பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பலியான சம்பவத்தைக் கண்டித்து, வட மாகாணம் முழுவதும், நாளை செவ்வாய்க்கிழமை (25), ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி(SDPT), தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய ஏழு கட்சிகளால் விடுக்கப்பட்டுள்ள இந்த ஹர்த்தால் அழைப்புக்கு, யாழ். மாவட்ட வர்த்தகர் சங்கமும் ஆதரவு வெளியிட்டு, அக்கட்சிகளுடன் இணைந்துள்ளது.
Category: செய்திகள்
மாணவர்களின் மரணம் வேதனையையும் விசனத்தையும் ஏற்படுத்துகிறது. தமிழர் சமூக ஜனநாயக கட்சி
யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களான சுலக்சன் (24) கஜன் (23) ஆகியோர் பொலிஸ் துப்பாகிச் சூடு மற்றும் அதன்காரணமாக நேர்ந்த விபத்தினால் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துவதாய் அமைந்துள்ளது. இச்சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். இலங்கையின் வரலாற்றின் வெவ்வேறு கால கட்டங்களில் பொலிஸ் அத்துமீறல்கள் பல விபரீதங்களுக்கு வழி வகுத்திருக்கிறது. சட்டம் ஒழுங்கு ஒரு சமூக பாதுகாப்பு என்பதை விட அது ஒரு வரையறையற்ற அதிகாரம் என்ற தோரணை இலங்கையில் காணப்படுகிறது.
பல்கலைக் கழக மாணவர்களின் மரணத்திற்கு துயர் பகிர்வு
பல்கலைக்கழக மாணவர் சுட்டுக்கொலை: ஐந்து பொலிஸார் கைது
கொக்குவில், குளப்பிட்டிச் சந்திப் பகுதியில் வெள்ளிக்கிழமை (21) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்டு பின்னர் அவர்களில் ஒருவர் சுட்டுக்கொலைச் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், ஐந்து பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஐவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பின்னரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இவ்வாறு உயிரிழந்த இந்த இரண்டு பல்கலைக்கழக மாணவர்களுடைய சம்பவம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி மைத்திபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.
யாழ். மாணவர்களின் மரணத்திற்கான உண்மையான காரணம் வெளியானது!
யாழ் – கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் இரு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் கொலையா? அல்லது விபத்தா? என்ற பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த மாணவர்களின் மரணத்திற்கான பிரேதபரிசோதனை அறிக்கை யாழ்.நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் நீதிபதி மாணவர்களிடம் கலந்துரையாடி உள்ளார். இதன்படி, மோட்டார் சைக்கிளை ஓட்டிய மாணவன் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மற்றய மாணவன் விபத்தில் உயிரிழந்துள்ளான் என யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி சதீஸ்கரன் தெரிவித்துள்ளார்.
(“யாழ். மாணவர்களின் மரணத்திற்கான உண்மையான காரணம் வெளியானது!” தொடர்ந்து வாசிக்க…)
சாதியம் மறுப்போம் சமத்துவம் காண்போம்
கிளிநொச்சியில் ஏழை மாணவர்களை அவமானப் படுத்திய பாடசாலை அதிபர்!
கிளிநொச்சி பாரதிபுரத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர், சப்பாத்து (ஷூ) அணிந்து வராத மாணவர்களுக்கு தண்டனை வழங்கும் நோக்கத்துடன், மாணவர்களின் காலணிகளை பாடசாலைக்கு வெளியே வீதியில் குவித்து வைத்து மாணவர்களை அவமானப் படுத்திய சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி மாவட்டம் கல்வியில் பின்தங்கியதும் வறுமை நிலையிலுமுள்ள மாவட்டமாக அடையாளப் படுத்தப் பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் பாரதிபுரம் மிகவும் பின்தங்கிய கிராமமாக காணப் படுகின்றது.
