பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இலங்கையை பிறப்பிடமாக கொண்ட கனேடியர்கள் மூவருக்கான 25 வருட சிறைத்தண்டனை 15 வருடமாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த இவர்கள் மூவரும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக வான் தாக்குதலை மேற்கொள்ள விடுதலைப் புலிகளின் இரண்டு உறுப்பினர்களுக்கு ஏவுகணை வாங்குவதற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர். இவர்களை அமெரிக்காவில் வைத்து கைது செய்யப்பட்டதன் பின்னர் 25 வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.
Category: செய்திகள்
பிரித்தானியாவில் 1,00,000 பவுண்ட் பணத்தில் அசத்தல் திருமணம்: சிக்கினார் இலங்கைத் தமிழர்…
பிரித்தானிய நாட்டில் நவீன முறையில் கொள்ளையிட்டு ஆடம்பர திருமணம் செய்த இலங்கை தமிழர் ஒருவருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. இலங்கையை சேர்ந்த கிசோக் தவராஜா (25) என்பவர் பிரித்தானிய தலைநகரான லண்டனில் உள்ள Tesco என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். டெஸ்கோ நிறுவனத்தில் தவராஜா ஒரு ஆண்டுக்கு 16,000 பவுண்ட் (28,71,534 இலங்கை ரூபாய்) ஊதியம் பெற்று வந்துள்ளார். டெஸ்கோ நிறுவனத்தில் பணிபுரிந்த நேரத்தில் கூடுதலாக மற்றொரு தொழிற்சாலையிலும் தவராஜா பணிபுரிந்து வந்துள்ளார்.
பிரபாகரனின் சுவரொட்டியை ஒட்டிய ஜேர்மனி பிரஜை கைது
மருதனார்மடம் பஸ் தரிப்பிடக் கட்டடத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டியை ஒட்டிய குற்றச்சாட்டில், ஜேர்மன் நாட்டிலிருந்து வருகை தந்து, விடுதியொன்றில் தங்கியிருந்த பெண்ணொருவரை, செவ்வாய்க்கிழமை (11) இரவு கைது செய்துள்ளதாக, சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
(“பிரபாகரனின் சுவரொட்டியை ஒட்டிய ஜேர்மனி பிரஜை கைது” தொடர்ந்து வாசிக்க…)
பூமியை அச்சுறுத்தும் சிறுகோள்கள்! பூமியின் முடிவு நெருங்கிவிட்டதாக பீதி கிளப்பும் விஞ்ஞானிகள்.
பூமிக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய வகையில் பல சிறுகோள்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.
சூரிய மண்டலத்தில் செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கிடையே ஆயிரக்கணக்கில் குறுங்கோள்கள் மற்ற கோள்களைப் போலவே சூரியனை சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் சில ஒரு பெரிய மலையளவு கூட இருக்கும். அவை பூமி மீது மோதினால் கற்பனைக்கு எட்டாத அழிவுகள் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மலையக மக்களின் 1000 /= சம்பள உயர்வுப் போராட்டம்
சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் 1000 ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி மாத்தளை மாவட்ட தோட்டத்தொழிலாளர்கள் இன்று காலை மாத்தளை மணிக்கூட்டு கோபுரச்சந்தியில் இருந்து பேரணியை தொடங்கி A9 பாதையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டத்தில் புதிய ஜனநாயகக் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட், கம்யூனிஸ்ட் தொழிலாளர் சங்கம், இலங்கை தொழிலாளர் தொழிற்சங்கம், முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் பிற இடதுசாரி கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.
புலிகளுக்கு போலி கடவுச்சீட்டை தயாரித்து கொடுத்த நபர் தாய்லாந்தில் கைது
விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் இலங்கையில் இருந்து தப்பிச் செல்ல பல வருடங்களாக உதவிய டொக்டர் என அழைக்கப்படும் ஒருவரை தாய்லாந்து பொலிஸார் கைது செய்துள்ளனர். தாய்லாந்து சிறையில் இருக்கும் குற்றச் செயல்களில் மூளையாக செயற்பட்டு வந்த இந்த நபர் ஆயிரக்கணக்கானவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல போலி கடவுச்சீட்டுக்களை தயாரித்து கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த புலனாய்வு விசாரணைகளை அடுத்தே இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
(“புலிகளுக்கு போலி கடவுச்சீட்டை தயாரித்து கொடுத்த நபர் தாய்லாந்தில் கைது” தொடர்ந்து வாசிக்க…)
பயங்கரவாத இயக்கத்துடன் சம்பந்தனுக்கு தொடர்பு, ஆபத்தில் அரசாங்கம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் உதவியுடன் தனது கூட்டணியை இயங்கவிடாமல் செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் உறவு கொண்டிருப்பது அனுதாபம் அளிக்கும் விடயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி இதனை தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இன்று அவர் அனுப்பியுள்ள கடிதமொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
(“பயங்கரவாத இயக்கத்துடன் சம்பந்தனுக்கு தொடர்பு, ஆபத்தில் அரசாங்கம்” தொடர்ந்து வாசிக்க…)
1000/- நாள் சம்பளத்தையும் 25 நாட்கள் வேலையையும் உறுதிப்படுத்து!”
மலையக தோட்டத் தொழிலாளர்களின் வரலாறு காணாத தன்னெழுச்சிப் போராட்டத்தை அனைத்து ஜனநாயக, மனிதாபிமான சக்திகளும் முழுமையாக ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இளைஞர்கள், பெண்கள், முதியோர் அனைவரும் களம் இறங்கியுள்ளனர். கட்சிகள், தொழிற்சங்கங்கள் தலைமைகொடுப்பதற்கு முன்னரே தன்னேழுச்சியாக திரண்டுள்ள மக்களின் உணர்வுகளையும், தயார் நிலையையும் உரிய வகையில் புரிந்துகொள்ள வேண்டிய தருணம் இது. இந்த தன்னம்பிக்கையும், ஓர்மமும், பிரக்ஞையும் சோராத வகையில் தக்கவைப்பதன் மூலம் மட்டுமே இனி வரும் எந்த நீதியான கோரிக்கைகளையும் வென்றெடுக்க முடியும். எனவே எம் மக்களின் போராட்டம் வீண்போகாத வகையில் அவர்களுக்கு ஆதரவு வழங்குமாறு கோருகிறோம் தோழர்களே.
மலையக தொழிலாளர்களிற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டம்
கூட்டமைப்பின் உறுப்பினராக இருப்பது புலிகளின் அமைப்பிற்கு இணையானது – கனேடிய நீதிமன்றம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினராக இருப்பது விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருப்பதற்கு இணையானது என கனேடிய சமஷ்டி நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இருந்து கனடாவுக்கு சென்ற விஜயரத்னம் சீனியன் என்ற இலங்கையர் கனடாவில் அகதி அந்தஸ்து கோரி சமஷ்டி நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனு தொடர்பில் நீதிபதி வழங்கிய தீர்ப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.