Category: செய்திகள்
‘தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்தவும்’
‘தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்துவது தொடர்பில் மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்’ என்று பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘தமிழ்நாட்டில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்துவது குறித்து மத்திய அரசாங்கம் பரிசீலனை செய்ய வேண்டும். அப்போதுதான், ஜெயலலிதாவால் முழுமையாக வைத்தியசாலை சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும். சட்டம் ஒழுங்கின் நிலை மிகவும் மோசமாக உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
(“‘தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்தவும்’” தொடர்ந்து வாசிக்க…)
கியூபா, வியட்னாமில் இராணுவத் தளங்கள் குறித்து ரஷ்யா ஆலோசனை
வியட்னாம், கியூபாவில், தனது இராணுவப் பிரசன்னத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ரஷ்யா கருத்திற் கொள்வதாக, ரஷ்யாவின் பிரதிப் பாதுகாப்பமைச்சர் தெரிவித்துள்ளார். பத்தாண்டுகளுக்கு முன்பு, இரண்டு தளங்களை மூடுவதற்கு எடுத்த முடிவு குறித்து மீளாய்வு செய்வதாக நிகொலாய் பன்கொவ் தெரிவித்துள்ளார். பனிப்போர் காலத்தில், சோவியத் ஒன்றியத்தின் மையங்களாக இரண்டு தளங்களும் விளங்கியிருந்தன.
(“கியூபா, வியட்னாமில் இராணுவத் தளங்கள் குறித்து ரஷ்யா ஆலோசனை” தொடர்ந்து வாசிக்க…)
ஐ.நாவின் அடுத்த செயலாளர் நாயகம் தெரிவானார்
ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்த செயலாளர் நாயகம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். போர்த்துக்கல் நாட்டின் முன்னாள் பிரதமர் என்டனியோ கட்ரெஸ், தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தின் போது, அடுத்த செயலாளர் நாயகமாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போதைய, ஐ.நா. பொதுச் செயலாளரான பான் கி மூனின் பதவிக் காலம் எதிர்வரும் டிசெம்பர் 31 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது. அதன்பின்னர், புதிய செயலாளர் பதவியேற்பார்.
அன்டனி ஜெகநாதனின் ஆசனத்துக்கு நான்குமுனை போட்டி
வட மாகாணசபை உறுப்பினர் அன்டனி ஜெயநாதனின் மறைவால் ஏற்பட்டுள்ள வட மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் பதவிக்கு, நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. வட மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சிகள் நான்கு, இந்தப் போட்டியில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
(“அன்டனி ஜெகநாதனின் ஆசனத்துக்கு நான்குமுனை போட்டி” தொடர்ந்து வாசிக்க…)
சம்பளப் பேச்சுவார்த்தை, முதலாளிமார் சம்மேளனம் தலைமறைவு
(கவிதா சுப்ரமணியம்)
பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பளப் பிரச்சினை தொடர்பாக, தொழிலாளர் சங்கத்துக்கும் தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சுக்கும் இடையில் நேற்றுப் புதன்கிழமை (05) இடம்பெற்ற 11ஆவது பேச்சுவார்த்தையில், எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை.
(“சம்பளப் பேச்சுவார்த்தை, முதலாளிமார் சம்மேளனம் தலைமறைவு” தொடர்ந்து வாசிக்க…)
சீனாவின் வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய ஆராய்ச்சி
சீனா உலகிலேயே மிகப்பெரிய ரேடியோ தொலைநொக்கி மற்றும் உள்வாங்கியை நிறுவி, வேற்று கிரக மனிதர்கள் தொடர்பாக ரகசியமாக பல ஆராட்சிகளை மேற்கொண்டு வருகிறது. சீனா ஒரு விடையத்தில் இறங்கி அது தொடர்பாக ஆராய்கிறார்கள் என்றால் அதனை நாம் வெறுமனவே அசட்டை செய்ய முடியாது. அவர்கள் ஏதோ ஒன்றை குறிவைத்து ரகசியமாக ஆராட்சிகளை மேற்கொண்டு வருவதும். இது தொடர்பாக அவர்களுக்கு ஏதோ தகவல் கிட்டி விட்டதா ? என அச்சம் கொள்ளும் அளவுக்கு நிலமை உள்ளது. உலகில் உள்ள பல வல்லரசு நாடுகள் வேற்று கிரக மனிதர்கள் தொடர்பாக பல ஆரட்சிகளை செய்து வருகிறது. ஆனால் அவர்கள் வேற்றுக் கிரக மனிதர்களை கண்டு பிடித்து அவர்களோடு கை குலுக்க இதனைச் செய்யவில்லை.
