‘இக்கட்டான சூழ்நிலையில் கைச்சாத்து’ – ஆறுமுகன் தொண்டமான்

தற்போதைய இக்கட்டான சூழ்நிலை காரணமாகவே, இந்த 730 ரூபாய் கொடுப்பனவுக்குச் சம்மதம் தெரிவித்ததாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். இ.தொ.கா தலைமையகத்தில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர், மேலும் தெரிவித்ததாவது,’

(“‘இக்கட்டான சூழ்நிலையில் கைச்சாத்து’ – ஆறுமுகன் தொண்டமான்” தொடர்ந்து வாசிக்க…)

புதிய ஒப்பந்தப்படி அடிப்படைச்சம்பளம் 500 ரூபாய் மட்டுமே

தோட்ட மக்களை வீதிக்கு இறக்கி ஆயிரம் தான் தமது குறிக்கோள் என வாய்ச்சவடால் விட்டவர்கள் கடைசியா ரூ 730 க்கு கையெழுத்து வைத்துவிட்டு இன்று வெளியேறி இருக்கிறார்கள், திட்டமிடப்படாத போராட்டங்களின் விளைவு இப்படித்தான் இருக்கும், இனி எப்படி இவர்கள் மலையக தோட்டத் தொழிலாளர்களின் முன் சென்ற தம்மை உங்கள் தலைவர்கள் என்று சொல்லி திரிவார்கள்? உண்மையில் அடிப்படை சம்பளம் ரூ 500 தான்.

(“புதிய ஒப்பந்தப்படி அடிப்படைச்சம்பளம் 500 ரூபாய் மட்டுமே” தொடர்ந்து வாசிக்க…)

சம்பள உயர்வு திருப்தியில்லை! லோரன்ஸ்

கூட்டு ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள சம்பள உயர்வு திருப்திகரமானதாக இல்லை என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளருமான லோரன்ஸ் தெரிவித்தார். தோட்டத்தொழிலாளர்களுக்கு நாட்சம்பளமாக 730 ரூபா வழங்கும் வகையில் இன்று கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

(“சம்பள உயர்வு திருப்தியில்லை! லோரன்ஸ்” தொடர்ந்து வாசிக்க…)

Hummer-ஐ கொண்டுவந்தார் சித்தார்த்தன்

அரசாங்கத்தின் வரிச் சலுகையின் கீழ் வாகனங்களைப் பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஓர் உறுப்பினர் மாத்திரம், Hummer (ஹம்மர்) ரக மோட்டார் வாகனத்தைக் கொள்வனவு செய்து நாட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனே, இவ்வாறு ஹமர் ரக வாகனத்தைக் கொள்வனவு செய்துள்ளார் என்று, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அமைப்பின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

(Tamil Mirror)

தேசிய கலை இலக்கிய பேரவை யில் 15.10.2016 சனிக்கிழமை நடைபெற்ற.

 

‘சாதியம் மறுப்போம் – சமத்துவம் காண்போம், மனங்களை விரிப்போம் – மனிதராய் எழுவோம்’ என்ற தொனிப்பொருளில் சாதிய தீண்டாமைக்கு எதிரான 1966 ஒக்ரோபர் 21 எழுச்சியின் 50 ஆவது ஆண்டு நினைவாக இடம்பெற்ற ஆய்வரங்கின் காட்சிகள்.

யாழ்ப்பாணத்தின் பிரபல ஆசிரியரின் உயிரைப் பறித்த மதம்

யாழ்ப்பாண மண்ணின் புகழ்பூத்த வணிகக் கல்வி ஆசிரியரான ஜெனதாஸ் பசில் அவர்கள் நேற்றிரவு 15.10.2016 காலமாகி விட்டார். கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அச்சுவேலியில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் பசில் ஆசிரியரும் அவரது மனைவியும் படுகாயமடைந்து சுய நினைவை இழந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

(“யாழ்ப்பாணத்தின் பிரபல ஆசிரியரின் உயிரைப் பறித்த மதம்” தொடர்ந்து வாசிக்க…)

•வோட்டு போட்ட மக்களோ பட்டினியில்- ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்களோ சொகுசு வண்டியில்.

