அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பாக மக்கள் கருத்தறியும் குழுவினர் நேற்றையதினம் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை பாராளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். அரசியலமைப்பு மறுசீரமைப்பு பற்றி நாடு முழுவதிலும் மக்களிடம் பெற்ற கருத்துக்கள் அடங்கிய இறுதி அறிக்கையை விரைவில் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கவிருப்பதாக அக்குழுவினர் தன்னிடம் உறுதியளித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
Category: செய்திகள்
அரசியலமைப்பு சபை ஏப்ரலில் கூடுகிறது, கட்சித் தலைவர் கூட்டத்தில் இறுதி முடிவு
அரசியலமைப்பு சபை ஏப்ரல் முதல் வாரத்தில் கூட இருப்பதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பான இறுதி முடிவு எதிர்வரும் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடை பெற இருக்கும் கட்சித் தலைவர் கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளதாக அறிய வருகிறது. புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்காக பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை கடந்த வாரம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. சுதந்திரக் கட்சி மற்றும் மாற்று எதிர்க்கட்சி என்பவற்றின் யோசனைகள் அடங்கலாக மேற்படி பிரேரணை திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
(“அரசியலமைப்பு சபை ஏப்ரலில் கூடுகிறது, கட்சித் தலைவர் கூட்டத்தில் இறுதி முடிவு” தொடர்ந்து வாசிக்க…)
உயிருடனோ இறந்தோ அசாட் வெளியேற வேண்டும்
சிரியாவில் இடம்பெற்றுவரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தைகள் வெற்றிபெற வேண்டுமாயின், சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட், உயிருடனோ அல்லது இறந்தோ, பதவியை விட்டு வெளியேற வேண்டுமென, சிரிய எதிரணிகள் வலியுறுத்தியுள்ளன. சிரியப் பேச்சுவார்த்தைகள் நாளை இடம்பெறவுள்ள நிலையில், அங்கு வைத்து, இடைக்கால அரசாங்கம் அல்லது நிர்வாகப் பிரிவொன்றை உருவாக்குவதற்கு, ஐக்கிய நாடுகள் சபை முயன்று வருகின்றது.
(“உயிருடனோ இறந்தோ அசாட் வெளியேற வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)
யாழ். உயர் பாதுகாப்பு வலயத்தில் 700 ஏக்கர் காணி இன்று விடுவிப்பு
வடக்கில் உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்திலிருந்து 700 ஏக்கர் காணி இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மக்களுக்கு மீள கையளிக்கப்படவுள்ளது. இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெல்லிப்பளை மற்றும் கோப்பாய் பிரதேச சபைப் பிரிவுகளில் மேற்படி 700 ஏக்கர் காணிகளை மக்களுக்குக் கையளிப்பதுடன் அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்படவுள்ள 65,000 வீடுகளுக்கான காணிகளையும் பார்வையிடவுள்ளார். 12 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 620 குடும்பங்களுக்கு இன்றைய தினம் ஜனாதிபதியினால் காணிகள் மீள கையளிக்கப்படவுள்ளது.
(“யாழ். உயர் பாதுகாப்பு வலயத்தில் 700 ஏக்கர் காணி இன்று விடுவிப்பு” தொடர்ந்து வாசிக்க…)
எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை கிடைக்கும் வரை உள்ளூராட்சி தேர்தலை உறுதி செய்ய முடியாது
எல்லை நிர்ணயம் குறித்த மீளாய்வுக் குழுவின் இறுதி அறிக்கை கிடைக்கும்வரை உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு சட்டரீதியான இயலுமை இல்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தக் கூடிய வகையிலான வட்டாரங்கள் அமைக்கப்படாத நிலையில் தேர்தலொன்றை நடத்துவது நல்லாட்சி அரசாங்கம் பெற்ற மக்கள் ஆணைக்கு விரோதமானது என்றும் கூறினார்.
