ஜெனிவாவில் நாளை அல் ஹுசேன் அறிக்கை!?

ஜெனிவாவில் நடந்து வரும் ஐ.நா மனித உரி்மைகள் பேரவையின் 31ஆவது அமர்வில், சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் நாளை உரையாற்றவுள்ளார். கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், சிறிலங்காவின் அமைச்சரும், ஐ.நாவுக்கான முன்னாள் சிறப்புத் தூதுவருமான மகிந்த சமரசிங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

(“ஜெனிவாவில் நாளை அல் ஹுசேன் அறிக்கை!?” தொடர்ந்து வாசிக்க…)

நாமலின் வங்கிக் கணக்குகள் முடக்கம்?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷவுக்கு சொந்தமானதாக கூறப்படும் நிறுவனங்களின் நான்கு வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேவேளை பணமோசடி தொடர்பான சட்டத்தின் கீழ், நாமல் ராஜபக்‌ஷ உட்பட 8 பேருக்கு எதிராக பொலிஸ் நிதி மோசடி பிரிவினரால் (FCID) இன்று வழக்கொன்றும் கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸின் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இ – மெயிலை கண்டுபிடித்த அய்யாதுரையின் ஆதங்கம்!!!

இ-மெயிலை நான் கண்டுபிடித்தேன், ஆனால் நிற துவேசம் காரணமாக அதற்கான அங்கீகாரம் வேறொருவருக்கு அளிக்கப்படுகிறது என்று, தமிழர் சிவா அய்யாதுரை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க் நகரைச் சேர்ந்த ரேமண்ட் டாம்லின்சன் (74) அண்மையில் உயிரிழந்தார். அவர்தான் இ-மெயிலை கண்டுபிடித்தவர் என்றும், இ – மெயிலின் தந்தை என்றும் அனைத்து ஆங்கில செய்தி மற்றும் சில தமிழ் நிறுவனங்களும் புகழாரம் சூட்டியுள்ளன.

(“இ – மெயிலை கண்டுபிடித்த அய்யாதுரையின் ஆதங்கம்!!!” தொடர்ந்து வாசிக்க…)

ஸ்ரீலங்காவிற்கு இந்திய நிதி உதவி?!

இந்தியாவின் எக்ஸிம் வங்கியின் நிதியுதவியுடன் ஸ்ரீலங்காவில் மேற்கொள்ளவுள்ள மூன்று பாரிய நீர் வழங்கல் திட்டத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு நேற்று புதன்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. குறித்த ஒப்பந்தத்தில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ.அன்ஸார், இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கி தலைவர் யதுவேந்திரா மதூர் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

(“ஸ்ரீலங்காவிற்கு இந்திய நிதி உதவி?!” தொடர்ந்து வாசிக்க…)

பிள்ளையான் தொடர்ந்தும் விளக்கமறியலில்?!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேருக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இவர்கள், நால்வரையும் எதிர்வரும் மார்ச் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராசா உத்தரவிட்டுள்ளார். சிவநேசதுரை சந்திரகாந்தன் [பிள்ளையான்], எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா [பிரதீப் மாஸ்டர்], கனகநாயகம் [கஜன் மாமா] ராணுவ புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல் ஆகியோருக்கே விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

(“பிள்ளையான் தொடர்ந்தும் விளக்கமறியலில்?!” தொடர்ந்து வாசிக்க…)

புலிகளிடம் ராணுவம் கைப்பற்றிய தங்கத்தை தேடும் ரணில்?!

போரின் முடிவில் விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்க நகைகளின் ஒரு பகுதி இன்னமும் சிறிலங்கா இராணுவத்திடம் இருப்பதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று இதுதொடர்பான தகவல்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டார். ”போரின் முடிவில் சிறிலங்கா இராணுவத்தினரால் 150 கிலோ எடையுள்ள தங்கம் கைப்பற்றப்பட்டது. அதில் 131 மில்லியன் ரூபா பெறுமதியான 30 கிலோ (31,150.34 கிராம்) தங்கம் மத்திய வங்கியிடம் கையளிக்கப்பட்டது. 2010 செப்ரெம்பருக்கும், 2012 ஜனவரிக்கும் இடைப்பட்ட காலத்தில், 28 சந்தர்ப்பங்களில் இவை ஒப்படைக்கப்பட்டன.

(“புலிகளிடம் ராணுவம் கைப்பற்றிய தங்கத்தை தேடும் ரணில்?!” தொடர்ந்து வாசிக்க…)

அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்கர் காலமானார்

அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்கர் வணக்கத்துக்குரிய கலகம ஸ்ரீ அத்ததாஸி தேரோ, கண்டி வைத்தியசாலையில் சற்று முன்னர் காலமானார். விஹாரையிலுள்ள குளியலறையில் விழுந்த தேரர், கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழர்கள் நடத்தும் தமிழ் வதை முகாம்கள்

 

மதுரை கூத்தியார்குண்டு அருகில் உள்ள உச்சபட்டி அகதிகள் முகாமில் கடந்த 25 ஆண்டுகளாக மனிதர்கள் வதை செய்யப்படுகிறார்கள். அரசாங்கம் இவர்களை தங்களின் கட்டுக்குள் வைத்திருக்க கையாளும் வழிகள் அனைத்துமே மனித உரிமை மீறல் தான். முகாமில் இருப்பவர்களை CHECKING செய்கிறோம், ROLL CALL எடுக்கிறோம் என்கிற பெயரில் இங்கே வசிக்கும் 1600க்கும் மேற்பட்டவர்களை நினைத்த நேரத்தில் அங்குள்ள மைதானத்தில் ஒன்று கூடச் சொல்வது இந்த வழக்கங்களில் ஒன்று, அதற்கு ஒரு உறுதியான நாள், நேரம் கிடையாது.

(“தமிழர்கள் நடத்தும் தமிழ் வதை முகாம்கள்” தொடர்ந்து வாசிக்க…)

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 158 தமிழர்களே சிறையில் உள்ளனர்!

இலங்கை முழுவதிலும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ், 158 தமிழ் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். போர் நடைபெற்ற காலத்தில் காணாமல் போனோர் மற்றும் கைது செய்யப்பட்டோர் தொடர்பான விவாதமொன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதனடிப்படையில், 103 கைதிகளுக்கு எதிராக மேல் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, விசாரணைகளும் நடைபெற்று வருகின்றன என அவர் தெரிவித்தார்.

(“பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 158 தமிழர்களே சிறையில் உள்ளனர்!” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு முதல்வரின் கிழக்கு விஜயம்?

வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவருமான நீதியரசர் சீ.வி. விக்கினேஸ்வரன் எதிர்வரும் வாரத்தில் மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளதாக அறியமுடிகிறது. தமிழ் மக்கள் பேரவையின் செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே சீ.வி. விக்கினேஸ்வரன் மட்டக்களப்புப்பு வருகை தரவுள்ளார். கடந்த மாதத்தில் தமிழ் மக்கள் பேரவையின் புதிய அரசியலமைப்பு யோசனைகள் தொடர்பில் மக்களுக்குத் தெளிவூட்டும் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கலந்துரையாடலுக்கு விக்னேஸ்வரன் வருகை தருவார் என்ற எதிர்பார்ப்பு அன்றைய தினம் மக்களுக்கு நிறைவேறாது போனது அந்த வகையில் எதிர்வரும் வாரங்களில் மட்டக்களப்பில் நடைபெறவுள்ள தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் வடமாகாகண முதலமைச்சர் வருகை தருவார் என்று தெரிகிறது.