(“சீனாவின் வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய ஆராய்ச்சி” தொடர்ந்து வாசிக்க…)
சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு கிளிநொச்சியில் அங்குராா்ப்பணம்
சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அங்குராா்ப்பண நிகழ்வு 02-10-2016 நேற்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி கனகபுரம் நண்பா்கள் விடுதியில் இடம்பெற்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா் முருகேசு சந்திரகுமாா் அவா்களின் வழிநடத்தலில் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ள மேற்படி அமைப்பானது தனது அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகள் தொடா்பில் செயற்பாட்டாளா்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளது.
ஐக்கியப்பட்ட பொது வேலைத்திட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு
(சட்டத்தரணி இ. தம்பையா)
இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் தோட்டத் தொழிலாளர்கள் 18 மாதங்கள் வரை சம்பள உயர்வு இன்றி உழைப்பதற்கும் வாழ்வதற்கும் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். தோட்டத் தொழிலாளர்களின் இன்று பொறுமை இழந்துள்ள நிலையில் பெருந்தோட்டக் கம்பனிகள் உடனடியாக நியாயமான சம்பளத்தை வழங்க முன்வர வேண்டும். தோடத்த தொழிலாளர்களின் போராட்ட வரலாற்றினை கம்பனிகள் அறியாதிருக்க நியாயமில்லை. எனவே, பிரச்சினையை மேலும் தீவிரமாக்கி பாரிய தொழில் உறவு பிரச்சினையாக மாற்றி பெருந்தோட்டக் தொழிற்துறையை அழிக்கும் நடவடிக்கையை விடுத்து நியாயமான சம்பளத்தை பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு கம்பனிகளுக்கும் மைத்திரி-ரணில் அரசாங்கத்திற்கும்; உள்ளது. அப்பொறுப்பை கம்பனிகளும் அரசாங்கமும் நிறைவேற்றாவிடின் விளைவுகளுக்கான பொறுப்பையும் கம்பனிகளும் அரசாங்கமுமே ஏற்றுக் கொள்ள வேண்டும். அதேநேரம் கம்பனிகளின் இன்றைய விடாப்பிடியான நிலையை கருத்திற் கொண்டு கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் சங்கங்கள் மற்றும் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்கள் தமது தனித்தனியான நிலைப்பாடுகளை விட்டு தொழிலாளர்களுக்காக ஐக்கியப்பட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய பொறுப்பை கொண்டுள்ளன.
(“ஐக்கியப்பட்ட பொது வேலைத்திட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு” தொடர்ந்து வாசிக்க…)
சுரேசிடம் இருந்து வெளியேறும் சிவசக்தி ஆனந்தன்!!
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களது கள்ள மௌனம் சந்தேகத்தைத் தருவதாக சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சிங்கள பௌத்த மேலாதிக்கம் தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடமும் இருப்பதாலேயே வடக்கில் தமிழர்கள் மாத்திரம் வாழும் பகுதிகளிலும் பெரும் எடுப்பில் பௌத்த விகாரைகள், புத்தர் சிலைகள் உருவாகுவதாக குறிப்பிட்டுள்ளார்.
(“சுரேசிடம் இருந்து வெளியேறும் சிவசக்தி ஆனந்தன்!!” தொடர்ந்து வாசிக்க…)