரத்தைத் தொடங்கியிருந்தார் ஜோதிமணி. ‘ராகுல்காந்தியின் ஆசியோடு கட்டாயம் போட்டியிடுவேன்’ என உறுதியாக நம்பிக் கொண்டிருந்தவருக்கு,  கூட்டணி உடன்பாட்டில் அரவக்குறிச்சியை திமுகவுக்கு விட்டுக்கொடுத்து  அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது காங்கிரஸ் தலைமை.

(“நம்பிக்கை இழக்காத ஜோதி… அதிர்ந்து நிற்கும் அரவக்குறிச்சி திமுக!” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் சின்னத்தம்பி சண்முகநாதன் காலமானார்!

‘சண்’ எனத் தோழர்களாலும், நண்பர்களாலும் அன்பாக அழைக்கப்பட்ட நெடுந்தீவைச் சேர்ந்த தோழர் சின்னத்தம்பி சண்முகநாதன், ஏப்ரல்07ஆம் திகதி (2016) கனடாவின் ரொறன்ரோ நகரில் தமது 63ஆவது வயதில் காலமானார். தோழர் சண் 1960களில் நெடுந்தீவில் ஆரம்பிக்கப்பட்ட முற்போக்கு வாலிபர் இயக்கத்தின் மூலம் தமது பொது வாழ்க்கையை ஆரம்பித்தார். பின்னர் மார்க்சிய அரசியலில் ஈடுபாடு கொண்டு, இலங்கை மார்க்சிச – லெனினிச கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து அதன் வட பிரதேச குழு உறுப்பினராகவும், அக்கட்சி 1975இல் ஆரம்பித்த தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியின் முதலாவது பொதுச் செயலாளராகவும் செயல்பட்டார். கிளிநொச்சியில் கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட விவசாயிகள் சங்க வேலைகளிலும் ஈடுபட்டார். எழுத்தாற்றல்மிக்க அவர், பல கட்டுரைகளையும், சில கதைகளையும் எழுதியுள்ளார்.  வடக்கில் போர் உக்கிரமடைந்த காலத்தில் இடம் பெயர்ந்து தமிழகத்திலும், ஜேர்மனியிலும் சில ஆண்டுகள் வாழ்ந்த அவர், கடைசி ஏழு வருடங்களாக குடும்பத்துடன் கனடாவில் வாழ்ந்து வந்தார். தமது கடைசிக்காலம் வரை, சமூக நடப்புகள் மீது உன்னிப்பான அவதானமும், விமர்சனமும் கொண்டவராக வாழ்ந்ததுடன், பரந்துபட்ட நட்பு வட்டாரத்தையும் கொண்டிருந்தார். அவரது இழப்பு, அவருடைய குடும்பத்தினருக்கு மட்டுமின்றி, அவருடன் பழகிய, அவரை நேசித்த அனைவரையும் ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்திவிட்டுள்ளது.

மைத்திரியுடன் பேச சி.வி.க்கு அழைப்பு

வடக்கு மாகாண காணிப் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் எதிர்வரும் 18ஆம் திகதி கலந்துரையாடுவதற்கு, தனக்கு அழைப்பு வந்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சபையின் அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்றது. சபை அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எனக்கிடையிலான இந்தக் கலந்துலையாடல், கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்தக் கலந்துரையாடலில், வடமாகாண காணிப் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தரவுகள் தேவையாகவுள்ளன’ என்றார். ‘ வடமாகாணசபை உறுப்பினர்கள், தங்களது பிரதேசங்களில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் உள்ளிட்ட விவரங்களைத் தரவேண்டும். அந்தத் தரவுகளை வைத்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடலாம்’ என்று அவர் மேலும் கூறினார்.