(“கிளிநொச்சியில் ஏழை மாணவர்களை அவமானப் படுத்திய பாடசாலை அதிபர்!” தொடர்ந்து வாசிக்க…)
ஆசிரியர்களின் சேவை உளளீர்ப்பில் குளறுபடிகள் – மக்கள் ஆசிரிய சங்கம்
இலங்கை ஆசிரிய சேவையின் புதிய சேவை பிரமாணக் குறிப்பு 1885/38 இலக்கமும் 2014/10/23 திகதியும் கொண்ட அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது. இப்புதிய சேவை பிரமாணக் குறிப்பு 2008/07/01 திகதி முதல் அமுல்படுத்தப்படுவதுடன் ஏற்கனவே நடைமுறையில் இருந்த 1994 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட ஆசிரிய சேவைப் பிரமாணக் குறிப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது. இப்புதிய சேவை பிரமாணக் குறிப்பே இனிவரும் காலங்களில் இலங்கை ஆசிரிய சேவையில் ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு, சம்பள ஏற்றம் என்பவற்றை தீர்மானிக்கப் போகின்றது. இச்சேவை பிரமாணக் குறிப்பின்படி, ஆசிரிய சேவையில் இருப்போரை உள்ளீர்க்கும் நடவடிக்கைகள் நாடெங்கிலும் உள்ள வலய கல்விப் பணிமனைகளால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இப்புதிய ஆசிரிய சேவைப் பிரமாணக் குறிப்பின்படி ஆசிரியர்களை உள்ளீர்க்கும் நடவடிக்கையின் போது பல்வேறு அநீதிகள் இழைக்கப்படுவதாக மக்கள் ஆசிரிய சங்கத்தின் செயலாளர் திரு. நெல்சன் மோகன்ராஜ் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் புதிய சேவை பிரமாணக் குறிப்பின்படி சேவை உள்ளீர்ப்பின் போது பல ஆசிரியர்களின் பதவியுயர்வுகள் பின்தள்ளப்பட்டுள்ளதாகவும் அடிப்படை சம்பளம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது. புதிய சேவை பிரமாணக் குறிப்பு தொடர்பில் போதிய தெளிவில்லாமல் எழுதுவினைஞர்கள் இவ்வாறு செய்வதாகவும் அவர்களை வழிப்படுத்த வேண்டிய அதிகாரிகள் இது தொடர்பில் அக்கறையின்றி இருப்பதாகவும் குறிப்பிட்டார். அவ்வாறான பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள் தமது சங்கத்திற்கு 071 62 70703, 071 60 70644 எனும் தொலைபேசி இலக்கங்களுக்கோ ptusrilanka@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கோ 52/3, ஆலய வீதி, கஹவத்தை எனும் தபால் முகவரிக்கோ தமது முறைப்பாடுகளை சமர்பித்தால் உரிய நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
பாண்டிபஜாரில் புத்தகக் கடை
பாண்டிபஜாரில் உள்ள கார்ப்பரேஷன் வணிக வளாகத்தின் தரைத் தளத்தில் Boo Books என்றொரு புத்தகக் கடை உள்ளது (கடை எண் 74, B ப்ளாக்). நேற்று முதல் முறையாக இந்தக் கடைக்குச் சென்றேன். நாலடிக்கு ஆறடி பெட்டிக்கடைதான். (வத்திப்பெட்டிக் கடையென்றும் சொல்லலாம்.) ஆனால் அந்தச் சிறு இடத்துக்குள் ஆயிரக்கணக்கான புத்தகங்களை மிகத் திறமையாக அடுக்கியிருக்கிறார் மாற்றுத் திறனாளியான கடைக்கார இளைஞர் தமீமுன் அன்சாரி.
அசாஞ்-இன் இணையத் தொடர்பு நிறுத்தம்: விக்கிலீக்ஸ்
தமது நிறுவுநரான ஜூலியன் அசாஞ்-இன் இணையத் தொடர்பு, ஈக்குவடோர் அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்டுள்ளதாக, நேற்று முன்தினம் திங்கட்கிழமை (17), விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. கோல்ட்மன் சக்ஷ்ஸ் வங்கியில், ஹிலாரி கிளின்டன் ஆற்றிய உரைகள் வெளியிடப்பட்ட சிறிது நேரத்தில், ஜி.எம்.டி நேரப்படி, கடந்த சனிக்கிழமை (15) மாலை, அசாஞ்-இன் இணையத் தொடர்பை, ஈக்குவடோர் நிறுத்தியதாக, தாங்கள் உறுதிப்படுத்துவதாக, விக்கிலீக்ஸ் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.
(“அசாஞ்-இன் இணையத் தொடர்பு நிறுத்தம்: விக்கிலீக்ஸ்” தொடர்ந்து வாசிக்க…)