 

தீர்வை வரியின்றி கோடிக் கணக்கான ரூபா பெறுமதியான சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்த 66 பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் வெளிவந்துள்ளது. இந்த சொகுசு வாகன இறக்குமதியால் அரசுக்கு 40 பில்லியன் ரூபா இழப்பு வருடமொன்று ஏற்படுகிறது. இதில் 4 பேர் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அவர்களின் விபரம் வருமாறு,

(“•வோட்டு போட்ட மக்களோ பட்டினியில்- ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்களோ சொகுசு வண்டியில்.” தொடர்ந்து வாசிக்க…)

கூட்டொப்பந்தம் இன்றும் இல்லை?

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில், முதலாளிமார் சம்மேளனத்தினால் புதியதொரு நிபந்தனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கான வேலைநாட்களைக் குறைக்கும் இந்த நிபந்தனையை, தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று கூறிய தொழிற்சங்கங்கள், இன்று வௌ்ளிக்கிழமை (14), கூட்டொப்பந்தம் கைச்சாத்திடப்படுவதென்பது சாத்தியப்படாது எனவும் சுட்டிக்காட்டின.

(“கூட்டொப்பந்தம் இன்றும் இல்லை?” தொடர்ந்து வாசிக்க…)

ஊழல் விசாரணையை ஆரம்பித்தால் பேரவைக்கு வழங்கிவரும் ஆதரவை நிறுத்துவேன் – ஐங்கரநேசன் எச்சரிக்கை.

வடக்கு மாகாணசபை அமைச்சர்களுக்கு எதிராக பரவலாக சுமத்தப்பட்டுள்ள ஊழல் மற்றும் ஒழுக்க ரீதியான குற்றச்சாட்டுகளை விசாரிக்கவென இளைப்பாறிய மேல்நீதிமன்ற நீதிபதி திரு.எஸ்.தியாகேந்திரன் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள மூன்று பேர் கொண்ட விசாரணைக்குழு 03.10.2016 இல் இருந்து செயற்படும் என்று முதலமைச்சர் பகிரங்கமாக பத்திரிகை அறிவித்தல் ஊடாக அறிவித்திருந்தார்.

(“ஊழல் விசாரணையை ஆரம்பித்தால் பேரவைக்கு வழங்கிவரும் ஆதரவை நிறுத்துவேன் – ஐங்கரநேசன் எச்சரிக்கை.” தொடர்ந்து வாசிக்க…)

லண்டனில் நடைபெற்ற ஒரு லட்சம் பவுண்ஸ் தமிழ் திருமண வைபவத்தின் பின்னணியில்…

மகிழ்ச்சி என்பது மனிதனுக்கு மனிதன் வேறுபடும். அவன் வாழ்கின்ற சூழலை அது சார்ந்திருக்கும். ஊரோடு வாழ்ந்து சொந்தங்களோடு மரணித்துப் போவதையே மகிழ்ச்சியாகக் கருதிய ஒரு காலம் இன்று மலையேறிவிட்டது. பண வெறியையும் நுகர்வுக் கலாச்சாரத்தையும் அறிமுகப்படுத்தி மகிழ்ச்சி என்பது மரணிக்கும் நேரத்தில் மனிதனிடமிருக்கும் நுகரும் திறனைக் கொண்டே மதிப்பிடப்படும் இன்றைய நவ-தாராளவாத முதலாளித்துவக் கலாச்சாரம் ஊருக்கு ஏற்றுமதி செயப்பட்ட முறை தனியானது. புலம்பெயர்ந்து தேசியவாதிகளான சந்ததி போரின் ஊடாக போராட்டம் என்ற தலையங்கத்தில் அதனை ஏற்றுமதி செய்தது.

(“லண்டனில் நடைபெற்ற ஒரு லட்சம் பவுண்ஸ் தமிழ் திருமண வைபவத்தின் பின்னணியில்…” தொடர்ந்து வாசிக்க…)