மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், நாட்டைவிட்டுத் வௌியேறிவிட்டதாக, இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் சொய்சா, நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். “மத்திய வங்கியின் பிணைமுறிப் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான கோப் குழு அறிக்கை, நாடாளுமன்றத்தில் வௌ்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அதில் பிரதானமாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, அவர் இவ்வாறு நாட்டைவிட்டு வௌியேறிவிட்டார்” என அவர் மேலும் கூறினார்.
Category: செய்திகள்
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானிய அதிகாரி வெளியேற்றம்
அணுவாயுதவல்லமை பொருந்திய நாடுகளான இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே, ஏற்கெனவே உயர் பதற்றம் நிலவுகின்ற நிலையில், இரகசியமான பாதுகாப்பு ஆவணங்களை வைத்திருந்தமைக்காக, குறிப்பிட்ட நேரம் தடுத்து வைக்கப்பட்டிருந்தைத் தொடர்ந்து, பாகிஸ்தானிய விசா அதிகாரியொருவரை வெளியேற்றுவதாக, நேற்று வியாழக்கிழமை (27), இந்தியா அறிவித்துள்ளது.
(“இந்தியாவிலிருந்து பாகிஸ்தானிய அதிகாரி வெளியேற்றம்” தொடர்ந்து வாசிக்க…)
‘ஆவா’ தொடர்பில் பொலிஸார் ஆவல்
யாழ்ப்பாணம், சுன்னாகத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துக்கு நாமே காரணம் என்று தெரிவித்துள்ள “ஆவா” என்ற குழுவினர் பற்றிய விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில், பல்வேறான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் இச்சம்பவத்தின் போது, தாக்கியவர்கள் தொடர்பான தகவல்கள் பெறப்பட்டு வருவதாகவும், யாழ்ப்பாண பிரதி பொலிஸ்மா அதிபர் சன்ஜீவ தர்மரத்ன நேற்றுச் செவ்வாய்க்கிழமை (25) தெரிவித்தார்.
இலங்கை அகதிகள் தாயகம் திரும்புதல் அதிகரித்தால் கப்பல் பயணம் அவர்ககளுக்கு பல நன்மைகளைக் கொடுக்கும்.
மதுரை விமான நிலையத்தில் இருந்து 25.10.16 காலை 9.30 மணிக்கு இலங்கை செல்லும் மிஹின்லங்கா விமானத்தில் 15 பெண்கள்,10 ஆண்கள் என 25பேர் ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகத்தின் அனுசரனையுடன் தாயகம் திரும்பினர். இவர்களில் தாப்பாத்தி முகாமில் இருந்து 2 ஆண்கள், 2 பெண்கள் இவர்கள் 1990 இல் தமிகத்திற்கு சென்றவர்கள், வவுனியாவைச் சோந்தவர்கள்.திருமுர்த்தி நகர்,உருத்திரபுரம் முகாமில் இருந்து 6 பெண்கள்,4 ஆண்கள இவர்கள் கிறிநொச்சி முறிப்பு,உருத்திரபுரத்தைச்சேர்ந்தவர்கள். திருப்பூர் பெருமாள்புரம் முகாமைச்சேர்ந்த 2 பெண்,2 ஆண் இவர்கள் சம்பூர்,முதூரைச் சேர்ந்தவர்கள. இவர்கள் 1990 அகதிகளாக சென்றுள்ளனர்.வெம்பக்கோட்டை முகாமைச் சோந்த 1 பெண் இவர் மாத்தளைக்குச் செல்கிறார், 1990 இல் அகதியாக சென்றவர்.பெருமாள்புரம் முகாமில் இருந்து 1990 வந்த 3 பெண்கள்,1 ஆண் இவர்கள் கிளிநொச்சி செல்கிறார்கள்,மதுரை திருவாதவூர் முகாமில் இருந்த 1 பெண் , ,ஆண் 1 வட்டக்கச்சி கிளிநொச்சி செல்கிறார்கள் இவர்கள் 1990 இல் தமிகத்திற்கு அகதிகளாச் சென்றவர்கள்.
மீரியபெத்த இரண்டாவது ஆண்டு நினைவஞ்சலிக் கூட்டமும் மலையக மக்களின் காணி வீட்டு உரிமை ஆய்வரங்கும் 2016.11.06, 9.30 மணிக்கு, நகரசபை மண்டபம், ஹட்டன்.
மலையக சமூக நடவடிக்கை குழுவினால் மீரியபெத்த பேரவலம் இடம்பெற்ற ஒக்டோபர் 29ஆம் திகதியை மலையக மக்களுக்கான காணி வீட்டு உரிமை தினமாக, பேரவலம் இடம்பெற்று ஒரு மாதத்தின் பின்னர் இடம்பெற்ற நினைவஞ்சலிக் கூட்டத்தில் பிரகடனம் செய்திருந்தது. அந்த வகையில் மலையக சமூக நடவடிக்கை குழுவின் ஏற்பாட்டில் மலையக மக்களின் காணி வீட்டுரிமையை வலியுறுத்தி மீரியபெத்த பேரவலத்தில் உயிரிழந்த உறவுகளுக்கான 2வது ஆண்டு நினைவஞ்சலிக் கூட்டமும் மலையக மக்களின் காணி வீட்டு உரிமை ஆய்வரங்கும் எதிர்வரும் 2016.11.06ஆம் திகதி (ஞாயிறு) காலை 9.30 மணிக்கு ஹட்டன் நகரசபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
தமிழ் ஊடகங்களை “ஆதிக்க சாதியினரின் ஊதுகுழல்” என்று அழைப்பதில் என்ன தவறு?
புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிசக் கட்சி நடத்திய, சாதிய தீண்டாமைக்கு எதிரான 50 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் பொதுக்கூட்டம், யாழ் நகரில், றிம்மர் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (23-10-16) நடைபெற்றது. அந்த நிகழ்வில், இளைஞர் முதல் முதியோர் வரை நூறுக்கும் குறையாத பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். ஆனால், முகநூலில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக கம்பு சுழற்றும் வீரர்கள் யாரையும் அங்கு காணவில்லை.
சில தினங்களுக்கு முன்னர், “யாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்டுகளா? நம்ப முடியவில்லை!” என்று வர்க்கத் திமிருடன் பதிவிட்ட, ஜெரா தம்பி, யோ. கர்ணன் போன்ற ஊடகவியலாளர்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப் பட்டிருந்தும் இருவரும் அங்கு சமூகமளிக்கவில்லை. அவர்களுக்கு என்ன நிர்ப்பந்தமோ? படியளக்கும் முதலாளிக்கு விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டாமா?
அது மட்டுமல்ல, நிகழ்ச்சி தொடர்பாக கட்சி தயாரித்த அறிக்கை, அனைத்து தமிழ்ப் ஊடகங்களுக்கும் அனுப்பப் பட்டிருந்தது. ஆனால், ஒரு பத்திரிகை கூட அதைப் பிரசுரிக்கவில்லை! ஆகையினால், தமிழ் ஊடகங்களை “ஆதிக்க சாதியினரின் ஊதுகுழல்” என்று அழைப்பதில் என்ன தவறு?
(Kalai Marx)
விடுதலைப் புலிகளின் கொடியை ஏற்றுவதற்கு மறுப்பு தெரிவித்தார்
லண்டனில் புலம்பெயர் அமைப்பால் நேற்றைய தினம் ஏற்பாடு செய்திருந்த சந்திப்பில் விடுதலைப் புலிகளின் கொடி ஏந்தப்படுவதற்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மறுப்பு தெரிவித்துள்ளார். கிங்ஸ்டன் நகரம் மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையில் இரட்டை நகர் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக வடக்கு முதலமைச்சர் லண்டன் சென்றிருந்தார். குறித்த உடன்படிக்கை கிங்ஸ்டன் மாநகரத்தில் கடந்த 18ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது.
(“விடுதலைப் புலிகளின் கொடியை ஏற்றுவதற்கு மறுப்பு தெரிவித்தார்” தொடர்ந்து வாசிக்க…)
சட்டம், ஒழுங்கு நடவடிக்கைகள் வன்முறையைத் தூண்டுவதாக அமைந்துவிடக்கூடாது.
நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல்.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டிப்பதுடன், அச்சம்பவம் தொடர்பான எனது மனவருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று நாடாளுமன்றத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
(“சட்டம், ஒழுங்கு நடவடிக்கைகள் வன்முறையைத் தூண்டுவதாக அமைந்துவிடக்கூடாது.” தொடர்ந்து வாசிக்க…)
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலைக்கு நீதிகோரி அமைதியான முறையில் யாழ்,மட்டக்களப்பு,பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய கவன ஈர்ப்பு போராட்டம்…….
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலைக்கு நீதிகோரி அமைதியான முறையில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய கவன ஈர்ப்பு போராட்டம் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான மகஜர் கையளிப்புடன் நிறைவுக்கு வந்துள்ளது. இந்த மகஜரானது யாழ். பல்கலைக்கழக அனைத்துப் பீட மாணவர் ஒன்றியத் தலைவர்களினால் யாழ் அரசாங்க அதிபர் மற்றும் வட மாகாண ஆளுனர் சார்பாக அவரது பிரதிநிதியிடம் கையளிக்கப்பட்டு அவர்கள் ஊடாக ஜனாதிபதி, பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன் போராட்டம் அமைதியான முறையில் முடிவுற்றது. இதனையடுத்து துண்டிக்கப்பட்டிருந்த ஏ9 வீதியூடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியதுடன் யாழ் மாவட்ட செயலக பணிகளும் இயல்பு நிலைக்கு திரும்பியது. இதேவேளை மாணவர்களின் போராட்டத்தில் பொலிஸார் கடமையில் ஈடுபடவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அவா குழு உரிமை கோரியுள்ளது போலீசாரை வெட்டியது !!!!!!
அவா குழு உரிமை கோரியுள்ளது போலீசாரை வெட்டியது! காரணம் ,உயிர் நீத்த பல்கலைக்கழக மாணவர்களை சுட்டுக்கொண்டதன் விளைவே போலீசாரை வெட்டியது .. ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியை காணிக்கை ஆக்குகின்றோம்.அவா குழு அவசரமாக வளர்கின்றது,
சுன்னாகம் சந்தைப் பகுதியில், முகமூடி அணிந்திருந்த நபர்களினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) மதியம், இரு பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்துக்கு ‘ஆவா’ குழு உரிமை கோரியுள்ளது.
(“அவா குழு உரிமை கோரியுள்ளது போலீசாரை வெட்டியது !!!!!!” தொடர்ந்து வாசிக்க…)