மியன்மார் ஜனாதிபதியாவதற்கு சூகிக்கு தடை
மியன்மாரின் ஜனாதிபதியாவதற்கு ஆங் சான் சூகிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய ஜனாதிபதி பெயர் பட்டியலில் சூகியின் முன்னாள் சாரதி ஹ்தின் க்யாவ் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் இதுவரை இருவரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி வேட்பாளரை நாடாளுமன்றம் இந்த வாரம் தெரிவு செய்யும். இராணுவத்தின் அரசியமைப்புச் சட்டத்தின்படி, உயர் அரசியல் பொறுப்பு வகிக்க, தேசிய ஜனநாயக லீக் கட்சித் தலைவர் ஆங் சான் சூகிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
(“மியன்மார் ஜனாதிபதியாவதற்கு சூகிக்கு தடை” தொடர்ந்து வாசிக்க…)
வடக்கு கிழக்கிலிருந்து சிங்கள மக்களை வெளியேற்ற சூழ்ச்சி?
வடக்கு கிழக்கிலிருந்து சிங்கள மக்களை வெளியேற்றுவதற்கு சூழ்ச்சித் திட்டம் தீட்டப்படுவதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் வேறும் தரப்பினரும் இணைந்து இந்த சூழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் சிங்கள மக்களை தங்களது சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றுவதற்கு முயற்சிக்கப் படுவதாகவும் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களை மீளவும் இணைக்க முயற்சிக்கப்படுவதாகவும் வடக்கில் காணப்படும் சிங்கள பாடசாலைகளுக்கு மாகாணசபை எந்தவிதமான உதவிகளையும் வழங்குவதில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
(“வடக்கு கிழக்கிலிருந்து சிங்கள மக்களை வெளியேற்ற சூழ்ச்சி?” தொடர்ந்து வாசிக்க…)
பசில் ராஜபக்சவுக்கு பயணத்தடை?
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள கொழும்பு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. திவிநெகும அபிவிருத்தித் திட்டத்தின் நிதியை மோசடி செய்ததாக பசில் ராஜபக்ஸ உள்ளிட்டவர்கள் மீது குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ, திவிநெகும திட்டத்தின் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக்க மற்றும் திவிநெகும அபிவிருத்தி பணிப்பாளர் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
எதிர்வரும் மாதங்களில் தீர்வுக்கான சாத்தியக் கூறுகள்! – ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்
இலங்கையில் எதிர்வரும் மாதங்களில் தீர்வுக்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார். அடுத்த சில மாதங்கள் இலங்கைக்கு முக்கியமானவையாக இருக்கும். பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், நிலையான அமைதியை நோக்கி இலங்கை சொந்தப் பயணத்தை மேற்கொள்கிறது. அரசியலமைப்பை திருத்துவதற்கும், சுதந்திரமான அமைப்புகளை மீளவும் உருவாக்குவதற்கும்,சுதந்திரமாக கருத்தை வெளிப்படுத்தும், விவாதிக்கும் சூழலை ஏற்படுத்துவதற்கும் முக்கியமான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நல்லிணக்கத்துக்கான சக்திவாய்ந்த அடையாளமாக, தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டதைக் கருத்திக் கொள்ளலாம்.
யோசித ராஜபக்ஸ 24ம் திகதி வரை விளக்க மறியலில்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசித ராஜபக்ஸ எதிர்வரும் 24ம் திகதி வரையில் விளக்க மறியல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீ.எஸ்.என். தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிதி மோசடிகள் மற்றும் நிதிச் சலவை குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் யோசித ராஜபக்ஸ, நிசாந்த ரணதுங்க ரொஹான் வெலிட்ட உள்ளிட்ட ஐந்து பேரை நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் கைது செய்திருந்தனர்.
(“யோசித ராஜபக்ஸ 24ம் திகதி வரை விளக்க மறியலில்!” தொடர்ந்து வாசிக்க…)